பக்கங்கள் (Pages)

திங்கள், 3 டிசம்பர், 2012

திருச்செந்தூர்

சமீபத்துல திருச்செந்தூர் கோவிலுக்கு போனோம் .எவ்ளளவு அழகா கடலுக்கு பக்கத்துல அம்சமா அமைஞ்சி இருக்கு கோவில்.இந்த கோவில் சென்னைல இருந்து 600 கி.மீ தூரத்துல இருக்கு.கிட்டத்தட்ட 10 மணிநேரம் பஸ்ல போனோம்னா . 2000 வருஷம் பழமையான கோவில்னு சொல்றாங்க.

 




திருச்செந்தூர் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கு .

திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. சூரபத்மனைப் போரில் வென்ற செந்தில் நின்று சிரிக்கும் கோயில் இதுதான். ஐப்பசி மாதம் இங்கு நடக்கும் சூரசம்காரம் திருவிழா பிரபலமானது.இக்கோயில் அமைந்துள்ள இடம் “திருச்சீரலைவாய்” அப்படினு முன்னாடி சொன்னங்கலாம் .

இந்த கோவிலோட வரலாறு என்னனு பாத்தோம்னா தேவர்கள் ,அவங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கசொல்லி சிவபெருமான்கிட்ட முறையிட்டாங்கலாம் . அவங்க வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினாராம் . அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினாறாம் . பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தாராம் இந்த நேரத்துல முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்திருக்கார் . அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினாறாம் . அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டாறாம் . அப்போ தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினாராம் . அவன் கேக்கலை. அப்பறம் , முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தாறாம் . வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டாறாம் . அதன்படியே முருகனும் இங்கே தங்கினாறாம். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினாறாம். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றாறாம். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' -னு மாறி இருக்கு . தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மாறி இருக்கு .



முருகனுக்குரிய ஆறுபடைவீடுகல்ல திருச்செந்தூர் மட்டும் கடற்கரையிலும், மத்த ஐந்தும் மலைக்கோயிலா அமைஞ்சிருக்கு .130 அடி உயரம் கொண்ட இக் கோயிலின் கோபுரம், ஒன்பது தளங்களைக் கொண்டதாக அமைஞ்சிருக்கு .முருகப்பெருமான் சூரனை ஆட்கொண்டபின்பு தனது வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக சிவபூஜை செய்தாறாம் . இந்த கோலத்திலேயே முருகன் வலது கையில் தாமரை மலருடன் அருளுகிறார். தலையில் சிவயோகி போல ஜடாமகுடமும் தரித்திருக்கிறார். இவருக்கு இடது பின்புற சுவரில் ஒரு லிங்கம் இருக்கு . இவருக்கு முதல் தீபாராதனை காட்டினத்துக்கு அப்பறம் தான் , முருகனுக்கு தீபராதனை நடக்கும். சண்முகர் சன்னதியிலும் சுவாமிக்கு பின்புறம் லிங்கம் இருக்கு . இந்த ரெண்டு லிங்கங்களும் இருட்டுல இருக்கறதுனால , தீபாராதனை ஒளியில் மட்டுமே பாக்க முடியும். இதுதவிர முருகன் சன்னதிக்கு வலதுபக்கதுல "பஞ்சலிங்க' சன்னதியும் இருக்கு . இவங்கள மார்கழி மாசத்துல தேவர்கள் தரிசிக்க வருவதாக ஐதீகம். சிவனுக்குரிய வாகனமான நந்தியும், முருகனுக்கு எதிரே இந்திர, தேவ மயில்களும் மூலஸ்தானம் எதிரே உள்ளன.
திருச்செந்தூரில் முருகன் சன்னதியின் மேற்கு திசையில் ராஜகோபுரம் இருக்கு . முருகப்பெருமான் இத்தலத்தில் கடலை பார்த்தபடி, கிழக்கு நோக்கி காட்சியளிக்கிறார். பிரதான கோபுரம் சுவாமிக்கு எதிரே, அதாவது கிழக்கு திசையில்தான் அமைத்திருக்க வேண்டும். ஆனால், அப்பகுதியில் கடல் இருப்பதால் மேற்கில் கோபுரம் கட்டப்பட்டுள்ளது. முருகன் மூலஸ்தானத்தின் பீடத்தைவிட, இக்கோபுர வாசல் உயரமாக இருப்பதால், எப்போதும் அடைக்கப்பட்டே இருக்கிறது. கந்தசஷ்டி விழாவில் முருகன் திருக்கல்யாணத்தின்போது நள்ளிரவில் ஒரு நாள் மட்டும் இந்த வாசல் திறக்கப்படும். அவ்வேளையில் பக்தர்கள் உள்ளே செல்ல அனுமதி கிடையாது.

முருகப்பெருமான் சூரபத்மனை, ஐப்பசி மாதம் வளர்பிறை சஷ்டியன்று வெற்றி கொண்டு ஆட்கொண்டார். இந்நாலதான் கந்த சஷ்டியாக கொண்டாடுறோம் . இது திருச்செந்தூர் தலத்தில் நடந்தது. அதனாலதான் , கந்தசஷ்டி விழா இத்தலத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.



24-12-2004-ல சுனாமி வந்தபோ எல்லா இடத்துலயும் கடல் தண்ணி முன்னாடி வந்ததுனா திருச்செந்தூர்ல மட்டும் கடல் தண்ணி உள்வாங்கிசாம் .அதாவது பின்னாடியே போச்சாம்.அதிசயமா இருக்கு இல்ல .

கண்டிப்பாக இதற்க்கு அறிவியல் ரீதியான காரணம் இருக்கும் அது என்ன என்று தேடி பிடித்து அடுத்த போஸ்ட்ல பாக்கலாம் .

திருசெந்தூரில் நவதிருப்பதி இருக்குறதா கேள்விப்பட்டு ஒன்பது கோவிலுக்கும் போயிட்டு வந்தோம்.அது என்ன என்ன கோவில் என்ன விசேஷம் அங்கனும் அடுத்த போஸ்ட்லசொல்றேன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக