இளைஞர் மேம்பாட்டிற்காகவும், கிராமப்புறக் கல்விக்காகவும் பணியாற்றி வரும் ‘புதிய தலைமுறை’ அறக்கட்டளை, குறு, சிறு மற்றும் நடுத்தர வளர்ச்சி நிலையத்துடன் (MSME-Di – Micro Small and Medium Enterprises – Develop Institute ) சேந்து இளைஞர்களுக்காக, ‘சுயதொழில் 2013’ என்கிற கருத்தரங்கம், கண்காட்சி, கையேடு ஆகியவற்றை நடத்துறாங்களாம் .
வர்ற மார்ச் 1 மற்றும் 2ம் தேதியில் இரண்டு நாட்கள், சென்னை கிண்டியில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத்தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி நிலைய வளாகத்தில் நடத்த போறாங்களாம் . இந்தக் கண்காட்சியினை தமிழக ஆளுநர் துவக்கி வைக்கிறாராம் .
இளைஞர்கள் சொந்தமாக சுயதொழில் செய்து வாழ்க்கைல முன்னேற வழி செய்ற வகையில், சுயதொழில் முனைவோருக்கான வழிகாட்டி நிகழ்ச்சியாக, இந்த நிகழ்ச்சி நடைபெற இருக்காம் .
பட்டதாரிகள், தொழிற்கல்வி கற்போர், புதிதாக சுயதொழில் தொடங்குவோர், கிராமப்புற இளைஞர்கள், சுய உதவிக்குழுக்கள், கல்லூரி மாணவர்கள், பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள், பகுதி நேர தொழில் செய்ய விரும்புபவர்கள் ஆகியோர், ‘சுயதொழில்-2013’ ல் பங்கேற்கலாமாம் .
தகவல் தொழில்நுட்பம், தையல் கலை, மெக்கானிக்கல், வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரித்தல், வேளாண்மை உற்பத்தி, எலெக்ட்ரிக்கல் மற்றும் எலெட்ரானிக்ஸ் போன்ற துறை சார்ந்த சுய தொழில் வேலை வாய்ப்புகள் கண்காட்சியில் இடம்பெறுதாம் .
மேலும், தர மதீப்பீடு எப்படிச் செய்றது , வங்கிக்கடன் வாங்க வழிமுறைகள் என்ன , புதிய உத்திமுறைகளை பயன்படுத்துதல், தன்னார்வத் திறமையை எப்படி முன்னிலைப்படுத்துவது போன்ற தலைப்புகளில் கருத்தரங்கம் நடைபெற இருக்காம் .
‘சுயதொழில்-2013’ கண்காட்சியில் கலந்துகொள்ள முன்பதிவு செய்யனுமாம் . மேலும், நுழைவுக் கட்டணம் ஒரு நபருக்கு 50 ரூபாய். பதிவு செய்பவர்களுக்கு ஒரு கையேடும், அனைத்துக் கருத்தரங்குகளிலும் கலந்து கொள்ள அனுமதியும் வழங்கப்படுமாம் .
முன்பதிவுக்கு தொடர்பு கொள்ள: புதிய தலைமுறை அறக்கட்டளை
87544 17500, 87544 17338
மின்னஞ்சல் : contact@ptfindia.org
தகவலுக்கு நன்றி ஆனால் ஏனோ தொலைபேசி எண்கள் கவனிக்கப்படுவதில்லை.
பதிலளிநீக்குGood message thank you
பதிலளிநீக்குARUN EXPORTS
8220081531
Thank you for information
பதிலளிநீக்குGunasekaran
Civil & Structural Designer
gud
பதிலளிநீக்குThanks for valuable information.
பதிலளிநீக்குKumar
East Africa
சும்மா ஏதாவது இப்படி சொல்லி காமடி பண்ணாதிங்க .....போங்க ?
பதிலளிநீக்குஇந்த மாதிரி நா 5 டைம்ஸ் போயிருப்பேன்.
ஓருல ஒரு பழமொழி சொல்லுவாங்க (ஏட்டு சொறக்க கறிக்கு உதவாதுன்னு ) அது மாதிரி இருக்கும் இந்த கதை.