பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 9 நவம்பர், 2012

இன்றும் இனியவை ......


இசை தெய்வத்துக்கு சமம்னு சொல்லுவாங்க. எல்லாராலயும் பாடமுடியும் .ஆனா சிலபேராலதான் உணரவைக்க முடியும் .வரிகளுக்கு தன் குரலால உயிர் குடுக்கமுடியும்.அவங்களதான் நாம பாடகர்களா ஏத்துகிறோம் .ஒரு சந்தோஷமான துள்ளலான பாட்ட கேக்கும்போது நாமும் அந்த மூடுக்கு போகுறதும் ஒரு சோகமான அழுகையான பாட்ட கேக்கும்போது நாமும் சோகம் ஆகிட்றதும் அழுகுறதும் நல்ல இசை + பாடல் வரிகள் + பாடும் விதம் எல்லாம் சேரும்போதுதான் அமையும் .அதனாலதான் இசை கலைஞர்களை கடவுளோட அருள் இருக்குறவங்கனு கூட சொல்வாங்க .உடனே மத்தவங்களுக்கு அருள் கிடையாதான்னு எல்லாம் கேக்கக்கூடாது .சில சமயம் சில விஷயங்கள ஒத்துகிட்டுதான் ஆகணும் .


கண் போன  போக்கிலே கால் போகலாமா
கால் போன போக்கிலே மனம் போகலாமா
மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா
மனிதன் போன பாதையை மறந்து போகலாமா

திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்
வருந்தாத உள்ளங்கள் பிறந்தென்ன லாபம்
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேணும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேணும்
வாலி அவர்களின் முத்தான வரிகளில் ,TMS அவர்களின் குரலில் ,MSV அவர்களின் இசையில் 1960-களில் வெளிவந்த பணம் படைத்தவன் திரைபடத்தின் பாடல் . 


மாபெரும் சபைகளில் நீ நடந்தால்
உனக்கு மாலைகள் விழவேண்டும்  
ஒரு மாற்று குறையாத மன்னவன் இவனென்று
போற்றி புகழவேண்டும்


கண்ணதாசன் அவர்களின் வரிகளில்...


ஏழை மனதை மாளிகையாக்கி
இரவும் பகலும் காவியம்  பாடி
நாளைபோழுதை இறைவனுக்களித்து
நடக்கும்வாழ்வில் அமைதியை தேடு
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதிவரைக்கும் அமைதி இருக்கும்
மயக்கமா கலக்கமா
மனதிலே குழப்பமா
வாழ்கையில் நடுக்கமா

சுமைதாங்கி படத்தில் திரு.P .B .ஸ்ரீனிவாஸ் அவர்களின் குரலில் ,கண்ணதாசனின் வரிகள்
கிட்ட தட்ட 50 வருஷம் ஆகுது இப்பவும் இந்த பாட்ட கேட்டா மறுபடியும் மறுபடியும் கேக்கணும் போலவே இருக்கு. அவ்வளவு அழகான இசை, அர்த்தம் உள்ள வரிகள்.எவ்வளவு பெரிய மேதைகள் இவங்களாம் .இந்த பாட்ட கேக்கும் போது வர சந்தோஷத்த சொல்ல வார்த்தைகளே இல்ல .

கிட்ட தட்ட 3000 பாடலுக்கு மேல பாடின SPB அவர்கள்,ஜானகி அம்மா அவர்கள் ,சுசீலா அம்மா அவர்கள்,லதா மங்கேஷ்கர் அவர்கள் ,சித்ரா அம்மா அவர்கள்  எல்லாம் இப்பவும் அமைதியா,அடக்கமா இருக்காங்க .ஜானகி அம்மா பாடும் போது முகத்துல ஒரு சின்ன எக்ஸ்ப்ரஷன் கூட கொடுக்காம தன் குரலிலேயே அத்தனை  எக்ஸ்ப்ரஷன்-யும் குடுக்குறவங்க.இவங்ககிட்ட எல்லாம் இருந்து இப்போ இருக்குற ஜெனரேஷன் கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு

1 கருத்து:

  1. //இவங்ககிட்ட எல்லாம் இருந்து இப்போ இருக்குற ஜெனரேஷன் கத்துக்கவேண்டியது நிறையா இருக்கு//
    முதல் பாடலெழுதுவது, இசையமைப்பது, பாடுவது எப்படி என்பதை இவர்கள் கற்றாலே போதும்.

    பதிலளிநீக்கு