1957-ஆம் ஆண்டு சோவியத் யூனியன் 'ஸ்புட்னிக்' என்ற முதல் செயர்க்கைகோளை விண்வெளிக்கு அனுப்பியது .அமெரிக்கா அடுத்த ஆண்டு ARPA (Advance Research Projects Agency ) என்ற அமைப்பை தன் ராணுவத்தின் செயல் பாடுகளுக்காக உருவாக்கியது.உலகின் பல பகுதிகளில் இருக்கும் கணினிகளை இணைக்க உருவாக்கிய அற்பநெட் என்ற வலைப்பின்னல் தான் இன்று நாம் உபயோக்கிக்கும் இணையம்
பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
சனி, 29 செப்டம்பர், 2012
சிலிண்டர்
சிலிண்டர் பத்தி நம்ம எல்லாருக்குமே ஓரளவுக்கு தெரியும் , ஆனா நமக்கு தெரியாத சில முக்கியமான ,நாம கவனிக்க வேண்டிய விஷயம் இருக்கு..இத பத்தி ஒரு மாத நாளிதழ்ல படிச்சப்போ அடடா இதனை நாள் நாம கவனிக்கலையேனு தோணிச்சு , என்ன மாதிரி தெரியாதவங்க தெரிஞ்சிக்கணும்னு இத போஸ்ட் பண்றேன் ..
சிலிண்டர்ல அந்த சிலிண்டர் எப்போ காலாவதி(expire) ஆகும்னு ,இருக்கும் .இதை நாம கவனிச்சு இருக்கோமா ?
அதாவது சிலிண்டர் கைப்பிடி வளையத்துக்கு கீழ சிலிண்டர்-ஐ இணைக்குற கம்பி இருக்குல ,அதுல அது எப்போ கலாவதி (expire) ஆகும்னு இருக்கும்.மூணு மூணு மாசம் இடைவெளியில் நாலா பிரிச்சுருக்காங்க. அதாவது ஜனவரி - மார்ச்
-> A ,ஏப்ரல்-ஜூன் -> B ,ஜூலை-செப்டெம்பர் ->C ,அக்டோபர் - டிசம்பர் -> D . அதன் பக்கத்துல எந்த வருடம்னும் குறிப்பிட்டு இருப்பாங்க. உதாரணம் : D -14 அப்படினா ,2014 டிசம்பர் வரை அந்த சிலிண்டர்ருக்கு உத்தரவாதம்னு அர்த்தம்.ஒரு வேளை காலாவதி (expire ) ஆனா சிலிண்டர் நமக்கு குடுத்தா நாமா அவங்ககிட்ட சொல்லி மாதிக்கலாமாம்.
அப்பறம் இப்ப கூட சமீபத்துல நியூஸ் -ல சொன்னாங்க , பச்சை கலர் டியூப் ஆபத்தானது ,ஆரஞ்சு கலர் டியூப் உபயோகபடுத்துங்கனு அதையும் கொஞ்சம் கடைபிடிப்போமே.
என்ன சிலிண்டர் பத்தி செய்தி உபயோகமா இருந்ததா?
---------------நன்றி மாதஇதழ் .....
வியாழன், 27 செப்டம்பர், 2012
சுற்றுலா
உலகத்துல தொழில் முறை சுற்றுலாவை முதல் முதலா அறிமுகப்படுத்தியவர் யாருன்னு தெரியுமா?இங்கிலாந்தை சேர்ந்த 'தாமஸ் குக்' என்பவர்தானாம். இவரை தான் சுற்றுலாவின் தந்தைனு சொல்றாங்க.
இவர்தான் கி.பி 1841 ல் லண்டன்ல நடந்த உலக பொருட்காட்சியை பாக்குறதுக்கு ஒன்றரை
லச்சம் பொதுமக்களை அழச்சுக்கிட்டுபோனாராம் .இவர்தான் முதல் முதலா பொதுமக்களை திரட்டி இன்ப சுற்றுலாவுக்குஅழச்சுக்கிட்டுபோனாராம் .
லச்சம் பொதுமக்களை அழச்சுக்கிட்டுபோனாராம் .இவர்தான் முதல் முதலா பொதுமக்களை திரட்டி இன்ப சுற்றுலாவுக்குஅழச்சுக்கிட்டுபோனாராம் .
இதுதான் காலத்துக்கு தகுந்தமாதிரி பொருளாதார வளர்சிக்கு தகுந்த மாதிரி,வசதிக்கு தகுந்த மாதிரி இன்னைக்கு வளர்ந்து நிக்குது.இன்னைக்கு சுற்றுலாவுக்கு காரணமான 'தாமஸ் குக்' ஆரம்பிச்ச நிறுவனம் உலகத்துல மிக பெரிய சுற்றுலா ஏற்பாடு செஞ்சு தர நிறுவனமா வளர்ந்து இருக்காம்.
செவ்வாய், 25 செப்டம்பர், 2012
தண்ணீர்
ஒரு மனுஷனுக்கு தண்ணீர் எவ்ளோ முக்கியம்-னு நமக்கு நல்லாவே தெரியும்.தினம் தினம் தண்ணீரின் முக்கியத்துவத்தை பத்தி நாம கேள்விப்ட்டுகிட்டு தான் இருக்கோம் .ஒரு நாளைக்கு 8 லிட்டர் தண்ணீர் குடிக்கணும் .இது நமக்கும் தெரியும் .ஆனா இதை நாம கடைபிடிக்குறோமா?அனேக பதில் இல்லை-னு தான் வரும்.நாம எவ்ளோ தண்ணீர் குடிக்கிறோமோ அவ்வளவு உடம்புக்கு நல்லது. தண்ணீர் குடிக்கிறதால நாம
எப்படி எல்லாம் ஆரோக்கியமா இருக்க முடியும்னு பாருங்க.
- மாரடைப்பு ஏற்ப்றத தடுக்க கூட உதவுது.
- சாப்பாட்டின் அளவை கம்மி பண்ணிட்டு தண்ணீர் குடிக்குற அளவை அதிக படுத்தினோம்னா உடல் எடையை கம்மி பண்ணலாம்.
- முகம் மற்றும் நம்ம உடம்பு பளபளப்பா இருக்கும்.
- சிறுநீரக கல் இருக்குறவங்களுக்கு அந்த கல் வெளியேறும்.
- நம்ம உடம்புல சராசரி வெப்ப நிலையை தொடர வைக்கும்.
- கோவத்தை கட்டுபடுத்தும்.
- மனசுல தெளிவான சிந்தனை வரும் .
- ராத்திரி நேரதுல தூக்கம் வராதவங்க தண்ணீர் குடிச்சிட்டு படுத்தா நிம்மதியா தூங்கலாம்.
- தலைவலி ,மூட்டுவலி,நெஞ்செரிச்சல் ,உடல் சோர்வு இது எல்லாம் உடம்புல தண்ணியின் அளவு கம்மியாகுறதால வர்றதுதான்.இந்த மாற்றி பிரச்சனை இருக்குறவங்க குறைஞ்சது 3 லிட்டர் தண்ணியாவது ஒருநாளைக்கு குடிக்கணும்.
அனிதா .....
இன்னம் 20 நிமிஷம் இருக்கு ..ஓகே இந்த கேள்விக்கு இந்த பாயிண்ட்ஸ் எல்லாம் முக்கியம்..இந்த கேள்விக்கு இந்த இந்த பாயிண்ட்ஸ் முக்கியம்...ஓகே..இந்த கேள்விக்கு இந்த எக்ஸ்சாம்பிள் ரொம்ப முக்கியம்..சரி சரி போதும் ரிலாக்ஸ்-ஆ இருக்கணும். ..நீ நல்லா எழுதிடுவ..கவலைபடாத ...என்று மனதுக்கும் சொல்லி கொண்டிய காலேஜ்க்குள் நுழைந்தாள் அனிதா..
ஹாய் ..ஹாய் அனிதா...எப்படி ப்ரிப்பர் பண்ணி இருக்க?
ம்..நல்லா பண்ணி இருக்கேன் ..கண்டிப்பா நல்லா எழுதிடலாம்..ஆமா இந்த கேள்விக்கு இத பத்தி இவ்ளோ எழுதினா போதும் தானே
அனிதாவின் கண்கள் அலைபாய்ந்தது ...அவள் கண்கள் சந்தோஷை தேடின..ஒரு முனையில் நண்பர் களுடன் அனிதா இருக்க மறு முனையில் நண்பர்களுடன் சந்தோஷ்..அனிதா காலேஜ்குள் நுழைந்ததில் இருந் து சந்தோஷின் கண்கள் அனிதாவை விட்டு விலகவில்லை..
அனிதா..இவ்ளோ நேரம் தண்ணில நின்னா ஜுரம் வரும் சீக்கிரம் குளி..நேரம் ஆச்சு பாரு என்று தீபாவின் குரல்..நான்தான் குட் கேர்ள் இன்னைக்கு என்று மழலை குரலில் லதா ......
சந்தோஷ்...நேரம் ஆச்சு..எப்போ கிளம்பறது ..ஆபீஸ்க்கு நேரம் ஆகுது பாரு..சீக்கிரம் சீக்கிரம் என்று வினோத்தின் குரல்...
சந்தோஷ் அவசரமாக கண் விழித்தான்..சந்தோஷ் நேரம் ஆச்சு எந்திரிங்க என்று தன்மனைவி நித்யா மறுபடியும் சொல்ல..குட் மார்னிங் அப்பா.. நான் குட் கேர்ள் ..நீ தான் பேட் பாய் இன்னைக்கு பாத்தியா நா தான் முதல்ல குளிச்சேன் என்று சந்தோஷின் செல்ல மகள் அனிதா சொல்ல..
குட் மார்னிங் டா ஹனி செல்லம்...தோ அப்பா கிளம்பிடறேன் என்று சொல்லி கொண்டே அவசரமாக குளித்து கிளம்பினான்..ஆனால் அவன் நினைவு முழுவதும் அனிதாவை பற்றியே இருந்தது...
அனிதாவிடம் அனிதாவிற்கு பிடித்ததும் அவள் நண்பர்களுக்கு அனிதாவிடம் பிடித்ததும் இந்த தன்னம்பிக்கை தான்..
ஹாய் ..ஹாய் அனிதா...எப்படி ப்ரிப்பர் பண்ணி இருக்க?
ம்..நல்லா பண்ணி இருக்கேன் ..கண்டிப்பா நல்லா எழுதிடலாம்..ஆமா இந்த கேள்விக்கு இத பத்தி இவ்ளோ
-என்று படித்ததை பகிர்ந்து கொண்டார்கள்..
ஓகே ஓகே இன்னம் 10 நிமிஷம் இருக்கு,ரிலாக்ஸ்-ஆ இருப்போம் என்றாள் அனிதா..
அனிதாவின் கண்கள் அலைபாய்ந்தது ...அவள் கண்கள் சந்தோஷை தேடின..ஒரு முனையில் நண்பர்
ஏன்டா வினோத் நீதான் எப்படியும் இன்னிக்குஎக்ஸாம்-இல் பாஸ் பண்ண போறது இல்ல இல்ல அப்பறம் ஏன் வேஸ்ட்-ஆ வந்து எழுதுற என்று சந்தோஷ் கேலி செய்ய ..ஏன்டா அப்படி சொல்ற பாரு பிட்டுலாம் கூட சரியா-ஆ வச்சுஇருக்கேன் இந்த எக்ஸாம்-கு என்றான் வினோத். அதான் உன் கவனம் எல்லாம் சிகப்பு சுடிதார் மேல இருக்கே,பாத்துடா பிட்ட பாக்கா ம சுடிதார் பாத்துகிட்டே எழுதி டாத
என்றான் சந்தோஷ்.
கண்டுபிடிச்சு டீங்களா அதானே என்னடா உங்களுக் கு மூக்குல வேர்க்கலையேனு
கண்டுபிடிச்சு
பாத்தேன் என்றான்,வினோத். டேய் இது தீபா தானே அப்போ மோனமாசம் எல்லாம் நம்ம ஜூனியர் ரம்யாவை பாத்துகிட்டு இருந்தியே என்றான் சந்தோஷ்.
அது போனமாசம் என்றான் வினோத், அப்போ கெமிஸ்ட்ரி டிபார்ட்மென் ட் அம்மு ?என்றான் சுந்தர் ,அது அதுக்கு முன்னாடி மாசம் என் றான் வினோத் .
து....என்று கோரஸ் ஆகா துப்பி வினோத்தை கேலி செய்தனர் நண்பர் கள்.
ஏன்டா துப்புறீங்க ? பின்ன இந் த சந்தோஷ் மாதிரி இருக்க சொல்றீ ங்களா ? ஏன்டா சந்தோஷ் 4 வருஷமா நீ அனிதாவ பாக்க அவ உன்ன பாக்க, அவ உன்ன பாக்க நீ அவள பாக்க நாங்க உங்க ரெண்டுபேரயும் பாக்க..இப்படியே போகுதே இதுக்கு ஒரு முடிவே கிடையாதா ?? என்றான் வினோத் ..
ஏன்டா இப்படி ..பாத்துகிட்டே தான் இருக்கபோரீங்களா நேரா 60 -ஆம் கல்யாணம்னு
சொல்லு .கடைசி வருஷம் இன்னம் ஒரே ஒரு செமஸ்டர் தான் இருக்கு இந்த வருஷமாவது பேசுடா.. பேசி னா தான்டா முடிவு தெரியும் என்றனர் , இப்படியே உசுபேத்தி உசுபேத்தி உடம்ப ரணகளம் பண்ணுங்கடா என்றான் சந்தோஷ்.
தன் பள்ளி காலத்தில் இருந்து தோழியான லதாவை பார்த்ததும் என்ன லதா நல்லா படிச்சு இருக்கியா ?என்றான் சந்தோஷ்..எங்க சந்தோஷ் எனக்கு இந்த எக்ஸாம் முடிஞ்சததும் கல்யாணம் பண்ணி குடுத்துடணும் னு அப்பா ஒரே பிடிவாதமா இருக்கார்..என்னால சரியா படிக்க முடியலை.. கொஞ்சம் பயமா இருக்கு என்றால் லதா. பொய் சொல்லாத பயத்துல படிக்கமுடியாம இல்ல சந்தோஷத்துல படிக்கமுடியாம அதுதானே உண்மை என்று சந்தோஷ் கேலி செய்ய ,போ சந்தோஷ் எப்போ பாரு உனக்கு கிண்டல் தான் என்றாள் லதா.
அனிதா..இவ்ளோ நேரம் தண்ணில நின்னா ஜுரம் வரும் சீக்கிரம் குளி..நேரம் ஆச்சு பாரு என்று தீபாவின் குரல்..நான்தான் குட் கேர்ள் இன்னைக்கு என்று மழலை குரலில் லதா ......
சந்தோஷ்...நேரம் ஆச்சு..எப்போ கிளம்பறது ..ஆபீஸ்க்கு நேரம் ஆகுது பாரு..சீக்கிரம் சீக்கிரம் என்று வினோத்தின் குரல்...
சந்தோஷ் அவசரமாக கண் விழித்தான்..சந்தோஷ் நேரம் ஆச்சு எந்திரிங்க என்று தன்மனைவி நித்யா மறுபடியும் சொல்ல..குட் மார்னிங் அப்பா..
குட் மார்னிங் டா ஹனி செல்லம்...தோ அப்பா கிளம்பிடறேன் என்று சொல்லி கொண்டே அவசரமாக குளித்து கிளம்பினான்..ஆனால் அவன் நினைவு முழுவதும் அனிதாவை பற்றியே இருந்தது...
பின்னாளில் அனிதாவும் சந்தோஷும் ஒரே கம்பெனி-இல் வேலை செய்தனர்.அனிதா அவளது பெற்றோர்களிடம் சந்தோஷை பற்றி கூறினாள்..உனக்கு இன்னம் கொஞ்ச நாள் டைம் தரோம் .நல்ல யோசி..சந்தோஷ் நல்ல பையன் தான் இல்லைன்னு சொல்லல..இருந்தாலும் ரெண்டு பேரும் கடைசி வரை இப்படியே இருப்பீங்களா ..நல்ல யோசிங்க.."என்றனர் அனிதாவின் பெற்றோர்கள்..
சந்தோஷின் வீட்டில் சந்தோஷின் விருப்பபடி தான் அனைத்தும் நடக்கும்..
அப்பாகிட்ட நாம இன்னம் உறுதியா சொல்வோம் சந்தோஷ் என்று அனிதா கூறினாள்..
கண்டிப்பா ...இந்த வீக் எண்டு நான் வரேன் உங்க வீட்டுக்கு என்றான் சந்தோஷ்..
ஆனால் அதற்குள் எதிர் பாராத ஒரு விபத்து ,அனிதா சுய நினைவின்றி மருத்துவமனையில்...
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இருந்த அனிதாவை பார்க்க சந்தோஷ் ஓடி னான் மருத்தவமனைக்கு..
"டாக்டர் அனிதா எப்படி இருக்கா டாக்டர் சொல்லுங்க ப்ளீஸ் "..
"ஓ !! அந்த ஆக்சிடென்ட் கேஸ் ஆ பா"..
"ஆமா டாக்டர்"...
நிலைமை கொஞ்சம் கிரிடிகாலா தான் பா இருக்கு .நெறையா பிளட் லாஸ் ஆகிருக்கு.சுய நினவு இல்லாம தான் இருக்காங்க.எங்களால முடிஞ்சத முயற்சி பண்றோம் .கடவுள வேண்டிகோங்க "...
"நா பாக்கலாமா டாக்டர் "..
"தாராளமா ...பட் ரொம்ப டிஸ்ரப் பண்ணாதீங்க"...
சந்தோஷ் அனிதாவின் அருகில் ,உடல் முழுவதும் ஏக பட்ட டியூப்கள் பொருத்தப்பட்ட அனிதாவை பார்க்கவே சந்தோஷ் கலங்கினான்...
அனிதாவின் பெற்றோர்கள் அங்கு வந்தனர்.
"சந்தோஷ் ...சந்தோஷ் என்னப்பா ஆச்சு அனிதாவுக்கு ...எப்படி பா இருக்கா .."
"அனிதாவுக்கு ஒன்னும் இல்ல ஆன்டி ,அங்கிள் அனிதா நல்லா ஆகிடுவா ...".
அனிதாவின் அம்மா ஐ.சி.யு உள்ளே ஓடினார்.
"ஐயோ அனிதா !! அம்மா வந்துருகேன்மா ,என்ன பாரு ,ஐயோ உன்ன இந்த நிலைமையிலையா பாக்கணும். எல்லோரும் நல்ல இருக்கனும்னு நினைப்பியே ..உனக்கு இப்படியா".கதறினாள் ...
அனிதாவை இந்த நிலைமையில் பார்க்க விருப்பம் இல்லாமல் அனிதாவின் தந்தை வெளியே சென்றார் ...கண்களில் நீர் பொங்க...அவரை பின் தொடர்தான் சந்தோஷ்...
"அங்கிள் இல்ல அங்கிள் ..அனிதாவுக்கு ஒன்னும் இல்ல குணம் ஆகிடுவா .அழாதீங்க அங்கிள்" என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டான்..
உள்ளே இருந்து அனிதாவின் தாய் ,சந்தோஷ் தம்பி ,சந்தோஷ் தம்பி அனிதா உன் பேர் சொல்றாப்பா என்று வெளியே ஓடிவர ...சந்தோஷ் உள்ளே ஓடினான் ..
அனிதாவின் உதடுகள் சந்தோஷின் பெயரை முனுமுனுத்தது ...
"அனி ! அனி ! நா சந்தோஷ் ...இங்க தான் மா இருக்கேன்..உனக்கு ஒன்னும் இல்ல ..உனக்கு எல்லாம் சரியாகிடும்.."
"சந்தோதோதோதோதோதோஷ்.."
"பாரு ,உன் அம்மா ,அப்பா வந்துருக்காங்க ...டாக்டர் உனக்கு குனமாகிடும்னு சொல்லி இருக்கார்.."
"சந்தோதோதோதோதோதோஷ்...."
"இதோ ,நான் இங்க தான் உன் பக்கத்துல தான் இருக்கேன் அனி ..." என்று அனிதாவின் கைகளை பற்றினான் ...
அனிதாவின் கண்கள் மெல்ல திறந்தன ...
"சந்தோதோதோஷ் ...அழாத சந்தோதோஷ் ...எனக்கு ஒன்னும் இல்லலல ...நான்ன்ன்ன் நல்லாலாலாலா ஆகிடுவேன் ..நாநாநாநா உன் கூட வாழனும் சந்தோதோதோதோஷ் ...நாநாநாநா சாககூடாது ...எனக்கு நீ வேணும்..."
"அனி ..கண்டிப்பா நடக்கும் அனி...நாம சந்தோஷமா வாழுவோம் ..."
"சந்தோதோதோதோதோஷ் ....எனக்கு பயமாமாமாமாமா இருக்கு ...எனக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு சந்தோதோதோதோஷ் ..உன் அப்பா அம்மா ,என் அப்பா அம்மா எல்லார் கூடவும் ,நம்ம நினைச்சமாதிரி சந்தோஷமா நாம வாழனும்ம்ம்ம்ம்ம் ..."
"கண்டிப்பா அனி ...நீ எந்திரிச்சு வருவ அனி ...நாம நினச்சது நடக்கும் அனி ...."
"சந்தோதோதோதோதோதோதோஷ் ....."
அனிதாவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை பெற்றன..அவளது கைகள் சந்தோஷின் கைகளில் இருந்து விடுபட்டன..அனிதாவின் இதயம் துடிக்க மறுத்தது ....
"அனி..................." அலறினான் சந்தோஷ் .....அனிதாவின் தாயும் தந்தையும் சேர்ந்து .......
"டாக்டர் ...டாக்டர் ...எதாவது பண்ணுங்க...இப்போ என்கிட்ட பேசினா டாக்டர் ..ப்ளீஸ் ஏதாவது செயுங்க..அவளுக்கு ஒன்னும் இருக்காது ..."
டாக்டர் நாடி துடிப்பையும் ,இதய துடிப்பையும் பரிசோதித்தார் ...
"ஐயம் சாரி ..மிஸ்டர் . சந்தோஷ் .."
"இல்ல அங்கிள் ...இப்போ பேசினா அங்கிள் என்கிட்ட..என்னோட வாழனும்னு சொன்னா ஆன்டி..
அழாதீங்க ...நம்ம அனிதா எங்கயும் போகல .. இப்போ எந்திரிப்பா பாருங்க ...."
"சந்தோஷ் ....மனச தேதிக்கப்பா ...நம்மள விட்டு போயிட்டாப்பா ..."
"அங்கிள் ..இல்ல அங்கிள்....இல்ல அங்கிள்...."
சந்தோஷ் வெளியே வந்தான் ....அவன் மனம் மட்டும் நம்ப மறுத்தது ....உண்மையை உணர்ந்து அழுது புலம்பினான்...
கிட்டதட்ட ஒரு ஜடமாக மாறிய சந்தோஷை ஒரு வருடத்துக்கு பின் பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.சந்தோஷின் நண்பர்கள் மூலமாக சந்தோஷிற்கு வேலையும் ஏற்பாடு செய்தனர் .மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மாறினான் சந்தோஷ்.
5 வருடங்களுக்கு கழித்து மிகுந்த சிரமத்திற்கு பின் சந்தோஷை திருமணதிற்க்கு சம்மதிக்க வைத் தனர்.
நித்யாவிடம் அனிதாவை பற்றி அனைத்தையும் கூறியே திருமணம் செய்தான் சந்தோஷ்.
"என்னால என் அனிதாவை மறக்க முடியாது ...அவ இன்னம் என் மனசுலையே தான் இருக்கா..உனக்கு இதனால ஏதும்...."
"நா மறக்க சொல்லலையே ...எனக்கு உங்கமேல வருத்தம் இல்ல..உங்க வலி எனக்கு புரியுது ." நித்யாவின் பளிச் பதில் நித்யாவின் மேல் அன்பை ஏற்படுத்தியது...
தன் மகளுக்கு அனிதா என்று பெயர் வைக்க ,கூறியதும் நித்யாதான்...அனிதாகிட்ட இருந்து பிரிச்ச இந்த கடவுள் என்னை அனாதையா விடாம எனக்கு உன்னை குடுத்துருக்கார்,என்று
பழையநினைவுகளில்மூழ்கினான்,கண்கள் சாலையில் இருக்க,கைகள் ஸ்ட்ரியரிங் இல் இருக்க கால்கள் ஆக்சிலேட்டர்-ல் இருக்க சந்தோஷின் மனம் மட்டும் அனிதாவின் நினைவுகளில் .......
சந்தோஷின் கண்களில் கண்ணீர்.....அனி..லவ் யு அனி ,என்று மனதுக்குள் சொல்ல..ஒரு அழகிய கை தன்னை தொடுவதை உணர்ந்து கால்கள் பிரேக் -ஐ அழுத்த.... லவ் யு அப்பா .பை பை ..என்று சந்தோஷின் கன்னத்தில் முத்தமிட்டு பள்ளிக்குள் ஓடினாள் சந்தோஷின் மகள் அனிதா...கலங்கிய கண்களுடன் தன் மகளை பார்த்துக் கொண்டே இருந்தான் சந்தோஷ்.
சந்தோஷின் வீட்டில் சந்தோஷின் விருப்பபடி தான் அனைத்தும் நடக்கும்..
அப்பாகிட்ட நாம இன்னம் உறுதியா சொல்வோம் சந்தோஷ் என்று அனிதா கூறினாள்..
கண்டிப்பா ...இந்த வீக் எண்டு நான் வரேன் உங்க வீட்டுக்கு என்றான் சந்தோஷ்..
ஆனால் அதற்குள் எதிர் பாராத ஒரு விபத்து ,அனிதா சுய நினைவின்றி மருத்துவமனையில்...
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு இருந்த அனிதாவை பார்க்க சந்தோஷ் ஓடி
"டாக்டர் அனிதா எப்படி இருக்கா டாக்டர் சொல்லுங்க ப்ளீஸ் "..
"ஓ !! அந்த ஆக்சிடென்ட் கேஸ் ஆ பா"..
"ஆமா டாக்டர்"...
நிலைமை கொஞ்சம் கிரிடிகாலா தான் பா இருக்கு .நெறையா பிளட் லாஸ் ஆகிருக்கு.சுய நினவு இல்லாம தான் இருக்காங்க.எங்களால முடிஞ்சத முயற்சி பண்றோம் .கடவுள வேண்டிகோங்க "...
"நா பாக்கலாமா டாக்டர் "..
"தாராளமா ...பட் ரொம்ப டிஸ்ரப் பண்ணாதீங்க"...
சந்தோஷ் அனிதாவின் அருகில் ,உடல் முழுவதும் ஏக பட்ட டியூப்கள் பொருத்தப்பட்ட அனிதாவை பார்க்கவே சந்தோஷ் கலங்கினான்...
அனிதாவின் பெற்றோர்கள் அங்கு வந்தனர்.
"சந்தோஷ் ...சந்தோஷ் என்னப்பா ஆச்சு அனிதாவுக்கு ...எப்படி பா இருக்கா .."
"அனிதாவுக்கு ஒன்னும் இல்ல ஆன்டி ,அங்கிள் அனிதா நல்லா ஆகிடுவா ...".
அனிதாவின் அம்மா ஐ.சி.யு உள்ளே ஓடினார்.
"ஐயோ அனிதா !! அம்மா வந்துருகேன்மா ,என்ன பாரு ,ஐயோ உன்ன இந்த நிலைமையிலையா பாக்கணும். எல்லோரும் நல்ல இருக்கனும்னு நினைப்பியே ..உனக்கு இப்படியா".கதறினாள் ...
அனிதாவை இந்த நிலைமையில் பார்க்க விருப்பம் இல்லாமல் அனிதாவின் தந்தை வெளியே சென்றார் ...கண்களில் நீர் பொங்க...அவரை பின் தொடர்தான் சந்தோஷ்...
"அங்கிள் இல்ல அங்கிள் ..அனிதாவுக்கு ஒன்னும் இல்ல குணம் ஆகிடுவா .அழாதீங்க அங்கிள்" என்று தன் கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்து கொண்டான்..
உள்ளே இருந்து அனிதாவின் தாய் ,சந்தோஷ் தம்பி ,சந்தோஷ் தம்பி அனிதா உன் பேர் சொல்றாப்பா என்று வெளியே ஓடிவர ...சந்தோஷ் உள்ளே ஓடினான் ..
அனிதாவின் உதடுகள் சந்தோஷின் பெயரை முனுமுனுத்தது ...
"அனி ! அனி ! நா சந்தோஷ் ...இங்க தான் மா இருக்கேன்..உனக்கு ஒன்னும் இல்ல ..உனக்கு எல்லாம் சரியாகிடும்.."
"சந்தோதோதோதோதோதோஷ்.."
"பாரு ,உன் அம்மா ,அப்பா வந்துருக்காங்க ...டாக்டர் உனக்கு குனமாகிடும்னு சொல்லி இருக்கார்.."
"சந்தோதோதோதோதோதோஷ்...."
"இதோ ,நான் இங்க தான் உன் பக்கத்துல தான் இருக்கேன் அனி ..." என்று அனிதாவின் கைகளை பற்றினான் ...
அனிதாவின் கண்கள் மெல்ல திறந்தன ...
"சந்தோதோதோஷ் ...அழாத சந்தோதோஷ் ...எனக்கு ஒன்னும் இல்லலல ...நான்ன்ன்ன் நல்லாலாலாலா ஆகிடுவேன் ..நாநாநாநா உன் கூட வாழனும் சந்தோதோதோதோஷ் ...நாநாநாநா சாககூடாது ...எனக்கு நீ வேணும்..."
"அனி ..கண்டிப்பா நடக்கும் அனி...நாம சந்தோஷமா வாழுவோம் ..."
"சந்தோதோதோதோதோஷ் ....எனக்கு பயமாமாமாமாமா இருக்கு ...எனக்கு ட்ரீட்மென்ட் குடுக்க சொல்லு சந்தோதோதோதோஷ் ..உன் அப்பா அம்மா ,என் அப்பா அம்மா எல்லார் கூடவும் ,நம்ம நினைச்சமாதிரி சந்தோஷமா நாம வாழனும்ம்ம்ம்ம்ம் ..."
"கண்டிப்பா அனி ...நீ எந்திரிச்சு வருவ அனி ...நாம நினச்சது நடக்கும் அனி ...."
"சந்தோதோதோதோதோதோதோஷ் ....."
அனிதாவின் கண்கள் ஒரு இடத்தில் நிலை பெற்றன..அவளது கைகள் சந்தோஷின் கைகளில் இருந்து விடுபட்டன..அனிதாவின் இதயம் துடிக்க மறுத்தது ....
"அனி..................." அலறினான் சந்தோஷ் .....அனிதாவின் தாயும் தந்தையும் சேர்ந்து .......
"டாக்டர் ...டாக்டர் ...எதாவது பண்ணுங்க...இப்போ என்கிட்ட பேசினா டாக்டர் ..ப்ளீஸ் ஏதாவது செயுங்க..அவளுக்கு ஒன்னும் இருக்காது ..."
டாக்டர் நாடி துடிப்பையும் ,இதய துடிப்பையும் பரிசோதித்தார் ...
"ஐயம் சாரி ..மிஸ்டர் . சந்தோஷ் .."
"இல்ல அங்கிள் ...இப்போ பேசினா அங்கிள் என்கிட்ட..என்னோட வாழனும்னு சொன்னா ஆன்டி..
அழாதீங்க ...நம்ம அனிதா எங்கயும் போகல .. இப்போ எந்திரிப்பா பாருங்க ...."
"சந்தோஷ் ....மனச தேதிக்கப்பா ...நம்மள விட்டு போயிட்டாப்பா ..."
"அங்கிள் ..இல்ல அங்கிள்....இல்ல அங்கிள்...."
சந்தோஷ் வெளியே வந்தான் ....அவன் மனம் மட்டும் நம்ப மறுத்தது ....உண்மையை உணர்ந்து அழுது புலம்பினான்...
கிட்டதட்ட ஒரு ஜடமாக மாறிய சந்தோஷை ஒரு வருடத்துக்கு பின் பழைய நிலைக்கு கொண்டுவந்தனர்.சந்தோஷின் நண்பர்கள் மூலமாக சந்தோஷிற்கு வேலையும் ஏற்பாடு செய்தனர் .மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு மாறினான் சந்தோஷ்.
5 வருடங்களுக்கு கழித்து மிகுந்த சிரமத்திற்கு பின் சந்தோஷை திருமணதிற்க்கு சம்மதிக்க வைத்
நித்யாவிடம் அனிதாவை பற்றி அனைத்தையும் கூறியே திருமணம் செய்தான் சந்தோஷ்.
"என்னால என் அனிதாவை மறக்க முடியாது ...அவ இன்னம் என் மனசுலையே தான் இருக்கா..உனக்கு இதனால ஏதும்...."
"நா மறக்க சொல்லலையே ...எனக்கு உங்கமேல வருத்தம் இல்ல..உங்க வலி எனக்கு புரியுது ." நித்யாவின் பளிச் பதில் நித்யாவின் மேல் அன்பை ஏற்படுத்தியது...
தன் மகளுக்கு அனிதா என்று பெயர் வைக்க ,கூறியதும் நித்யாதான்...அனிதாகிட்ட இருந்து பிரிச்ச இந்த கடவுள் என்னை அனாதையா விடாம எனக்கு உன்னை குடுத்துருக்கார்,என்று
பழையநினைவுகளில்மூழ்கினான்,கண்கள் சாலையில் இருக்க,கைகள் ஸ்ட்ரியரிங் இல் இருக்க கால்கள் ஆக்சிலேட்டர்-ல் இருக்க சந்தோஷின் மனம் மட்டும் அனிதாவின் நினைவுகளில் .......
சந்தோஷின் கண்களில் கண்ணீர்.....அனி..லவ் யு அனி ,என்று மனதுக்குள் சொல்ல..ஒரு அழகிய கை தன்னை தொடுவதை உணர்ந்து கால்கள் பிரேக் -ஐ அழுத்த....
வியாழன், 20 செப்டம்பர், 2012
செப்டம்பர் 16 ஓசோன் படலம் பாதுகாப்பு தினம்
பூமியில் வாழ்ற உயிரினங்களை பாதுகாக்கும் சூரியனின் புற ஊதாக் கதிர்களை உட்கிரகிக்க
கூடிய ஓசோன் படலம் தேஞ்சுகிட்டு வருதுன்னு நம்ம எல்லாருக்குமே தெரியும்.கார்,ஏ.சி குண்டு பல்பு போன்றவற்றோட பயன்பாட்டை குறைக்கறதின் மூலமா இந்த ஓசோன் படலம் தேய்வைகம்மிபண்ண முடியும்.இந்த வீடியோ பாருங்க,சின்ன குழந்தைங்களுக்கு கதை

சொல்றமாதிரி சொன்னாலாவது நாம புரிஞ்சிப்போமானு யோசிச்சுதான் ரொம்ப எளிமையா
சுலபமா புரியக்கூடியவகையில் சின்ன குழந்தைங்களுக்கான வீடியோ-வை இங்க இணைச்சுருக்கேன் .
ஏ.சி, குண்டுபல்பு எல்லாம்இப்போஅதிகமா உபயோகபடுறது இல்ல.அட அதான் கரண்ட்
இருக்குறதே இல்லையே. கார் வச்சிஇருக்குற எல்லாரும் அத்தியாவசிய நேரம் மட்டும்
கார்-ஐ உபயோகிசோம்னா நல்ல இருக்கும்.இதுகூட இனி சாத்தியம்னு தோணுது.அதான் பெட்ரோல்,டீசல் விலையும் ஏறிடுச்சே.
கார்-ஐ உபயோகிசோம்னா நல்ல இருக்கும்.இதுகூட இனி சாத்தியம்னு தோணுது.அதான் பெட்ரோல்,டீசல் விலையும் ஏறிடுச்சே.
டால்பின்
டால்பின் நம்ம எல்லாருக்குமே பிடிச்ச ஒரு விலங்கு.சரிதானே.டால்பின் பாலூட்டி வகையை சேந்தது.37 வகை டால்பின்கள் இருக்காம் மொத்தம். அதுல 32 வகை டால்பின்கள் கடலில் வாழுது.5 வகை டால்பின் இனங்கள் ஏரிகளில் காணப்படுகின்றன.டால்பின்கள் கடல் மட்டத்தில் இருந்து 260 மீட்டர் ஆழம் வரை வாழும் தன்மை பெற்றது.அது சுவாசிப்பதற்காக அடிக்கடி கடல் மட்டதிற்க்கு வந்து டைவ் அடித்துவிட்டு செல்லுமாம்.
ஆபத்து சமயங்களில் 15 நிமிடம் வரை தண்ணீரில் மூழ்கி இருக்குமாம்.டால்பின்கள் எகொலோகேசன் எனும் முறையில் எதிரொலி முறைப்படி உணவு தேடல் மற்றும் இடபெயர்சியை மேற்கொள்ளுமாம்.'கில்லர் வேல்' என்று அழைக்கப்படும் ஆர்கா டால்பின்கள் தான் டால்பின்கள் இனத்துலையே ரொம்ப பெரியதாம்.இவை 6 . 1 மீட்டர் நீளம் வரை வளர கூடியதாம்.
'பட்டன் நோஸ்' என்று அழைக்கப்படும் டால்பின் வகை ரொம்ப பிரபலம்.இதுதான் நாம டி.வி ,கண்காட்சியில் பாக்குற துருதுருனு விளையாடுமே அந்த டால்பின்களாம்.இது மனுஷங்களோட ரொம்ப ஜாலியா பழகுமாம்,ரொம்ப சூப்பரா நம்மளை மாதிரியே விசில் அடிக்குமாம்.பலவிதமான சத்தத்தின் மூலமா மற்ற டால்பின்களோட தொடர்பு கொள்ளுமாம்.இதோட உடல் வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் .
இதோட தோலுக்கு அடியில இருக்குற பிளப்பர் என்னும் கொழுப்பு அடுக்கு இதோட வெப்பநிலையை கட்டுக்குள்ள வைக்குதாம்.டால்பின்கள் மணிக்கு 5 முதல் 2 கிலோ மீட்டர் தூரம் நீந்தக்கூடியது.அதிபட்சமா 32 கிலோ மீட்டர் தூரம் நீந்துமாம். இதோட வேகம் அதோட வகை ,சூழல் பொருத்து மாறுமாம்.
விநாயக சதுர்த்தி
விநாயக சதுர்த்தி எப்படி வந்தது தெரியுமா?
ஒரு நாள் பார்வதி தேவி குளிக்கச் சென்றாள். அங்கு காவலுக்கு தனது உதவியாளர்கள் யாரும் இல்லாததால், தன் உடம்பில் இருந்த அழுக்கு மூலம் ஒரு சிறுவனை உருவாக்கி உயிர்கொடுத்து காவலுக்கு நிக்கச்சொன்னார். யாரையும் உள்ளே விடவேண்டாம் எனவும் கட்டளையிட்டார். அப்போது அங்கே வந்த சிவபெருமானை தடுத்தான் அந்தச் சிறுவன். கோபமுற்ற சிவபெருமான் அவன் தலையை துண்டித்தார். பின்னர் பார்வதியின் மைந்தன் என்பதை அறிந்த சிவபெருமான் அச்சமுற்று, தன் பூதகணங்களை அழைத்து அவர்கள் முதலில் பார்க்கும் ஜீவராசியின் தலையை துண்டித்து எடுத்துவருமாறு கூறினார். அவர்கள் முதலில் பார்த்ததோ ஒரு யானையை. சிவபெருமானின் கட்டளைப்படி அந்த யானையின் தலையை துண்டித்து எடுத்துவந்தனர். அதனை சிவபெருமான் அந்த சிறுவனின் உடம்பில் ஒட்டவைத்து மீண்டும் உயிர் கொடுத்தார். அப்போது வெளியே வந்த பார்வதி பிள்ளை யாரு? எனக் கேட்டார். அதுவே அச்சிறுவனுக்கு பெயராகிவிட்டது. அச்சிறுவன் தான் பிள்ளையார்.பொதுவாக விநாயக சதுர்த்தி விநாயகரின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்படுகிறது.
புதன், 5 செப்டம்பர், 2012
அறிவோம் நம் கலையை...
பரதநாட்டியம் :
பரதநாட்டியம் -திற்கு புகழ் பெற்ற ஊர்னாலே தமிழ் நாடுதான்ங்க.தமிழ் நாட்டிற்கு பாரம்பரிய பெயர் சேக்குறதுல இந்த பரதநாட்டியமும் ஒன்று.இந்த பரத நாட்டியத்தை பற்றி சில விஷயங்களை தெரிஞ்சிக்குவோமே..
புராணப்படி சொல்லனும்னா பரத முனிவரால உருவானதால பரதம்னு பெயர் வந்ததாகவும் ,அதே நேரத்துல பரதம் அப்படினா ப-பாவம்,ர-ராகம்,த-தாளம் என்ற 3 -ஐயும் குரிப்பிட்ரதாகவும் சொல்லபடுது.
உடல் அசைவுகளும் ,கை முத்திரைகளையும் சேர்த்து 'அடவு' என்று வழங்கப்படுகிறது.சுமார் 120 அடைவுகள் உள்ளன.பல அடைவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும்.
பாரதனாட்டியதுல ரொம்ப முக்கியமானது 'அபிநயம்'.கருதியோ,உணர்வையோ வெளிப்படுத்த இது ரொம்ப உதவுது.அபிநயம் மூலமா ஒரு கருத்தை மத்தவங்களுக்கு நாம உணர்த்தலாம்.அபிநயம் இரண்டு வழிகளால் சித்தரிக்கப்படுது. ஒன்று உலக வழக்கு.இது 'லோகதர்மி' எனப்படும்.மற்றொன்று நாடக வழக்கு.இது 'நாடக தர்மி' எனப்படும்.பரதநாட்டியத்தில்ஆகார்ய அபிநயம்,வாசிக அபிநயம்,ஆங்கிக அபிநயம்,சாத்விக அபிநயம் என நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும்..
ஆகார்ய அபிநயம் :
அலங்காரம் மூலமா அபிநயிக்கறது .அதாவது முக ஒப்பனை,உடை,அணி அலங்காரம்,மேடை அமைப்பு ஆகியவை இந்த பரதநாட்டியத்தில் முக்கிய இடம் பெரும். வேற ஒருத்தங்கள போல வேஷம் போட்டு ஆடறது.
வாசிக அபிநயம்:
இதுல பாடல் தான் முக்கியம்.அந்த பாட்டோட பொருளுக்கு(அர்த்தத்துக்கு) ஏத்தமாதிரி அபிநயிப்பாங்க.
ஆடுரவங்களே பாட்டு பாடியும் அபிநயிக்கலாம்,இல்ல வேற ஒருத்தங்க பாட அந்த பாட்டுக்கு ஆடுறவங்க அபிநயிக்கலாம்.
ஆங்கிக அபிநயம்:
உடல் உறுப்புகாளால உள்ளதுல இருக்குற உணர்வை அபிநயிக்கறது.அதாவது ஒரு ஒரு உடல் உறுப்புக்கும் தனி தனி செய்கைக உண்டு.இதுல கை முத்திரை சிறப்பிடம் பெரும்.கைமுதிரைனா விரல்களின் செய்கைகள்.பாரதனாட்டியதுல ஒற்றைக்கை முத்திரை .இரட்டைக்கை முத்திரை உண்டு.
சாத்விக அபிநயம்:
உள்ளத்தில் எழும் உணர்சிகளால் உடலில் மாற்றங்கள் ஏற்ப்படும் .அதாவது நமக்கு பயமா இருந்ததுனா உடல் வேர்க்கும்,நடுங்கும்,கண் சொருகும் இதை ஆடலில் காட்டுவது தான் சாத்விக அபிநயம்..
9 சுவை உணர்வுகள் உண்டு அதை தான் நவரசம்னு சொல்வாங்க.ஒன்பான் சுவை-னும் சொல்வான.அது என்னென்னனா பயம்,வீரம்,இழிப்பு,அற்புதம்,இன்பம்,அவலம்,நகை,கோவம்,நடுநிலை .இஹை எல்லாம் கண்கள்,உடலசைவு,உடல்நிலை,கைமுதிரைகள் மூலமா அபிநயிக்கறது.
பாவங்கள்:
அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் அதாவது உணர்வுகள் 9 வகைப்படும்.ஸ்ருங்காரம்(வெட்கம்),வீரம்,கருணை,அற்புதம்,ஹாஸ்யம்(சிரிப்பு),பயானகம்(பயம்),பீபல்சம்(அருவருப்பு),ரௌத்ரம்(கோபம் ),சாந்தம்(அமைதி)
செவ்வாய், 4 செப்டம்பர், 2012
கத்தியின்றி ரத்தமின்றி...
கத்தியின்றி ரத்தமின்றி-ங்குற பாட்டு வேதாரன்யத்தில் உப்பு காய்ச்ச இராஜாஜி தலைமையில் நம்ம ஆளுங்க யாத்திரை போன்னப்போ கால் வலிக்காம இருக்க நாமக்கல் கவிஞர் பாடிய பாட்டு.
ஞாயிறு, 2 செப்டம்பர், 2012
என்ன குறை கண்டீர் வெளிநாட்டில்...
என்னவளம் இல்லை இந்த திருநாட்ல ..சரிதான்..ஆனா என்ன குறை பாத்தோம் வெளிநாட்ல?
எதுக்கு எடுத்தாலும் நீ என்ன வெளிநாட்டுலையா இருக்கனு பேசுறாங்களே அதான் கேக்குறேன்...என்ன அப்படி தப்பு பாத்தோம் வெளிநாட்டுல....
நாமதான் நாம ஊரை சுத்தமா வச்சுக்க மாட்டேன்குறோம்.அவங்க சுத்தமா வச்சுருக்காங்க.நம்ம ஊரை சுத்தமா வச்சுக்கணும்னா நம்ம முயற்சியும் இருக்கனும் ...அவங்க ஊரை பாரேன் எவ்ளவு சுத்தமா இருக்குனு சொன்னா மட்டும் போதாது.நாமளும் அப்படி சுத்தமா வச்சுக்க முயற்சி பண்ணும்.அதுக்கு நாம முதல்ல சரியா இருக்கணும்.
நம்மள விட அவங்க அன்பாவும் கனிவாவும் தான் இருக்காங்க.. நமக்கு அவங்க கிட்ட பிடிக்கலைனு நாம குறிப்பிட்டு சொல்றது என்ன அவங்க கலாச்சாரம் அதுதானே ..
சரி நாம மனசாட்சியோடதான் பேசுறோமா நம்ம நாட்டுல நாம நெஜமாவே ஒருத்தனுக்கு ஒருத்தின்னு தான் இருக்கோமா?புராண காலத்துல இருந்தே பாப்போமே.
சரி,கல்யாணத்தின் போது ஆண்களுக்கு காலில் மெட்டி போடுறதுக்கு அர்த்தம் எல்லாருக்கும் தெரியும் தானே...தெரிஞ்சாலும் இன்னோர்தறம் என்னனு பாப்போம்..
பெண்கள் எப்பையும் தல குனிஞ்சு நடக்கறதால எதிரில் வரும் ஆண்கள் காலில் மெட்டி இருந்ததுனா அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு இவர் இன்னோர் பெண்ணுக்கு சொந்தமானவர்னு தெரியனும் அதுக்காகத்தான் அந்த வழக்கம் இருந்தது..காலபோக்கில் பெண்களுக்கு மட்டும் அது கட்டாயமாக்கி ஆண்களுக்கு அது கட்டாயம் இல்லைன்னு நடைமுறைக்கு வந்துடுச்சு. இதுலாம் எதுக்கு அப்போ பண்ணினோம்?
ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இருக்கணும்னா மகாபாரத காலத்துல இருந்தே சொல்லுங்களேன்,ஒருத்தனுக்கு ஒருத்தின்னு தான் இருந்தாங்களா?அந்த காலத்துல ராஜாவிற்கு ஒரே ஒரு ராணி மட்டும் தான் இருந்தாங்களா? சொல்லுங்க பாப்போம்.
கற்பு பெண்களுக்கு மட்டும் தான் உண்டா?ஆண்களுக்கு கிடையாதா? கண்ணகி கற்புகரசி தான்.ஆனா கோவலன்?!!! கோவலன் மாதவியுடன் இருக்காருன்னு தெரிஞ்சும் கண்ணகி ஏதும் சொல்லமா தானே இருந்தாங்க.தனக்கு கல்யாணம் ஆகிருந்தும் கோவலன் மாதவியை ஏன் தேடி போனார்?கோவலனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் மாதவி ஏன் கோவலன் உடன் இருந்தாங்க? இதுல யாரை தப்புன்னு சொல்றது?அப்போ அந்த சமயத்துல ஒருத்தனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம் இருந்ததா ?! இல்ல தானே..
அட நாம தினமும் கும்பிடற கடவுள் பலருக்கு கூட இரண்டு மனைவிகள் தானேங்க..முருகர்,சிவன்,பெருமாள்,சில இடங்களில் விநாயகர் இப்படி நிறைய ....அப்பறம் எப்படிங்க நம்ம கலாச்சாரம் கலாச்சாரம்னு இன்னம் சொல்லிக்கிட்டு இருக்கோம்.
இராமாயண காலத்தில் ,ராமர் ஏக பத்தினி விரதனா இல்லையானு கேக்கலாம்.சீதா தேவியும் அப்படிதான் இருத்தாங்கனு சொல்லலாம்.அந்த ராமர் சீதா தேவி பத்து மாதம் இலங்கியில் இருந்ததால ,அவங்கள நெருப்புல இறங்க சொல்லி சோதனை செய்தாங்க.அதே பத்து மாதம் ராமரும் சீதா தேவியை ஒரு ஒரு இடமா தேடி போனாங்க தானே அப்போ அவரை சோதனை செய்யலையே ஏன்.?.அந்த காலத்துல இருந்தே
இப்படி தான் நடந்துக்கிட்டு இருந்துருக்காங்க.
ராமா அவதாரத்துக்கு அப்பறம் தானே கிருஷ்ணா அவதாரம்.இதே கடவுள் கிருஷ்ணா அவதாரத்துல பாமா,ருக்மணி ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கலையா?என்னங்க இது?
வெளிப்படையா மனைவிக்கு தெரிஞ்சு சிலரும் தெரியாம சிலரும்னு எத்தனைபேர் இனோர் பொண்ணுகூட வாழ்ந்துக்கிட்டுதானே இருக்காங்க..அதேமாதிரி சில பெண்களும் கணவனுக்கு தெரியாம இதே போல் இருக்காங்க தானே...அப்பறம் என்ன நம்ம கலாச்சாரம் கலாச்சாரம்னு சொல்றது .எப்போ வந்தது இந்த ஒருத்தனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம்..
ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியையோ/கணவனையோ சமாளிக்க முடியாம போன கட்டத்துல இப்படி யாராவது சொல்லிவச்சு அது இப்போவரை (சும்மா சொல்றதுக்கு மட்டும்) தொடருதோ .?.
கணவனின் சித்தரவதை தாங்காம,கணவன் கூட சந்தோஷமாவும்,நிம்மதியாவும் இல்லாம மனைவியும் அதேபோல மனைவியின் சித்தரவதை தாங்காம,மனைவி கூட சந்தோஷமாவும்,நிம்மதியாவும் இல்லாம கணவனும் நம்ம கலாச்சாரம் கலாச்சாரம்னு சொல்லிக்கிட்டு போலி வாழ்க்கை வந்துகிட்டு இருக்கலையா?இதுனால என்ன கிடைக்குது?பொறுமையானவங்க ,அனுசரிச்சு போறவங்கனு பட்டம் அவ்ளோதானே...காலம் போனதுக்கு அப்பறம் திரும்பி பாத்தா நாம என்ன வாழ்ந்தோம் , அனுபவிச்சோம்னு நொந்துபோய் இப்போ வருத்தபடுறவங்க எத்தனையோ
பேர்.வருத்த படப்போறவங்களும் எத்தனையோ பேர்.எதுக்கு இந்த போலி வாழ்க்கை. இதுக்கு வெளிநாட்டு மக்கள் எவ்ளவோ பரவாஇல்லையே.பிடிக்கலைனதும் விலகிடுராங்களே.
பேர்.வருத்த படப்போறவங்களும் எத்தனையோ பேர்.எதுக்கு இந்த போலி வாழ்க்கை. இதுக்கு வெளிநாட்டு மக்கள் எவ்ளவோ பரவாஇல்லையே.பிடிக்கலைனதும் விலகிடுராங்களே.
அந்த ஊருல (சில ) குழந்தை பிறக்கும் போது அப்பாவா ஒருத்தரும் அது வளரும் போது அப்பாவா இன்னோர்த்தரும் இருக்கறது உண்மைதான்.
அதனால அவங்க மனஅழுத்தத்துக்கு தள்ளப்படுறதும் உண்மைதான். நம்ம நாட்டுல அப்பா அம்மா சண்டையை பாத்துகிட்டே வளர்ற பிள்ளைங்கள் அப்பாவால அம்மாவும் அம்மாவால அப்பாவும் கஷ்டபடுறதை பாத்துகிட்டே வளர்ற பிள்ளைங்கள் மனஅழுத்தத்துக்கு தள்ளப்படலையா?அதனால அவங்க எதிர்காலமே மாறிபோகலையா?கேள்விக்குறி ஆகலையா?நம்ம நாட்டுல அப்படி யாரும் இல்லையா?
பிள்ளைங்கள் வளந்ததும் ஏன் இந்த மாதிரி ஒரு அப்பாவோட/அம்மாவோட இதனை வருஷம் அனுசரிச்சு போனீங்கனு கேக்காமலா இருக்காங்க?சொல்லுங்க..
வெளிநாட்டுக்காரங்க பண்றதுல என்ன தப்பு?.வெளிநாட்டுல பிள்ளைங்க ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததும் இனி உன் வாழ்க்கை உன் கைல தான் ,நீதான் உன் வாழ்க்கைய பாத்துக்கணும்னு விட்டுடுவாங்கனு கேள்விபட்டுருக்கேன்.
எவ்வளவு அனுசரிச்சு பிளைங்களுக்காக வாழ்ந்தும் அந்த பிள்ளைங்க வளந்ததும் நமக்காக தானே நம்ம அம்மா/அப்பா பிடிக்காம போனாகூட இந்த அம்மா/அப்பா கூட இத்தனை வருஷம் வாழ்ந்தாங்கனு யோசிக்காம, அவங்களை விட்டு போறவங்க இல்லையா நம்ம நாட்டுல?நடந்துகிட்டு தானே இருக்கு.சொத்து பிரச்னை,

எங்களுக்கு அப்பறம் இந்த சொத்தை எல்லாம் நீதான் பாத்துக்கணும்னு சொல்றதும் ,சிலபேர் புத்திசாலிதனமா அதைவச்சு அப்பா அம்மா பேரை காப்பாதறதும்,சில பேர் சோம்பேறி ஆகுறதும்.. எனக்கு இந்த சொத்தை தரல,என் பேருக்கு இந்த சொத்தை எழுதிவைக்கலைனு எத்தன பிள்ளைங்க பெத்தவங்கள கஷ்டப்படுத்றதும் நடந்துகிட்டு தானே இருக்கு.எங்க கூடத்தான் பிள்ளைங்க கடைசி வரை இருப்பாங்கனு பிள்ளைங்களை பொறுப்பில்லாம ஆக்குறதும் ,அப்பா அம்மா இருக்காங்க அவங்க பாத்துப்பாங்கனு பிள்ளைங்க பொறுப்பில்லாம போகுறதும் ,
நமக்காக கஷ்ட பட்டவங்கனு யோசிக்காம பெத்தவங்களை அனாதையா விட்டுட்டு போகுறதும்,நாம இந்தன வருஷம் வளத்ததால நம்ம சொல்றபடிதான் கேக்கணும்னு அவங்களை அடக்கறதும்-னு எத்தனையோ நம்ம நாட்டுல நடந்துகிட்டு தானே இருக்கு.இப்படி வேதனை படுறதுக்கு வெளிநாட்டுக்காரங்க பண்றது சரிதானே..என்ன தப்பு சொல்லுங்க..
என்னமோ நாமதான் ஒசத்தி நாமதான் ஒசத்தின்னு சொல்லி சொல்லி வெளி வேஷம் தான் போடறோம்.அவங்கள பாத்து நாம காப்பி அடிக்குறோம் அவங்கள மாதிரி நாம மாறிக்கிட்டு இருக்கோம் அவங்க நம்மளமாதிரி மாறிகிட்டு இருக்காங்கனு சொல்றோம்.அவங்க நாட்டுல சாப்பிட அந்த மாதிரி உணவுதான் கிடைச்சது அப்போ ,அவங்க நாட்டு குளிருக்கு அந்த மாதிரி உடை போட்டாதான் சரியா இருக்கும்,குளிரை சமாளிக்க உடம்பு உஷ்ணத்துக்கு மது அருந்தினாதான் சரியாய் இருக்கும் அதனால அவங்க அப்படி இருகாங்க ..நமக்கு என்னங்க? நம்மள யார் கோட் போடா சொன்னா ?நம்மள யார் குடிக்க சொன்னா? செய்யமுடிஞ்ச,செய்யவேண்டிய சிலதை எல்லாம் செய்யாம இதை எல்லாம் மட்டும் யாரு செய்ய சொன்னா?நம்ம மேல தப்ப வச்சுக்கிட்டு வெளிநாட்டுகாரங்களை குறை சொல்றது என்ன நியாயம் சொல்லுங்க.
நெஜமாவே நம்மள ஒப்பிடும் போது அவங்க எவ்ளவோ பரவாஇல்லை. சொல்லபோனா அவங்க வெளி வேஷம் போடாம, சரியாதான் செய்றாங்கன்னு சொல்ல தோணுது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)