பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
செவ்வாய், 23 அக்டோபர், 2012
ஞாயிறு, 14 அக்டோபர், 2012
மின்சாரமே ...
சென்னை தவிர மத்த இடத்துல எல்லாம் 8 மணி நேரம் பவர் கட்-னு டி.வி-யில் பார்க்கும் போதும் பேப்பர்-ல படிக்கும்போதும் அது அவ்ளோ பெரிய விஷயமா தெரியல.எட்டு மணி நேரம் பவர் கட்டாம் போ ...அப்படினு மட்டும் தான் தோனுச்சு..ஆனா அதை அனுபவிக்கும் போதுதான் கரண்ட்டோட அருமையும் ,பவர் கட்டால பாதிக்குற கஷ்டமும் புரியுது.இப்போலாம் எட்டு மணி நேரம் பவர் கட்னு சொல்ல முடியல.எட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு மணிநேரம் பவர் கட்னு தானாக சொல்றோம்.
அதென்ன சென்னைல மட்டும் ஒரு மணிநேரம் பவர் கட் மத்த இடத்துல எல்லாம் 8 மணிநேரம் 14 மணிநேரம் பவர் கட்.ஏன் சென்னைல மட்டும் தான் கம்பெனி நடக்குதா?ஸ்கூல் நடக்குதா?அங்க மட்டும் தான் படிக்குறாங்களா?அங்க மட்டும் தான் மக்கள் வேலைக்கு போறாங்களா?ஏன் இவ்ளோ பாரபட்சம்?
எல்லா இடத்துலயும் சமமா பவர் கட் பண்ணலாமே.சரி அட்லீஸ்ட் நாளில் ரெண்டு பங்காவது பண்ணலாமே.
சென்னை தவிர மத்த இடத்துல இருக்குறவங்கலாம் என்னவோ பாவம் பண்ணினவங்க மாதிரியும் அங்க இருக்குறவங்க மட்டும் தான் புண்ணியம் பண்ணினவங்க மாதிரியும் இல்ல இருக்கு இதுலாம் பாத்தா.இது என்ன நியாயமோ?
சரி, சென்னைல இருக்குற ஐ.டி கம்பெனி எல்லாம் கரண்ட் மிச்ச படுத்துறாங்களா?எத்தன கம்பெனில யாருமே இல்லாத கேபின்-ளையும் வெட்டியா லைட் ,ப்பான்/ஏ.சி ஓடிகிட்டு இருக்கு.ஒருநாளாவது அவங்க இந்த 8 மணிநேரம் பவர் கட் ஆகுற ஊரை எல்லாம் நினச்சு பாக்குறாங்களா?இதுமாதிரி மின்சாரத்த வீணாக்குற கம்பெனிகளுக்கு அட்லீஸ்ட் 2 நாளாவது கரண்ட் கட் பண்ணினா தான் அவங்களுக்கு அடுத்தமுறை மின்சாரத்தை மிச்சபடுத்தணும்னு எண்ணம் வரும்..மத்த ஊருகளையும் நினச்சு பாப்பாங்க.
கண்டிப்பா ஒரு ஒரு மெட்ரோ சிட்டிகல்ளையும் ,ஒரு ஒரு பன்னாட்டு நிருவனத்துளையும் பல கிராமங்களில் இருந்து ,பல டவுன்களில் இருந்து வேலை
செய்றவங்க நிறைய பேர் இருப்பாங்க.அவங்க ஜஸ்ட் தன் சொந்த ஊரை நினச்சு பாத்து, தன் தம்பி, தங்கை ,தன் உறவுக்காறங்க இத்தனை மணி நேரம் பவர் இல்லாம கஷ்டபடுராங்கலேன்னு நினச்சு பாத்து தேவை இல்லாத நேரத்துல தேவை இல்லாத இடத்துல ஓடிகிட்டு இருக்குற ப்பான்/ஏ.சி
லைட் எல்லாம் நிறுத்தலாமே.தன் நண்பர்களுக்கும் இதை அறிவுருத்தலாமே.கம்பனிகள் ஓவர் டைம் பாக்கவைக்குறதை குறைக்கலாமே.எத்தனையோ பேர் ஓவர் டைம் பாத்தா அதுல கூடுதலா ஒரு கணிசமான வருமானம் வரும்னு தேவை இல்லாம ஓவர் டைம் பக்குறவங்களும் இருக்காங்கதானே.அதை தவிர்க்கலாமே.
சில நேரம் இதை நினைக்கும் போது ,சின்னதம்பி படத்துல கவுண்டமணி சொல்வாரே ,'டே அப்பா ,உன்னால ஒரே ஒரு நல்ல விஷயம் நடக்குறது என்னனா ,கரண்ட் பில் இதுவரைக்கும் நா கட்டினதே இல்லடா' - னு அதுமாதிரி சொல்லி
நாமலே சிரிச்சுக்கவேண்டியாத இருக்கு ..
என்னுடைய தம்பி தங்கைகள் இதுமாதிரி பவர் கட்டால படிக்க கூட முடியாம அவதிபடுறாங்க..என்னால முடிஞ்ச அளவுக்கு மின்சாரத்த சிக்கனமா உபயோகபடுதுறேன் தேவை இல்லாத சமயத்துல தேவை இல்லாத நேரத்துல ஓடிகிட்டு இருக்குற ப்பான்/ஏ.சி
லைட் எல்லாம் நிறுத்திடறேன்..என் நண்பர்களுக்கும் சொல்லி இதே முறையை பாலோ பண்ணவைக்குறேன்.அப்போ நீங்க....
சாதனை தமிழர்கள்
கடலூர்-ரை சேர்ந்த முதல் நிலை காவலர் மணிகண்ட பிரபு,இவர் அகில இந்திய அளவில் காவலர்களுக்கான துப்பாக்கி சுடுற போட்டில ரெண்டு தடவ தங்கம் ஜெயிச்சு இருக்காராம்.இப்படி ரெண்டு தடவ தங்கம் வாங்கின முதல் தமிழக்காவலர் இவர் தானாம்.
வெள்ளி, 5 அக்டோபர், 2012
'ஆக்ஸஸ் மேப்' ....
'ஆக்ஸஸ் மேப்' அப்படினா என்னனு கேக்குறீங்களா?நடக்கமுடியாம ,நடக்குறதுல பிரச்சனை இருக்குறவங்க இந்த 'ஆக்ஸஸ் மேப்' -ஐ
பயன்படுத்தி தான் உபயோகபடுத்த எளிமையா இருக்குற கட்டிடத்தை தேர்ந்தெடுக்க தான் இந்த 'ஆக்ஸஸ் மேப்' .
அதாவது மாற்றுதிரனாளிகள் பயன்படுதுறதுக்கு ஏற்ற வசதிகள் இருக்குற பொது இடங்களை வரைபடமா குறிப்பிட உதவுதுற இணையம் தான் 'ஆக்ஸஸ் மேப்' .
நடக்கமுடியாம இருக்குற ,'வீல் சேர்' உபயோகப்படுத்துற மாற்றுதிரனாளிகள் ஒரு கட்டிடத்தை எப்படி அணுகுறது ,எந்த அளவுக்கு அந்த கட்டிடம் அவங்க உபயோகபடுத்த எளிமையா இருக்குனு பாத்து அதுக்கு தகுந்த மாதிரி மார்க் போடுறாங்க.
உதாரணமா , ஒரு கட்டிடத்துக்கு வாசல்ல வெறும் படிக்கட்டு தான் இருக்குனா அதுக்கு ஒரு மார்க்.நல்ல சாய்வுப்பாதை இருந்தா அதுக்கு 2 மார்க்,அங்க இருக்குற லிப்ட்-ல சரக்கற நாற்காலி போகுற அளவுக்கு இடம் இருந்தா இன்னம் ஒரு மார்க்,கட்டிடத்துக்குள்ள அதிகமா இட நெருக்கடி இல்லாம அவங்க எளிமையா சுத்தி வர வசதி இருந்தா இன்னம் ஒரு மார்க்,மாற்றுதிரனாளிகளுக்காக தனியா டாய்லெட் வசதி இருந்தா இன்னம் ஒரு மார்க்-னு இப்படி எல்லா வசதியும் இருந்தா முழுசா 5 மார்க்-னு இப்படி ஒரு ஒரு கட்டிடத்துக்கும் பொது மக்களை மார்க் போடா சொல்றாங்க.இவற்றை மொத்தமா கூட்டி சராசரி பாத்து அதன் அடிபடையில ஒரு ஒரு நகரதுலையும் ஆக்ஸஸ் எளிதாக இருக்குற இடங்களை ஒரு வரைபடமா குறிப்பிடுறாங்க.
இப்போ ஒரு தெருவுல நாலு உணவகம் இருந்தா அதுல ஒண்ணுதான் சாய்வுபாதையோட இருந்தா இந்த 'ஆக்ஸஸ் மேப்' அந்த உணவகத்தை மட்டும் விசேஷமா காட்டுமாம்.மற்ற இடத்தை சிகப்பு வட்டம் போட்டு எச்சரிக்குமாம்.
இதன் மூலமா ,இந்த மாதிரியான மாற்றுதிரனாளிகள் ,இந்த மேப் பாத்து அவங்க போகுறதுக்கு எளிமையான இடம் பாத்து அதுக்க தகுந்த மாதிரி அவங்க திட்டமிடலாம்னு சொல்றாங்க.
இது அமெரிக்கா போன்ற நாட்ல வேகமா பரவிகிட்டு இருக்காம்.இந்தியாவிலயும் இந்த 'ஆக்ஸஸ் மேப்' வசதி இருக்கு ,ஆனா நம்ம மக்கள் கட்டடத்தை பாத்து இன்னம் மார்க் போட ஆரம்பிக்கலையாம்.
நம்மளால முடிஞ்ச நல்லத மத்தவங்களுக்கு செய்வோம்.நம்மளால இதுமாதிரி மாற்றுதிரனாளிகளுக்கு நேரடியா உதவமுடியலைனாலும் அட்லீஸ்ட் இந்தமாதிரி மறைமுகமாவாவது உதவுவோமே.நெட்-ல அதிக நேரம் சாட் பண்ண செலவு பண்ற நேரத்துல ரொம்ப கொஞ்ச நேரத்தை இதுக்கு செலவு பண்ணுவோம் .
நன்றி வார இதழ் ..............
ஒலி (sound ) கேக்குறதுக்கு மட்டும் இல்ல பாக்குறதுக்கும் தான்.
ஒலி (sound ) கேக்குறதுக்கு மட்டும்னு நினைச்சீன்களா ?ஒலி மூலமா பாக்கலாம்னு சொன்னா நம்புவீங்களா?
உண்மைதாங்க.'டேனியல் க்ரிஷ்'(46 ) அப்படிங்கிற அமெரிக்கர்தாங்க ஒலி-ஐ பயன்படுத்தி தன் தினசரி வேலைகளை செய்றாரு.இதற்க்கு பேர் எக்கோலொக்கேஷன் (echolocation).இவரை 'வாழும் அதிசயம்'-னு சொல்றாங்க.ஆச்சர்யமா இருக்கு தானே.
இவரை உதாரணமா எடுத்துகிட்டு தான் இப்போ வெளிவந்து இருக்குற 'தாண்டவம்' படத்தோட கதாநாயகன் கதாபாத்திரத்துக்கு இவரோட இந்த இயல்பை தான் சித்தரிச்சு இருக்காங்களாம்.
இவர் பிறந்து 13 மாதத்துலையே கேன்சரால கண் பார்வை போயிடுச்சாம்.அதனால அவர் கேக்குற ஒலியை துல்லியமா உணர்ந்து அது எந்த மாதிரி பொருளா இருக்கும்னு கற்பனைல அதுக்கு உருவம் குடுக்க ஆரம்பிச்சு இருக்கார்.அப்பறம் 'விசில்' அடிச்சு அது சுவருல பட்டு எதிர்ஒலிக்குரதை வச்சு அவருக்கும் அங்க இருக்குற பொருளுக்கும் இடையில இருக்குற தூரத்தை கணிக்க ஆரம்பிச்சவர் அது அப்படியே பழகிபோய் ஒலி மூலமாவே தன் தினசரி வேலைகளை செஞ்சு பார்வை உள்ளவங்களுக்கு இணையா இன்னைக்கு வாழ்ந்துகிட்டு இருக்கார் .
இவர் லேப்டாப் கூட பயன்படுதுறார்.பார்வை இருக்குறவங்க உபயோகபடுதுற லேப்டாப் (எப்படினா ,கட்டளைகளை ஒலியாக மாத்தக்கூடிய சிறப்பு மென்பொருள் மூலமா) பார்வை இல்லாதவங்க உபயோகப்படுதக்கூடிய லேப்டாப் -னு ரெண்டு வகையும் பயன்படுதுறாராம்.
"வேர்ல்ட் ஆச்சஸ் பார் ப்ளையண்ட் "-னு ஓர் நிறுவனத்தை 12 வருஷமா நடத்திகிட்டு இருக்காராம்.உலகத்துல இருக்குற பார்வையற்ற கொழந்தைன்களோட திறமையை இன்னம் அதிகமாக்குறதுதான் இவரோட நோக்கமாம்.இந்த
எக்கோலொக்கேஷன் முறையை இதுவரை 500 பார்வையற்றவங்களுக்கு சொல்லிகுடுத்து இருக்காறாம்.இவரை பத்தி பல்கலைகழகங்கள் தீவிரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துபாத்தப்போ இவர் மூளை எக்கோலொக்கேஷன் முறைக்கு தகுந்தமாதிரி மாறி இருக்கறதை ஒத்துக்குறாங்கலாம்.
எக்கோலொக்கேஷன் முறையை இதுவரை 500 பார்வையற்றவங்களுக்கு சொல்லிகுடுத்து இருக்காறாம்.இவரை பத்தி பல்கலைகழகங்கள் தீவிரமா ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருக்காங்களாம்.எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துபாத்தப்போ இவர் மூளை எக்கோலொக்கேஷன் முறைக்கு தகுந்தமாதிரி மாறி இருக்கறதை ஒத்துக்குறாங்கலாம்.
இவரை தொடர்பு கொள்ள ....
மின்னஞ்சல் : daniel.kish@worldaccessfortheblind .org
இணையத்தளம் : www.worldaccessfortheblind.org
(நெஜமாவே அதிசமானவர்தானேங்க.எந்த குறைபாடுமில்லாதவங்கள விட இதுமாதியானவங்கிட்ட திறமை அதிகமா இருக்கும்னு மறுபடியும் நிரூபிக்குறாங்க பாருங்க ).
நன்றி வார இதழ் ..............
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)