பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 8 மார்ச், 2013

பொறந்தா இப்படி பொறக்கணும்....

ஆசையா அன்ப கொட்டி இந்த செல்ல  பிராணிய வளத்துட்டோம் ,இப்போ ரெண்டு நாள் வீட்ல
நாம இருக்க முடியாது.இந்த செல்ல பிராணிய யார் பாத்துப்பா?அப்படியே யாரவது பாத்துகிட்டாலும் நாம பாத்துக்குற மாதிரி வருமா ?இப்படி எல்லாம் பொலம்புறவங்களுக்காகவே பெட் 101(PET 101)-ங்கற பிராணிகள் மேலாண்மை நிறுவனம் ஒரு சொகுசு ஹோட்டல்-ஐ  ஆரம்பிச்சு இருக்காங்களாம்.

இந்த ஹோட்டல்ல நாய்களுக்காக ஏ.சி ரூம் ,அதுவும் வசதிக்கு ஏத்த மாதிரி டீலக்ஸ் ,ஆர்டினரினு ரெண்டு வைகைல,நாய்களுக்காக தயாரிக்கப்பட்ட பெட் வசதி,வேளா வேலைக்கு சாப்பாடு,நாய் வாக்கிங் போகுறதுக்கு விளையாடுறதுக்கு மைதானம்,உடம்ப கவனிச்சுக்க டாக்டர்,24 மணிநேர சி.சி.டி.வி கண்காணிப்பு ,உடனடி முதலுதவி சிகிச்சை வசதி,நாய்களை குளிப்பாட்டி சிங்காரிக்க தனி இடம்,இவங்கள கண்காணிக்க 24 மணிநேரமும் காவலுக்கு ஆள்னு இப்படி ஏகப்பட்ட வசதிகள்.

வெளிநாடு போறவங்க ரெண்டு மூணுமாசம் கூட இந்த தங்களோட செல்ல பிராணிய விட்டுட்டு போறாங்களாம்.இப்படி போறவங்க தங்களோட நாயை தினமும் பாக்கணும்னு ஆசப்பட்டாங்கனா ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் வாட்ஸ் ஆஃப் மூலமாக நாயின் டெய்லி  சேட்டைகள  படம் பிடிச்சு  அனுப்பிவிடுகிறாங்களாம்.போட்டோலாம் பத்தாது வீடியோ வேணும்-நு கேக்குறவங்களுக்கு ஸ்கைப் இணையதளம் மூலமாக வீடியோ காலிங் வசதியில அவங்களோட நாயோடு பேச கொஞ்ச ஏற்பாடு தராங்களாம் இந்த நிறுவனம்.

சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலை, உத்தண்டியில்இருக்காம் இந்த பெட் ஹோட்டல். ஒரே நேரத்தில் 25 நாய்கள் வரை இங்கே தங்கி, ஓய்வெடுக்க முடியுமாம். இங்க  நாய்களை தங்கவைக்க எவ்ளோ பணம்தெரியுமா சாதாரண அறைக்கு  ஒரு நாளுக்கு 500, டீலக்ஸ் அறைக்கு  ஒரு நாளுக்கு ஆயிரம் வரைக்கும் கூட ஆகுமாம். 



PET101 தொடர்புக்கு: 91768 78969 - ஸ்ரவன்
     -அதாங்க சொன்னேன் பொறந்தாலும் இப்படி பட்ட செல்லமா பொறக்கணும்னு.



ஃபேஸ்புக் பக்கம்.

இவ்வளவுலாம் என்னால முடியாது வேற எதாவது வழி இருக்கானு நினைக்குறவங்களுக்கு ஃ பேஸ்புக்-ல பெட் சிட்டர்ஸ்  (PET SITTERS)குழுவில் இணைந்துகொள்ளலாம்.நீங்க எங்கயாவது வெளியூர் போகணும் உங்க செல்ல பிராணிய யாராவது பாத்துகிட்டா  நல்லா  இருக்கும்னு நினச்சா இந்த குழுவுல சொன்னா போதும் உங்கள மாதிரியே ஆர்வம் இருக்குறவங்க யாரவது அந்த பொறுப்பை ஏத்துப்பாங்கலாம்.இது மாதிரி வேற யாராவது கேட்டாலும் நாமளும் இந்த பொறுப்பை ஏத்துக்கலாம்.

இதை  இந்த குழுவுல இருக்குறவங்க எந்த பணமும் வாங்காம மனதார செய்றாங்கங்கறதுதான் இந்த குழுவோட ஸ்பெஷாலிட்டியே.

இந்த தொடங்கினவங்க வைஷ்ணவி.இவங்களுக்கு செல்ல பிராணிகள் மேல ரொம்ப இஷ்டமாம்.ஆனா வேல விஷயமா 
பெங்களூருவுக்கும் சென்னைக்கும் அடிக்கடி போகவேண்டி இருக்கறதால நண்பர்களோட சேந்து இப்படி ஒரு குழுவை தொடங்கி இருக்காங்களாம்.

               எப்படி எல்லாம் யோசிக்குறாங்கயா !!!! 

ஆனா இப்படி ஒரு ஐடியாவுக்காகவே இத தொடங்கினவங்களை ரொம்ப பாராட்டலாம்.
www.facebook.com/petsittersindia

4 கருத்துகள்:

  1. பிளாக் நல்லா இருக்கு. என்னால படிக்க முடியல. காரணம் எழுத்து ரொம்ப பொடிசு. இரண்டு கருப்பு பெக்ரவுண்ட்ல வெள்ளை எழுத்து.

    வெள்ளை பேக்ரவுண்ட்ல கருப்பு எழுத்த ட்ரை பண்ணுப் பாருங்க.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சார் , சொன்னதை நான் மாற்ற முயற்சி பண்றேன் .அடுத்த போஸ்ட் -ல் இருந்து font size அதிகம் பண்றேன்.

      நீக்கு
  2. எப்படி எல்லாம் யோசிக்குறாங்கயா !!!!

    இப்படி ஒரு ஐடியாவுக்காகவே
    இத தொடங்கினவங்களை ரொம்ப பாராட்டலாம்.

    பதிலளிநீக்கு