பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 21 பிப்ரவரி, 2013

பறை இசை கற்றுக்கொடுக்கும் ‘புத்தர் கலைக்குழு’




விருப்பமுள்ள அனைவருக்கும்  பறையிசைப் பத்தாண்டுகளாக கத்துக்குடுத்துகிட்டு வராங்களாம் இந்த குழு .

இவங்க என்ன சொல்றாங்கனா ..
 தமிழருடைய ஆதி கலை வடிவம். எப்படியோ சாவுக்கு மட்டுமே வாசிக்க கூடிய ஒன்றாக, அமங்கலமான விஷயங்களுக்கென இது மாறிடுச்சு. அதுவும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த மக்கள் மட்டும்தான் வாசிக்கணும் அப்படீங்குற நிர்பந்திக்கப்பட்ட ஒன்றாக மாத்தப்பட்டுடுச்சு . ஆனால், இது நம் வாழ்க்கையின் இசை. கொண்டாட்டத்தின் இசை. விலங்குகளை வெற்றி கொண்டபோது முழங்கிய இசை. ஊரெங்கும் நல்ல செய்தியை சொல்வதற்குப் பயன்பட்ட இசை. வெற்றியின் இசை.இத அனைவருக்குமான கலையாக, தமிழர்களின் இசையாக மாற்றுவதுதான் எங்கள் புத்தர் கலைக்குழுவின் நோக்கம் அப்படீன்னு சொல்றாங்க மணிமாறன் மகிழினி. புத்தர் கலைக்குழுவை உருவாக்கி, வழிநடத்திச் செல்லும் பறையிசைக் கலைஞர் (‘கும்கி திரைப்படத்தில் வருகிற, ‘சொய்ங்... சொய்ங்...’ பாடல் மூலமாகப் புகழ்பெற்றுள்ள பின்னணிப் பாடகி மகிழினியின் கணவர்).

இந்த பறையிசையில சாவுக்கு ஒரு தாளம், திருமணத்துக்கு ஒரு தாளம், மாடுபிடிக்கு ஒரு தாளம்னு ஒவ்வொரு நிகழ்வுக்கும் ஒரு தாளம் உண்டுனு சொல்றாங்க . இந்தத் தாளங்கள் எல்லாமே நம்முடைய அன்றாட வாழ்க்கையிலிருந்து உருவானதுதான் . தமிழ் இசையில இசைக்குறிப்புகள் இருப்பதுபோல பறையிசைக்கும் இசைக்குறிப்புகளை உருவாக்கி இருக்காங்க இவங்க.இதுல ஆர்வம் உள்ள இளைஞர்களும் இவரோடு இணைந்து கொள்ள, இப்போது இவருடைய குழுவில் 25 பேர் இருக்கிறார்கள். இதில் 12 பேர் நிரந்தரமாகவும் மீதிப்பேர் வேலைக்குப் போய்க்கொண்டே பகுதிநேரமாக இதை செய்றாங்களாம் .இந்த புத்தர் கலைக்குழுவினர் தங்களுக்கென்று சில விதிமுறைகளை வைத்திருக்கிறார்கள். ‘சாவுக்கு பறை வாசிக்க மாட்டோம். குடிக்க மாட்டோம்’ அப்படீன்னு .

இப்படி நிகழ்ச்சிகள் நடத்துறது மூலமா கிடைக்கிற தொகையில ஒரு பங்கினை சேரிப்பகுதி மக்களின் முன்னேற்றத்திற்காகப் பயன்படுத்துறாங்க புத்தர் கலைக்குழு. அதோடு அந்தப் பகுதிகளில் தொடர்ந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளையும் நடத்துறாங்க . இந்த நிகழ்ச்சிகளின் ஆதாரமான ஒரே குரல், அனைவரும் கட்டாயம் கல்வி கற்க வேண்டும் அப்படீங்குறதுதான் .

இவை தவிர, தொடர்ந்து பயிற்சிப் பட்டறைகளை நடத்துகிறது இந்தக் கலைக்குழு. இந்தப் பயிற்சிப் பட்டறை மூன்று நாட்கள் நடைபெறுகிறது. இதில் பறையிசைத்தல், அதற்கேற்ப நடனமாடுதல், பாட்டிசைத்தல், பறையைக் கையாளுதல், பறையை உருவாக்குவது என ஏகப்பட்ட சமாச்சாரங்களின் அடிப்படைகளைக் கற்றுத்தறாங்க .

இந்தப் பயிற்சிக்கு மிகக் குறைவான கட்டணத்தையே வசூலிக்குறாங்க இந்தக் கலைக்குழு. மூன்று நாட்கள் நடக்கிற இந்தப் பயிற்சியை வேடந்தாங்கலிலேயே தங்கியிருந்து பலர் கத்துக்குறாங்க. நிறைய கார்ப்பரேட் நிறுவனங்களும் பள்ளிகளும் கூட ஆர்வத்தோட அவங்களோட இடத்துல இந்தப் பயிற்சியைத் தங்களுடைய மாணவர்களுக்கும், பணியாளர்களுக்கும் குடுக்குறாங்கலாம்.

இந்தப் பயிற்சியில் தற்போது ஐ.டி. நிறுவனங்களில் பணியாற்றும் இளைஞர்கள் கூட ஆர்வத்துடன் கலந்துகுறாங்க. ஃபேஸ்புக்கில் இருக்கிற புத்தர் கலைக்குழுவின் பக்கத்தில் இந்தப் பயிற்சிகுறித்து, அறிந்துகொண்டு நிறைய நகரத்து இளைஞர்கள் வரதா சொல்றாங்க.

புத்தர் கலைக்குழு தொடர்புக்கு:98427 75655
                                                         
                                                                     ---------நன்றி வார இதழ் 

6 கருத்துகள்:

  1. தோழி தங்களிடம் வலைபூ மற்றும் basic HTML பற்றி பேச வேண்டும் ,இதே இணைப்பில் கேள்விகளை எழுதலாமா ?அல்லது வேறு பக்கம் ஏதும் இருகிறதா பதில் அளிக்கவும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கேளுங்க சார்..

      நீக்கு
    2. சார் ,நீங்க ஏதோ basic HTML பத்தி கேக்கணும்னு சொன்னீங்க ஆனா இதுவரைக்கும் கேக்கல.நீங்க தாராளமா கேக்கலாம்.எனக்கு தெரிஞ்சா கண்டிப்பா சொல்றேன்.இல்ல நெட்-ல படிச்சாவது சொல்றேன்.

      நீக்கு
  2. பெயரில்லா12 மார்ச், 2013

    Thanks for your post. This is what im really looking for

    பதிலளிநீக்கு
  3. கலைக்குழுவின் தொடர்பு எண் தற்போது உபயோகத்தில் இல்லை

    பதிலளிநீக்கு