பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 3 ஜனவரி, 2013

எப்படி போகறதுன்னு வழி தெரியலையா ?கவலையவிடுங்க !!!!!!!


முன்பின் தெரியாத ஊர்களுக்குச் செல்லும்போது நமக்குச் சவாலா இருப்பவை அங்குள்ள வழித்தடங்கள்தான் . எந்த வழியில போறது ? அந்த ஊருக்கு ரயில் போக்குவரத்து உண்டா?இப்படி நமக்கு தெரியாத தகவல்கள் ஏராளம்.. சிறிய ஊர்கள் தவிர சென்னை போன்ற பெரிய நகரங்களிலும் புதிதாக வருபவர்களுக்கு நிறைய சிக்கல்கள் உண்டு. சென்னைக்குப் புதுசா வரவங்க அதுவும் மொழி தெரியாமல் வெளிமாநிலத்திலிருந்து இங்கு வருபவர்களின் சிரமங்கள் பற்றிச் சொல்லவே வேண்டாம். இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டுள்ளது ‘ரூட்ஸ்’ (routes) எனும் பயண வழிகாட்டிச் சேவை அமைப்பு.

அஷ்வின் குமார், பரத் சோமானி என்ற இரண்டு சென்னை இளைஞர்களின் அக்கறையில் உருவானது இந்த அமைப்பு. இவர்கள் இருவரும் சென்னை டி.ஜி.வைஷ்ணவா கல்லூரி பட்டதாரிகள். சென்னையில் எந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டுமானாலும் 08695959595 என்ற எண்ணை அழைத்து பயணத்திற்கான வழிகாட்டுதலை உடனே பெறலாம். காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை இச்சேவை வழங்கப்படுகிறது. தொடங்குமிடத்திலிருந்து இலக்கிற்கு இடையில் உள்ள தொலைவு, பேருந்து நிறுத்தம், பேருந்து எண், வரும் நேரம், கட்டணம், சராசரி பயண நேரம் என சகல விவரங்களையும் உடனே அறிந்து கொள்ளலாம். பேருந்து மட்டுமல்ல, சென்னையில் இயக்கப்படும் பறக்கும் இரயில் சேவை விவரங்களும் தரப்படுகிறது.

இரு இடங்களுக்கு இடையே ஆன குறைந்தபட்ச தொலைவு, பேருந்து மற்றும் இரயில் பயணம் இடையேயான தொலைவு, பயண நேர ஒப்பீடு கூட வழங்கப்படுவது இதன் சிறப்பம்சமாகும்.
தமிழ்நாட்டுக்குள் எந்த நகரத்திற்கும் செல்ல பேருந்து, இரயில் போக்குவரத்து விவரங்களையும் இந்த அமைப்பு வழங்கி வருகிறது. தமிழ்நாட்டில் இருந்து இந்தியாவின் வேறு எங்கேயும் செல்ல, அங்கிருந்து தமிழகம் வர இரயில், விமான வசதிகள் குறித்த தகவல்கள் வழங்கப்படுகின்றன. இந்த அமைப்பின் மூலம் பயண முன்பதிவும் செய்யப்படுகிறது. இந்தச் சேவைகள் அனைத்தும் இலவசமாக வழங்கப்படுவதுதான் நம்பமுடியாத சாதனை. பயணச்சீட்டுக் கட்டணத்தை தவிர கூடுதல் செலவு எதுவும் இல்லை.இந்த அமைப்போட உதவியோட இனி பலருக்கும் நேர விரயம், அலைச்சல் குறையப் போவது உறுதி.
இணையதள முகவரி: www.routesindia.co.in.                 

    ----------------------------நன்றி வார இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக