பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 1 மார்ச், 2013

ஆஸ்திரேலியாவில் 1000 பேர் தமிழ் படிக்கிறாங்களாம்


ஆஸ்திரேலியால ஏறத்தாழ 35 வருஷமா  தமிழ்ச் சிறுவர்களுக்குத் தமிழ் மொழியைசொல்லிகுடுக்குற வேல நடந்துகிட்டு இருக்காம்.1970ம் ஆண்டுகளில் தமிழகத்திலிருந்து ,து சிட்னி நகர்ல குடியேறிய தமிழ் பெற்றோர்கள்அவங்க பிள்ளைகள தாய்மொழியை விட்டு விலகி, ஆங்கில மொழியின் தாக்கத்திற்கு உள்ளாவதை உணர்ந்து , இந்த நிலை தொடராமல் இருக்க, ஆஸ்திரேலியாவின் முதல் தமிழ்ப் பள்ளியாக 1977ம் ஆண்டு, ‘பாலர் மலர் தமிழ்ப் பள்ளி’ தொடங்கப்பட்டுச்சாம் . ஆரம்ப காலங்களில் வார இறுதி நாட்களில் வகுப்புகள் பலருடைய வீடுகளில் நடத்தப்பட்டதாம் . அதுக்கு அப்பறம்  மாநில அரசின் அனுமதி வாங்கி  சிட்னியின் புறநகர்களில் ஒன்றான ஆஷ்பீட்டில் உள்ள அரசுப் பள்ளியில் வகுப்புகள் நடைபெறத் தொடங்கிச்சாம் . இப்படித் தொடங்கப்பட்ட பாலர் மலர் இன்று சிட்னியில் 5 கிளைகளாக விரிந்து,  தமிழ் மொழியையும் கலாச்சாரத்தையும் வளர்த்து வருகின்றதுனு சொல்றாங்க .

பாலர் மலர் தொடங்கி, பத்து ஆண்டுகளுக்கு அப்பறம் , இலங்கையிலிருந்து வந்து வாழ்ந்த சிறுவர்களுக்காக   சிட்னி சைவ மன்றம் ஹோம்புஷ் என்ற புறநகரில் தமிழ்க் கல்வி நிலையம் ஒன்றைத் தொடங்கி, தமிழ்ப்பணியை செஞ்சுக்கிட்டு வராங்களாம். அதுக்கு அப்பறம்  ,  சிட்னியின் மற்ற பகுதிகளிலும் பள்ளிகள் துவக்கப்பட்டு, தற்போது 11 பள்ளிகள் தமிழ் கதுக்குடுதுகிட்டு இருக்காம்.. சிட்னியில் மட்டும் 1,000 மாணவர்களுக்குமேல் தமிழ் கத்துக்குறாங்கலாம் .

ஆஸ்திரேலியாவின் மற்ற மாநிலங்களில் உள்ள மெல்பெர்ன், பிரிஸ்பேன், பெர்த், கான்பரா, அடிலெட் போன்ற நகரங்களிலும் தமிழ்ப் பள்ளிகள் துவங்கியாச்சாம்.
                            -நன்றி வார இதழ் 

ம்ம்ம்ம்ம்...ஆனா தமிழ்நாட்ல இருந்துகிட்டு தமிழ்ல பேசினா அவமானமா நினைக்குறாங்க சிலபேர் .என்னத்த சொல்ல ..

4 கருத்துகள்:

  1. பெயரில்லா02 மார்ச், 2013

    Tamilnattila English padikkiraanga. australiavila Tamil padikiraanga. Enna koduma sir ithu

    பதிலளிநீக்கு
  2. இது ரொம்ப ஓல்ட் நியூஸ் ​.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஐயா குடை பிடிச்சுக்கிட்டு போற பெரியவரே , உங்க அளவுக்கு எனக்கு ஞானம் இல்ல.எனக்கு இப்போதான் தெரிஞ்சது.உங்களுக்கு முன்னாடியே தெரிஞ்சதுனா கருத்து சொல்லறதை நிறுத்திட்டு மத்தவங்களுக்கும் சொல்லலாமே .

      நீக்கு