மூர் மார்க்கெட்:
இப்போது சென்ட்ரல் ரயில் நிலையம் இருக்கும் இடத்தையொட்டி, ஒரு காலத்தில் ஒரு வணிக வளாகம் சீரும், சிறப்புமாக செயல்பட்டு வந்தது. 1898ல் ஜார்ஜ் மூர் என்கிற வெள்ளைக்காரத்துரை அடிக்கல் நாட்டி உருவாக்கப்பட்ட வளாகம் இது. பிராட்வே சாலையில் வணிகர்களுக்கு இடம் போதவில்லை என்பதால் இது உருவாக்கப்பட்டது.
ஆரம்பத்தில் இறைச்சிக் கடை, உணவுப் பொருட்களுக்கான அங்காடிகள், பூக்கடைகள் என்றிருந்த மார்க்கெட் பிற்பாடு பரிணாமம் பெற்று பழங்காலப் பொருட்கள், கலைப்பொருட்கள், புத்தகங்கள், செல்லப் பிராணிகள் என்று பன்முகத்தன்மை பெற்றது. இங்கு ஒரு பொருள் கிடைக்காவிட்டால், சென்னையில் வேறெங்குமே கிடைக்காது என்பது மூர் மார்க்கெட்டின் சிறப்பு.
1985ம் ஆண்டு ஏற்பட்ட தீ விபத்தால் இந்த வளாகம் முற்றிலுமாக சீர்குலைந்தது. பின்னர் அதே இடத்தில் சென்னைப் புறநகர் ரயில்வே முனையமும், ரயில் முன்பதிவுக்கான நிலையமும் அமைந்தன.
1986ல் மூர் மார்க்கெட் இருந்த இடத்துக்கு மேற்கே ‘லில்லி பாண்ட் காம்ப்ளக்ஸ்’ என்கிற பெயரில் மூர் மார்க்கெட் வியாபாரிகளுக்கு ஒரு வளாகத்தை அரசு அமைத்துக் கொடுத்தது. பழம்பெருமையின் மிஞ்சிய நினைவுகளாக, சோகையான விளக்கொளியில், கடனுக்கே என்று இயங்கிக் கொண்டிருக்கிறது இப்போதைய மூர் மார்க்கெட்.
--ஒரு நாளிதழில் இருந்து
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக