பக்கங்கள் (Pages)

ஞாயிறு, 2 செப்டம்பர், 2012

என்ன குறை கண்டீர் வெளிநாட்டில்...

என்னவளம் இல்லை இந்த  திருநாட்ல ..சரிதான்..ஆனா என்ன குறை பாத்தோம் வெளிநாட்ல?


எதுக்கு எடுத்தாலும் நீ என்ன வெளிநாட்டுலையா   இருக்கனு  பேசுறாங்களே அதான் கேக்குறேன்...என்ன அப்படி தப்பு பாத்தோம் வெளிநாட்டுல....

நாமதான் நாம ஊரை சுத்தமா வச்சுக்க மாட்டேன்குறோம்.அவங்க சுத்தமா வச்சுருக்காங்க.நம்ம ஊரை சுத்தமா வச்சுக்கணும்னா நம்ம முயற்சியும் இருக்கனும் ...அவங்க ஊரை பாரேன் எவ்ளவு சுத்தமா இருக்குனு சொன்னா மட்டும் போதாது.நாமளும் அப்படி சுத்தமா வச்சுக்க முயற்சி பண்ணும்.அதுக்கு நாம முதல்ல சரியா இருக்கணும்.

நம்மள விட அவங்க அன்பாவும் கனிவாவும் தான் இருக்காங்க.. நமக்கு அவங்க கிட்ட பிடிக்கலைனு நாம குறிப்பிட்டு சொல்றது என்ன அவங்க கலாச்சாரம் அதுதானே ..

சரி நாம மனசாட்சியோடதான் பேசுறோமா நம்ம நாட்டுல நாம நெஜமாவே ஒருத்தனுக்கு ஒருத்தின்னு தான் இருக்கோமா?புராண காலத்துல இருந்தே பாப்போமே.

சரி,கல்யாணத்தின் போது ஆண்களுக்கு காலில் மெட்டி போடுறதுக்கு அர்த்தம் எல்லாருக்கும் தெரியும் தானே...தெரிஞ்சாலும் இன்னோர்தறம் என்னனு பாப்போம்..

பெண்கள்   எப்பையும் தல குனிஞ்சு நடக்கறதால எதிரில் வரும் ஆண்கள் காலில் மெட்டி இருந்ததுனா அவருக்கு கல்யாணம் ஆகிடுச்சு இவர் இன்னோர் பெண்ணுக்கு சொந்தமானவர்னு தெரியனும் அதுக்காகத்தான் அந்த வழக்கம் இருந்தது..காலபோக்கில் பெண்களுக்கு மட்டும் அது கட்டாயமாக்கி ஆண்களுக்கு அது கட்டாயம் இல்லைன்னு நடைமுறைக்கு வந்துடுச்சு. இதுலாம் எதுக்கு அப்போ பண்ணினோம்?

ஒருத்தனுக்கு ஒருத்தின்னு இருக்கணும்னா  மகாபாரத காலத்துல இருந்தே சொல்லுங்களேன்,ஒருத்தனுக்கு ஒருத்தின்னு தான் இருந்தாங்களா?அந்த காலத்துல ராஜாவிற்கு  ஒரே ஒரு ராணி மட்டும் தான் இருந்தாங்களா? சொல்லுங்க பாப்போம்.

கற்பு பெண்களுக்கு மட்டும் தான் உண்டா?ஆண்களுக்கு கிடையாதா? கண்ணகி கற்புகரசி தான்.ஆனா கோவலன்?!!! கோவலன் மாதவியுடன் இருக்காருன்னு தெரிஞ்சும் கண்ணகி ஏதும் சொல்லமா தானே இருந்தாங்க.தனக்கு கல்யாணம் ஆகிருந்தும் கோவலன் மாதவியை ஏன் தேடி போனார்?கோவலனுக்கு கல்யாணம் ஆனது தெரிஞ்சும் மாதவி ஏன் கோவலன் உடன் இருந்தாங்க? இதுல யாரை தப்புன்னு சொல்றது?அப்போ அந்த  சமயத்துல  ஒருத்தனுக்கு ஒருத்திங்கற கலாச்சாரம் இருந்ததா ?! இல்ல தானே..

அட நாம தினமும் கும்பிடற கடவுள் பலருக்கு கூட இரண்டு மனைவிகள் தானேங்க..முருகர்,சிவன்,பெருமாள்,சில இடங்களில் விநாயகர் இப்படி நிறைய ....அப்பறம்  எப்படிங்க நம்ம கலாச்சாரம் கலாச்சாரம்னு  இன்னம் சொல்லிக்கிட்டு இருக்கோம். 

இராமாயண காலத்தில் ,ராமர் ஏக பத்தினி விரதனா இல்லையானு  கேக்கலாம்.சீதா தேவியும் அப்படிதான் இருத்தாங்கனு சொல்லலாம்.அந்த ராமர் சீதா தேவி பத்து மாதம் இலங்கியில் இருந்ததால ,அவங்கள நெருப்புல இறங்க  சொல்லி சோதனை செய்தாங்க.அதே பத்து மாதம் ராமரும் சீதா தேவியை ஒரு ஒரு இடமா தேடி போனாங்க தானே அப்போ அவரை சோதனை செய்யலையே ஏன்.?.அந்த காலத்துல இருந்தே 
இப்படி தான் நடந்துக்கிட்டு  இருந்துருக்காங்க.  
 ராமா அவதாரத்துக்கு அப்பறம் தானே கிருஷ்ணா அவதாரம்.இதே கடவுள் கிருஷ்ணா அவதாரத்துல பாமா,ருக்மணி ரெண்டு பேரையும் கல்யாணம் பண்ணிக்கலையா?என்னங்க  இது? 
வெளிப்படையா மனைவிக்கு தெரிஞ்சு  சிலரும் தெரியாம  சிலரும்னு எத்தனைபேர் இனோர் பொண்ணுகூட வாழ்ந்துக்கிட்டுதானே     இருக்காங்க..அதேமாதிரி சில பெண்களும் கணவனுக்கு தெரியாம இதே போல் இருக்காங்க தானே...அப்பறம்  என்ன  நம்ம கலாச்சாரம் கலாச்சாரம்னு சொல்றது .எப்போ வந்தது இந்த  ஒருத்தனுக்கு ஒருத்திங்கற  கலாச்சாரம்..

ஒரு வேளை ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவியையோ/கணவனையோ சமாளிக்க முடியாம போன கட்டத்துல இப்படி யாராவது சொல்லிவச்சு அது இப்போவரை (சும்மா சொல்றதுக்கு மட்டும்) தொடருதோ .?.
கணவனின் சித்தரவதை தாங்காம,கணவன் கூட சந்தோஷமாவும்,நிம்மதியாவும்  இல்லாம  மனைவியும்  அதேபோல மனைவியின்   சித்தரவதை தாங்காம,மனைவி  கூட சந்தோஷமாவும்,நிம்மதியாவும்  இல்லாம  கணவனும் நம்ம கலாச்சாரம் கலாச்சாரம்னு சொல்லிக்கிட்டு போலி வாழ்க்கை வந்துகிட்டு இருக்கலையா?இதுனால என்ன கிடைக்குது?பொறுமையானவங்க ,அனுசரிச்சு போறவங்கனு பட்டம் அவ்ளோதானே...காலம் போனதுக்கு அப்பறம் திரும்பி பாத்தா நாம என்ன வாழ்ந்தோம் , அனுபவிச்சோம்னு நொந்துபோய் இப்போ வருத்தபடுறவங்க எத்தனையோ 
பேர்.வருத்த படப்போறவங்களும்  எத்தனையோ பேர்.எதுக்கு இந்த போலி வாழ்க்கை.   இதுக்கு வெளிநாட்டு மக்கள் எவ்ளவோ பரவாஇல்லையே.பிடிக்கலைனதும் விலகிடுராங்களே.

அந்த ஊருல (சில ) குழந்தை பிறக்கும்  போது அப்பாவா  ஒருத்தரும் அது வளரும் போது அப்பாவா இன்னோர்த்தரும் இருக்கறது உண்மைதான்.
அதனால அவங்க மனஅழுத்தத்துக்கு தள்ளப்படுறதும் உண்மைதான்.  நம்ம நாட்டுல அப்பா அம்மா சண்டையை பாத்துகிட்டே வளர்ற பிள்ளைங்கள்  அப்பாவால அம்மாவும் அம்மாவால அப்பாவும் கஷ்டபடுறதை பாத்துகிட்டே வளர்ற பிள்ளைங்கள் மனஅழுத்தத்துக்கு  தள்ளப்படலையா?அதனால அவங்க எதிர்காலமே மாறிபோகலையா?கேள்விக்குறி ஆகலையா?நம்ம நாட்டுல அப்படி  யாரும்  இல்லையா? 
பிள்ளைங்கள் வளந்ததும் ஏன் இந்த மாதிரி ஒரு அப்பாவோட/அம்மாவோட இதனை வருஷம் அனுசரிச்சு போனீங்கனு   கேக்காமலா   இருக்காங்க?சொல்லுங்க..

வெளிநாட்டுக்காரங்க பண்றதுல என்ன தப்பு?.வெளிநாட்டுல பிள்ளைங்க ஒரு குறிப்பிட்ட வயசு வந்ததும் இனி உன் வாழ்க்கை உன் கைல தான் ,நீதான் உன் வாழ்க்கைய பாத்துக்கணும்னு விட்டுடுவாங்கனு கேள்விபட்டுருக்கேன்.

எவ்வளவு அனுசரிச்சு பிளைங்களுக்காக வாழ்ந்தும் அந்த பிள்ளைங்க வளந்ததும் நமக்காக தானே நம்ம அம்மா/அப்பா பிடிக்காம போனாகூட இந்த அம்மா/அப்பா கூட இத்தனை  வருஷம் வாழ்ந்தாங்கனு யோசிக்காம, அவங்களை விட்டு போறவங்க இல்லையா நம்ம நாட்டுல?நடந்துகிட்டு தானே இருக்கு.சொத்து பிரச்னை,
எங்களுக்கு அப்பறம் இந்த சொத்தை எல்லாம் நீதான் பாத்துக்கணும்னு சொல்றதும் ,சிலபேர் புத்திசாலிதனமா அதைவச்சு அப்பா அம்மா பேரை காப்பாதறதும்,சில பேர் சோம்பேறி ஆகுறதும்.. எனக்கு இந்த சொத்தை தரல,என் பேருக்கு இந்த சொத்தை எழுதிவைக்கலைனு  எத்தன பிள்ளைங்க பெத்தவங்கள கஷ்டப்படுத்றதும் நடந்துகிட்டு தானே இருக்கு.எங்க கூடத்தான் பிள்ளைங்க கடைசி வரை இருப்பாங்கனு பிள்ளைங்களை பொறுப்பில்லாம ஆக்குறதும் ,அப்பா அம்மா இருக்காங்க அவங்க பாத்துப்பாங்கனு பிள்ளைங்க பொறுப்பில்லாம  போகுறதும் ,
நமக்காக கஷ்ட பட்டவங்கனு யோசிக்காம பெத்தவங்களை அனாதையா விட்டுட்டு போகுறதும்,நாம இந்தன வருஷம் வளத்ததால நம்ம சொல்றபடிதான் கேக்கணும்னு அவங்களை அடக்கறதும்-னு எத்தனையோ நம்ம நாட்டுல நடந்துகிட்டு தானே இருக்கு.இப்படி வேதனை படுறதுக்கு வெளிநாட்டுக்காரங்க பண்றது சரிதானே..என்ன தப்பு சொல்லுங்க..

என்னமோ நாமதான் ஒசத்தி நாமதான் ஒசத்தின்னு சொல்லி சொல்லி வெளி வேஷம் தான் போடறோம்.அவங்கள பாத்து நாம காப்பி அடிக்குறோம் அவங்கள மாதிரி நாம மாறிக்கிட்டு இருக்கோம் அவங்க நம்மளமாதிரி மாறிகிட்டு இருக்காங்கனு சொல்றோம்.அவங்க நாட்டுல சாப்பிட அந்த மாதிரி உணவுதான் கிடைச்சது அப்போ ,அவங்க நாட்டு குளிருக்கு அந்த மாதிரி உடை போட்டாதான் சரியா இருக்கும்,குளிரை சமாளிக்க  உடம்பு உஷ்ணத்துக்கு மது அருந்தினாதான் சரியாய் இருக்கும் அதனால அவங்க அப்படி இருகாங்க ..நமக்கு என்னங்க? நம்மள யார் கோட் போடா சொன்னா ?நம்மள யார் குடிக்க சொன்னா? செய்யமுடிஞ்ச,செய்யவேண்டிய சிலதை எல்லாம் செய்யாம இதை எல்லாம் மட்டும் யாரு செய்ய சொன்னா?நம்ம மேல தப்ப வச்சுக்கிட்டு வெளிநாட்டுகாரங்களை குறை சொல்றது என்ன நியாயம் சொல்லுங்க.

நெஜமாவே நம்மள ஒப்பிடும் போது அவங்க எவ்ளவோ பரவாஇல்லை. சொல்லபோனா அவங்க வெளி வேஷம் போடாம, சரியாதான் செய்றாங்கன்னு சொல்ல தோணுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக