ஒரு நாள் நான் பஸ்ல போயிட்டு இருந்தப்போ ,ஒரு பிரபலமான கோவில் இருக்குற ஸ்டாப்ல ஒரு பொண்ணு ஏறினா ..20-ல் இருந்து 30-குள்ள தான் அந்த பொண்ணு வயசு இருக்கும்.
கண் கருவிழி ரெண்டும் கண்ணோட மேல போய் தொடர்ந்து கண்ண சிமிட்டிகிட்டே இருந்தா.பஸ்ல ரொம்ப கூட்டம்.அந்த பொண்ண நிக்க கஷ்டப்படுரத்தை பாத்து நான் உக்காந்து இருந்த சீட்டை விட்டு எந்திரிச்சு அந்த பொண்ணை உக்காரவச்சேன்.ரொம்ப டிராபிக் இருந்ததால ரொம்ப மெதுவாதான் டிரைவர் பஸ்-ஐ ஓட்டினார்.சில நிமிஷம் கழிச்சு அந்த பொண்ணு தனக்கு கண் தெரியாதுன்னு சொல்லி சாப்படல ரொம்ப பசிக்குது எதாவது பணம் குடுங்கன்னு கேட்டுச்சு.
நாமதான் இளகி உருகி ஓடுற மனசுக்காரங்களாச்சா ..அப்படியாப்பானு கேட்டு என் ஹேன்ட்பாகில் இருந்து பணம் எடுத்து குடுத்தேன்.அடுத்து ஒரு நாலாவது ஸ்டாப்-இல் வேகமா கொஞ்சம் கூட தடுமாறாம எறங்கி எல்லாரையும் தள்ளிகிட்டு வேகமா நடந்தது அப்போதான் தெரிஞ்சது நான் எமாந்துட்டேன்னு அந்த பொண்ணுக்கு கண்ணு தெரியும் என்னை ஏமாத்திட்டு போயிருக்குனு. அட கொடுமையே இப்படியா காலங்காத்தால ஏமாறனும்.எப்படில்லாம் ஏமாத்துறாங்க என்ன நானே திட்டிகிட்டு போனேன்.
கொஞ்சம் நாள் கழிச்சு அதே பொண்ணு வேற ஒரு ஸ்டாப்ல ஏறினது.நான் பாத்துட்டு என்ன பண்றான்னு பாக்கலாம்னு திரும்பி நின்னுகிட்டு இருந்தேன்.லாஸ்ட் சீட்ல உக்காந்து இருந்த
ரெண்டு பசங்ககிட்ட சில நிமிஷம் கழிச்சு அதே டயலாக் சொன்னிச்சு வந்ததே கோவம் அந்த பொண்ணை லெப்ட் அண்ட் ரைட் வாங்கினேன்.எல்லாருக்கும் ஹெல்ப் பண்ற மனசு இருக்கு ,உன்ன மாதிரி ஆளாலதான் ஹெல்ப் பண்ண கூட நிறையபேர் பயபடுறாங்கனு சொல்லி அந்த பசங்ககிட்ட ஏதும் குடுக்காதீங்கன்னு சொன்னேன்.அடுத்த ஸ்டாப்ல எறங்கி வேகமா போய்டுச்சு அந்த பொண்ணு.அதுக்கு அப்பறம் அந்த சைடு ரொம்ப நாலா இல்ல மாசமாவே நான் பாக்கள.
ஏதோ என்னால முடிஞ்சது அண்ணைக்கு ரெண்டு பசங்க பணத்தை காப்பாத்தினேன் ,ஆனா வேற பஸ்ஸே இல்லையா இல்ல வேற பஸ் ரூட்டே இல்லையா என்ன ?!!!எத்தன பேரை அந்த பொண்ணு இப்படி ஏமாதிச்சோ என்ன மாதிரி எத்தன பேர் ஏமாந்தாங்களோ?!!!
உழச்சு சம்பாரிக்காம மத்தவங்கள ஏமாத்தி ஏன்தான் இப்படி பண்றாங்களோ ...ஏமாறுறவங்க இருக்குறவரைக்கும் ஏமாத்துறவங்க இருப்பாங்கதான்.
வறுமை கொடுமை...
பதிலளிநீக்குஏமாந்தவன் தான் குற்றவாளி...