சென்னை தவிர மத்த இடத்துல எல்லாம் 8 மணி நேரம் பவர் கட்-னு டி.வி-யில் பார்க்கும் போதும் பேப்பர்-ல படிக்கும்போதும் அது அவ்ளோ பெரிய விஷயமா தெரியல.எட்டு மணி நேரம் பவர் கட்டாம் போ ...அப்படினு மட்டும் தான் தோனுச்சு..ஆனா அதை அனுபவிக்கும் போதுதான் கரண்ட்டோட அருமையும் ,பவர் கட்டால பாதிக்குற கஷ்டமும் புரியுது.இப்போலாம் எட்டு மணி நேரம் பவர் கட்னு சொல்ல முடியல.எட்ட்ட்ட்ட்ட்ட்ட்டு மணிநேரம் பவர் கட்னு தானாக சொல்றோம்.
அதென்ன சென்னைல மட்டும் ஒரு மணிநேரம் பவர் கட் மத்த இடத்துல எல்லாம் 8 மணிநேரம் 14 மணிநேரம் பவர் கட்.ஏன் சென்னைல மட்டும் தான் கம்பெனி நடக்குதா?ஸ்கூல் நடக்குதா?அங்க மட்டும் தான் படிக்குறாங்களா?அங்க மட்டும் தான் மக்கள் வேலைக்கு போறாங்களா?ஏன் இவ்ளோ பாரபட்சம்?
எல்லா இடத்துலயும் சமமா பவர் கட் பண்ணலாமே.சரி அட்லீஸ்ட் நாளில் ரெண்டு பங்காவது பண்ணலாமே.
சென்னை தவிர மத்த இடத்துல இருக்குறவங்கலாம் என்னவோ பாவம் பண்ணினவங்க மாதிரியும் அங்க இருக்குறவங்க மட்டும் தான் புண்ணியம் பண்ணினவங்க மாதிரியும் இல்ல இருக்கு இதுலாம் பாத்தா.இது என்ன நியாயமோ?
சரி, சென்னைல இருக்குற ஐ.டி கம்பெனி எல்லாம் கரண்ட் மிச்ச படுத்துறாங்களா?எத்தன கம்பெனில யாருமே இல்லாத கேபின்-ளையும் வெட்டியா லைட் ,ப்பான்/ஏ.சி ஓடிகிட்டு இருக்கு.ஒருநாளாவது அவங்க இந்த 8 மணிநேரம் பவர் கட் ஆகுற ஊரை எல்லாம் நினச்சு பாக்குறாங்களா?இதுமாதிரி மின்சாரத்த வீணாக்குற கம்பெனிகளுக்கு அட்லீஸ்ட் 2 நாளாவது கரண்ட் கட் பண்ணினா தான் அவங்களுக்கு அடுத்தமுறை மின்சாரத்தை மிச்சபடுத்தணும்னு எண்ணம் வரும்..மத்த ஊருகளையும் நினச்சு பாப்பாங்க.
கண்டிப்பா ஒரு ஒரு மெட்ரோ சிட்டிகல்ளையும் ,ஒரு ஒரு பன்னாட்டு நிருவனத்துளையும் பல கிராமங்களில் இருந்து ,பல டவுன்களில் இருந்து வேலை
செய்றவங்க நிறைய பேர் இருப்பாங்க.அவங்க ஜஸ்ட் தன் சொந்த ஊரை நினச்சு பாத்து, தன் தம்பி, தங்கை ,தன் உறவுக்காறங்க இத்தனை மணி நேரம் பவர் இல்லாம கஷ்டபடுராங்கலேன்னு நினச்சு பாத்து தேவை இல்லாத நேரத்துல தேவை இல்லாத இடத்துல ஓடிகிட்டு இருக்குற ப்பான்/ஏ.சி
லைட் எல்லாம் நிறுத்தலாமே.தன் நண்பர்களுக்கும் இதை அறிவுருத்தலாமே.கம்பனிகள் ஓவர் டைம் பாக்கவைக்குறதை குறைக்கலாமே.எத்தனையோ பேர் ஓவர் டைம் பாத்தா அதுல கூடுதலா ஒரு கணிசமான வருமானம் வரும்னு தேவை இல்லாம ஓவர் டைம் பக்குறவங்களும் இருக்காங்கதானே.அதை தவிர்க்கலாமே.
சில நேரம் இதை நினைக்கும் போது ,சின்னதம்பி படத்துல கவுண்டமணி சொல்வாரே ,'டே அப்பா ,உன்னால ஒரே ஒரு நல்ல விஷயம் நடக்குறது என்னனா ,கரண்ட் பில் இதுவரைக்கும் நா கட்டினதே இல்லடா' - னு அதுமாதிரி சொல்லி
நாமலே சிரிச்சுக்கவேண்டியாத இருக்கு ..
என்னுடைய தம்பி தங்கைகள் இதுமாதிரி பவர் கட்டால படிக்க கூட முடியாம அவதிபடுறாங்க..என்னால முடிஞ்ச அளவுக்கு மின்சாரத்த சிக்கனமா உபயோகபடுதுறேன் தேவை இல்லாத சமயத்துல தேவை இல்லாத நேரத்துல ஓடிகிட்டு இருக்குற ப்பான்/ஏ.சி
லைட் எல்லாம் நிறுத்திடறேன்..என் நண்பர்களுக்கும் சொல்லி இதே முறையை பாலோ பண்ணவைக்குறேன்.அப்போ நீங்க....
Nice Sri...
பதிலளிநீக்குMe too doing the same...
Thank you...
Parameshwari from Trichy
Nice Sri...
பதிலளிநீக்குMe too doing the same...
Thank you...
Parameshwari from Trichy