பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 24 ஏப்ரல், 2013

8 நாள் மஹாராஜா !!!!



'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-பேரே நல்லா இருக்குல்ல.2010-ஆம் ஆண்டுல இருந்து இந்தியாவுல இயக்கப்படுற இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ்-ல பயணம் பண்றது தான் ஆசியாவிலேயே ரொம்ப காஸ்ட்லியான ட்ரைன் பயணம்.ஏன்னு கேக்குறீங்களா?


இந்த ட்ரைனோட கம்மியான டிக்கெட் எவ்ளோ தெரியுமா ?
ஒரு பயணிக்கு ஒரு நாளுக்கு 800 டாலர்.நம்ம நாட்டோட பணத்தின் படி ,சுமார் 42,600 ரூபாய்(சாப்பாடோட).அதுவும் இதுல இருக்குற டீலக்ஸ் பெட்டிக்கு தான்.அதிகபட்ச கட்டணம் 2500 டாலர் அதாவது இந்திய பணத்தின் படி 1,33,000 ரூபாய்(சாப்பாடோட) .இது பிரசிடன்சியல் சூட் -க்கு .


மொத்தம் 8 நாள் பயணத்துல நாட்ல(இந்தியா) முக்கியமான சுற்றுலா தலங்களை வலம் வருது இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ் .


ரயில்வேயின், இந்திய ரயில்வே கேட்டரிங் அன் டூரிசம் கார்பரேஷன் (ஐ ஆர் சி டி சி )நிறுவனமும் ,தனியார் துறையை சேர்ந்த காக்ஸ் அன் கிங்க்ஸ் இந்தியா லிட் நிறுவனமும் கூட்டுத் தொழிலா இந்த ரயிலை இயக்குறாங்க.


தங்குற அறைகள் ,ஓய்வு கூடங்கள் ,நட்சத்திர விடுதி போன்ற உணவு கூடங்கள் என 24 பெட்டிகள், ஏகப்பட்ட வசதிகளோட  இருக்குற இந்த ரயில்ல மொத்தம் 88 பயணிகள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும்.


எங்க எங்க இந்த 'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-ல போகலாம் ?

1.இந்தியாவின் பண்பாடு (ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் :      7 இரவு/9 பகல்
எங்க எங்க போகலாம் : மும்பை - அஜந்தா - உதய்பூர் - ஜோத்பூர்-பிகனேர் -ஜெய்பூர் - ரந்தம்போர் - ஆக்ரா-டெல்லி

2.இந்தியாவின் கருவூலம் (ட்ரஷர் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் :      3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி

3.இந்தியயாவின் பொக்கிஷம் (ஜெம்ஸ் ஆஃப் இந்தியா)
எத்தனை நாட்கள் :      3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் :டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி

4.இந்தியக் கலைக்கூடம் (இந்தியன் பனோரமா )
எத்தனை நாட்கள் :      7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஜெய்பூர்- ரந்தம்போர் -பாடேஹ்பூர் - ஆக்ரா-கலிலோர் -ஒர்ச்ஹா -கஜுரஹோ -வாரனாசி-லக்னோ -டெல்லி

5.ஒளிரும் இந்தியா  (இந்தியன் ஸ்ப்லண்டர்)
எத்தனை நாட்கள் :      7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் -ஜெய்பூர்-பிகனெர் - ஜோத்பூர்-உதய்பூர் -பலசினோர்-மும்பை


மேலும் விவரங்களுக்கு http://www.maharajas-express-india.com/


செவ்வாய், 23 ஏப்ரல், 2013

சிறப்பு பள்ளி !!!!

மனவளர்ச்சி குன்றியோர் ,டவுன் சின்ட்ரோம் ,ஆட்டிசம் மற்றும் கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளுக்காக ,சென்னை ஒய்.எம்.சி.ஏ கல்லூரி சிறப்பு பள்ளி இருக்கு.இங்க இப்போ 20 குழந்தைகள் இருக்காங்க.


இந்த குழந்தைகளுக்கு உடல் மற்றும் மூளை திறனை வளக்கறதுக்கு யோகா,ஜிம்னாஸ்டிக் ,நீச்சல் போன்ற பலவகையான பயிற்சிகள் சொல்லித்தறாங்க.

இந்த கோடை விடுமுறைக்கு அப்பறம் ஜூன் மாசம் இந்த பள்ளி திறக்கும்.இப்போ இந்த பள்ளியில் குழந்தைகள் சேக்குறதுக்கு விண்ணப்ப படிவம் குடுத்துகிட்டு இருக்காங்க.காலைல பிள்ளைங்களை கொண்டுவந்து விட்டுட்டு சாயந்திரம் கூப்பிட்டு போய்டணும்.அங்கே தங்குற வசதி இல்ல.

மேலும் விவரங்களுக்கு - 9840158373 / 04424353892

ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

வேர்ட் வேர்ட் டிப்ஸ்

புதியவர்களுக்கு வேர்ட்-ல் கண்ட்ரோல் கட்டளைகளின் ஷார்ட்கட்

ctrl + a - >  டாகுமென்ட் முழுவதையும் தேர்ந்தெடுக்க
ctrl + b - > அழுத்தமான (bold ) வடிவில் எழுத்தமைக்க
ctrl + c - > தேர்ந்தெடுத்ததை , கோப்பினை நகலெடுக்க (Copy )
ctrl + d - > ஓர் எழுத்தின் (font ) வடிவை மாற்றி அமைக்க
ctrl + e - > நடுவே டெக்ஸ்ட் அமைக்க
ctrl + f - > குறிப்பிட்ட சொல் அல்லது டெக்ஸ்ட் அமைந்துள்ள இடத்தை கண்டறிந்து அதன் இடத்தில் வேறு ஒரு சொல் அமைக்க .மீண்டும் தேடலை தொடர Alt +Ctrl +y
ctrl + g - > ஓரிடம் செல்ல
ctrl + h - > ( ஒன்றின் இடத்தில ) மற்றொன்றை அமைத்திட (Replace )
ctrl + i - > எழுத்து /சொல்லை சாய்வாக அமைக்க
ctrl + j - > பத்தி ஒன்றை இருபக்கமும் சீராக ,நேராக (Justify ) அமைக்க
ctrl + k - > ஹைப்பர் லிங்க் ஒன்றை ஏற்படுத்த
ctrl + l - > பத்தி ஒன்றை இடது பக்கம் சீராக நேராக அமைக்க
ctrl + m - > பத்தியினை இடதுபுறமாக சிறிய இடம் விட
ctrl + k - > புதிய டாகுமென்ட் உருவாக்க
ctrl + o - > டாகுமென்ட் ஒன்றை திறக்க
ctrl + p - > டாகுமென்ட் ஒன்றை அச்சடிக்க
ctrl + q - > பத்தி அமைப்பை நீக்க
ctrl + r - > பத்தியினை வலது புறம் சீராக நேராக அமைக்க
ctrl + s - > தானாக டாகுமென்ட் பதியப்பட (Auto save )
ctrl + t - > பத்தியில் இடைப்பட்ட இடத்தில இடைவெளி (hanging ) அமைக்க
ctrl + u - > டெக்ஸ்டில் அடிக்கோடிட
ctrl + v - > தேர்ந்தெடுத்ததை ஒட்டிட
ctrl + w - > டாகுமெண்டை மூடிட
ctrl + x - > தேர்ந்தெடுத்ததை அழிக்க ,நீக்கிட
ctrl + y - > இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மீண்டும் மேற்கொள்ள
ctrl + z - > இறுதியாக மேற்கொண்ட செயல் பாட்டினை மாறாக மேற்கொள்ள

சனி, 20 ஏப்ரல், 2013

இன்டர்நெட் - பிள்ளைகள் , பெற்றோர்கள்

பிள்ளைங்கள் இன்டர்நெட்டை சரியான முறையில் பயன்படுத்துறாங்களா??
வேகமா ஓடிகிட்டே இருக்க வேண்டிய இந்த காலத்துல ,பெற்றோர்கள் பிள்ளைங்க பக்கத்துல இருக்க முடியாம போகுது.பிள்ளைங்களும் இப்போ கணினியும் இண்டர்நெட்டும் இருந்தா போதும் பொழுது போய்டும்ங்குற நிலைமைல இருக்காங்க.

 ஆனா தங்கள் பிள்ளைங்கள் இன்டர்நெட்டை சரியான முறையில் பயன்படுத்துறாங்களாங்குற பயம் அநேக பெற்றோர்களுக்கு இருக்கும்.

வன்முறை தூண்டுற தளங்கள்,இனவேறுபாடை தூண்டும் தளங்கள்,பாலியல் தளங்கள்,போதைக்கு அடிமையாக்குற தளங்கள் ,டேட்டிங் போன்ற தேவை இல்லாத தளங்களுக்கு அவர்கள் அடிமையாகுறாங்களானு கூட தெரிஞ்சிக்க முடியாத நிலை ,அப்படியே பெற்றோர்கள் கூடவே இருந்தாலும் ஒரு கண் அசருற நேரத்துல நம்மள மீறி போகும் சில சமயம்.

பிள்ளைங்ககிட்ட செய்யாதே ,போகாதே, பக்காதேனு சொன்னா அநேக குழந்தைகள் அதை 'என்னனுதான் பாப்போமே'னு செஞ்சுதான் பாப்பாங்க.அது அவங்க தப்பில்ல.அந்த வயசுக்கே உரிய ஆர்வம்.

 இந்த மாதிரி சமயத்துல ,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைங்களை கண்கானிக்குறதுக்காகவே ஒரு ப்ரோக்ராம் இருக்கு .அதன் பேர் k 9 web protection.

 இந்த ப்ரோக்ராம் மூலமா ,பிள்ளைங்கல இணையத்துல கட்டுப்பாடோட வழிநடத்த வழிகளை செட் செஞ்சுடலாம்..பெற்றோர்கள் பக்கதுல இல்லைனாகூட இந்த செட்டிங்க்ஸ் மூலமா பிள்ளைகள் எந்த சூழ்நிலையிலும் வழிமாறி போகமா இந்த ப்ரோக்ராம் பாத்துக்கும்.

 பிள்ளைகளோட வயசுக்கு தகுந்த மாதிரி நாம செட்டிங்க்ஸ்ல தடைகளை ஏற்படுத்தலாம்.

இந்த தடைகள் செயல்படுறவகைல safe search என்ற வழியை அமைக்கலாம். 

குறுப்பிட்ட நேரத்துல இன்டர்நெட் இணைப்பு இல்லாம கூட செய்யலாம்.

நாம செட் பண்ற பாஸ்வோர்ட்டுக்கு மட்டும் இன்டர்நெட் வேலைசெய்ற மாதிரி செட் பண்ணலாம்..

இதையும் மீறி யாராவது தடை செய்யப்பட்ட தளங்களை பார்த்தாங்கனா எப்போ பாத்தாங்க ,எந்த நேரம் போன்ற விபரத்தை நம்ம மின் அஞ்சலுக்கு அனுப்புற மாதிரி செட் பண்ணலாம்.

இந்த ப்ரோக்ராமை http://www1.k9webprotection.com/get-k9-web-protection-free என்ற தளத்தில் இருந்து டவுன்லோட் செஞ்சுக்கலாம்.இதற்க்கான இலவச லைசன்ஸ் கீ இந்த தளத்துளையே கிடைக்கும்.இந்த ப்ரோக்ராம்-ஐ iphone ,ipod touch போன்றவற்றிலும் பயன் படுத்த முடியுமாம்

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

இயற்கை உணவகம்

தமிழகத்தின் முதல் இயற்கை உணவகம் சிவகாசியில், மாறன்ஜி என்பவர் 6 வருஷங்களா நடத்திகிட்டு வராறாம்.

 இவர் முளைகட்டிய தானியங்கள்,கற்றாழைப் பாயசம்,நெறிஞ்சிமுள் சாறு, துளசி டீ போன்ற எண்ணற்ற மூலிகைத் தாவரங்களைக்கொண்டு 18 வித நோய்களுக்கான உணவுகளைத் தயாரிச்சு , மிகக் குறைஞ்ச விலையில் கொடுத்து வராறாம் . சிவகாசி மட்டுமில்லாம , தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்தும் இந்த இயற்கை உணவகத்தில் சாப்ட்டுட்டு, மாறன்ஜியிடம் ஆலோசனைகளையும் கேட்டு போறாங்களாம் நிறையா பேர்.

உடம்பு இளைக்க அருகம்புல் சாறு, மலச்சிக்கல் மற்றும் மூளைச்சூட்டை தணிக்க நெருஞ்சிமுள் சாறு, முடி உதிர்தலை தவிர்க்க கறிவேப்பிலைக் கீர், சிறுநீர் கல் அடைப்பைப் போக்க வாழைத்தண்டுச் சாறு, ஞாபக சக்திக்கு வல்லாரை சூப், ஆரோக்கியத்திற்கு தினைமாவு லட்டு, நவதானிய லட்டு, முளைகட்டிய தானியங்கள் போன்றவற்றை காலை 6 மணிமுதல் மதியம் 1 மணிவரையும், பிற்பகல் 3 மணிக்கு மேல் முளைகட்டிய பயறு மற்றும் சுண்டல் வகைகள், சர்க்கரை நோயைக் குறைக்க வெந்தயக்களி,நெல்லிக்காய் ரசம், மூட்டு வலிக்கு முடக்கத்தான் ரசம், ரத்தசோகைக்கு பீட்ரூட் சூப், சளி, இருமலை போக்க துளசி டீ என்று 18 வகை நோய்களுக்கான இயற்கை உணவுகளையும் சூப்களையும் இங்கு தயாரிச்சு குடுக்குறது இந்த உணவகத்தோட சிறப்பு.

மேலும் தமிழகத்திலேயே நோய்களைக் குணமாக்க ஆரம்பிக்கப்பட்ட முதல் இயற்கை உணவகம் இதுதான் என்பது சிறப்பு இன்டர்நேஷனல் நேச்சுராலாஜி அமைப்பின் (INO) மூலமாக மத்திய அரசின் சிறந்த இயற்கை உணவகம் என்ற விருதைப் வாங்கி இருக்காம் , மாறன்ஜியின் இந்தத் தாய்வழி இயற்கை உணவகம்.

 தொடர்புக்கு: மாறன்ஜி   :   93674 21787

                                 --நன்றி வாரஇதழ் 

வியாழன், 18 ஏப்ரல், 2013

கூகுளின் கண்ணாடி !




  இது என்ன கண்ணாடினு பாக்குறீங்களா? சாதாரணக் கண் கண்ணாடியைப்போலவே இருக்குற இதுல, போன் பேசலாம், வீடியோ எடுக்கலாம், போட்டோ பிடிக்கலாம், இண்டர்நெட்டில் சாட்டிங்கும் பண்ணலாம், யூ டியூபில் படம்  பாக்கலாம், கேம்ஸ் ஆடலாம்.5 MP கேமரா ,வீடியோ ரெகார்டிங்,ப்ளூடூத்,வை ஃபை,12 GB மெமரினு ஏகப்பட்ட அம்சங்கள்.  கூகிள் இந்த கண்ணாடியை அறிமுகம் செய்து இருக்காங்க.


 அடுத்த வருஷம் இந்த கண்ணாடி சந்தைல வந்துடும்னு  சொல்றாங்க.சில பேரை செலக்ட் பண்ணி அவங்க மூலமா இந்த கண்ணாடியல இன்னும் என்ன என்ன வசதிகள சேக்கலாம்னு டெஸ்ட் செய்துக்கிட்டும் இருக்காங்களாம்.கண்டிப்பா விலை அதிகமாகதான் இருக்கும்.

 (ம்ம்ம்ம் ..என்ன கண்ணாடிய விட பொண்ணு சூப்பரா இருக்கா ..ம்ம்ம்ம்...நீ என் இனமடா !!!! )   

செவ்வாய், 16 ஏப்ரல், 2013

கருவில் 0-9 மாதங்கள் நம் வளர்ச்சி

நாம கருவில் எப்படி வளருறோம்னு தெரியுமா?கருவில் உருவானது முதல் ஒன்பது மாதங்கள் எப்படி வளர்ச்சி அடைறோம்னு தெரியுமா?இந்த அமேசிங் வீடியோ பாருங்க.





திங்கள், 15 ஏப்ரல், 2013

குறும்பட இயக்குநர் - என்ன என்ன தகுதி அவசியம் ???

கலைஞர் டி.வி இல் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குநர் எப்போவாவது பாக்குற வழக்கம் எனக்கு. எவ்வளவு திறமைகளோட இருக்காங்க எல்லாரும்.

குறிப்பிட்ட நிமிஷத்துக்குள்ள எவ்ளோ அழகா,அளவான நடிப்போட,அளவான இசையோட ,நல்ல கதை கருத்துனு எல்லாம் கலந்து எடுக்குறாங்க.

பல ஷார்ட் பிலிம்கள் நான் ரசிச்சு பாத்ததுன்டு ,பாலாஜியின் ஷார்ட் பிலிம்கள் ரொம்ப பிடிச்ச வகை. அவரோட 'காதலில் சொதப்புவது எப்படி' ஷார்ட் பிலிம் படமாவும் எடுத்துட்டார்.இதுபோல பீட்சா இயக்குனர்..இன்னம் பலபேர் வரப்போறாங்க.

இந்த வாரம் பார்த்து ரசித்த ஹாரர் பிலிம் வரிசையில் முதல் படம் நிஜமாவே அவ்ளோ பயமா கச்சிதமா அவ்ளோ குறுகிய நேரத்துல தெளிவா எடுத்து இருந்தாங்க.

 இதுமாதிரி திறமை இருக்குறவங்க எப்படி நாமும் ஷார்ட் பிலிம் எடுக்கலாம்னு யோசிக்குறவங்களுக்கு ஒரு உபயோகமான நியூஸ் இப்போ சொல்ல போறேன்.

 ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க என்ன என்ன அம்சங்கள் இருக்கணும்? கொஞ்சம் நண்பர்கள் , ஒரு கேமரா, ஒரு கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் போதும். 

சரி ,எப்படி ஆரம்பிக்கலாம் என்ன என்ன முதல்ல தயார் பண்ணனும் ?இதோ..

  • முதல்ல ஒரு கதைக்கருவை தேர்வு செஞ்சுக்கணும்.
  •  உங்கள் கதைக்கரு எளிமையா, ஒருநாளில் ஒரு சில இடங்களில் நிகழ்வதாக ஒரு சில கதாபாத்திரங்களுடன் இருக்குறமாதிரி பாத்துக்கணும். 
  • அதை பத்து-பதினைந்து நிமிஷ படத்துக்கான திரைக்கதையாக மாத்தனும். 
  • அடுத்து எங்கெல்லாம் படமாக்குறது , யார் யார் எல்லாம் நடிக்க போறாங்கனு முடிவு செய்யணும். 
  •  அப்பறமென்ன,உங்ககிட்ட டிஜிட்டல் கேமரா இருக்கா? மொபைல் கேமரா இருந்தாலும்கூடபோதும் .( குறைந்தது 16ஜிபி அளவுள்ள மெமரி கார்டாவது வச்சுக்கணும்) 
  • கணினியில நீங்க எடுத்த காட்சிகளை சேமிச்சுக்கனும் உங்கள் கணினியில் SONY VEGAS PRO ˆ என்கிற மென்பொருளை டவுன்லோட் செஞ்சு , இன்ஸ்டால் செஞ்சு வச்சுக்கணும் . இது இணையத்தில் தேடினால், இலவசமாகவே கிடைக்குமாம் . 
  • இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, படம் பிடித்த காட்சிகளை வீட்டிலேயே வெட்டி ஒட்டலாம். எடிட்டிங் வேலைகள் அனைத்தையும் முடிச்சுடலாம்.. 
  • அடுத்து டப்பிங்.உங்களுடைய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வாய்ஸ் ரெகார்டர் (VOICE RECORDER) இருக்கும். அதில் சிறிய மைக் உதவியோடு வசனங்களை பதிவுசெய்யலாம் . பதிவு செய்த வசனங்களை SONY VEGAS PRO மென்பொருள் உதவியோடு சரியான இடத்தில் சேக்கலாம்.
  •  அதோடு பின்னணி இசை தேவைப்பட்டால், இணையத்தில் கிடைக்கிற இலவச இசைக்கோப்புகளை டவுன்லோட் செஞ்சு, வசன சேர்ப்பினைப்போலவே செய்யலாமாம். 
  • இப்போது உங்களோட குறும்படம்ரெடி . அதை அப்படியே எம்பி4 ஆக மாற்றி, யூ-ட்யூப் இணையதளத்தில் ஏற்றிவிட்டால். அப்பறம் என்ன நீங்களும் குறும்பட இயக்குநர்தான்! 

 மேலும், சினிமா குறித்த சில அடிப்படை விஷயங்களையும் தெரிந்துகொள்ள:http://en.wikiversity.org/wiki/Course:WikiUFilmSchoolCourse01 LearningtheBasicsofFilmmaking என்கிற இணையதளம் உங்களுக்கு உதவும்.

என்ன !!!!! உபயோகமா இருந்ததா?

                                               -- நன்றி வார இதழ்

ஞாயிறு, 14 ஏப்ரல், 2013

காலங்களும் நிகழ்வுகளும் ........

ஃபேஸ்புக்-ல 'தமிழ்ச் சமுதாயம் -தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி' என்ற   பக்கத்தின் ஒரு போஸ்ட்-ஐ படிச்சேன் .ரொம்ப சுவாரசியமா  இருந்தது.அந்தபோஸ்ட்டின் சில பகுதிகளை உங்ககூட ஷேர் பண்றேன்.



கி.மு 14 பில்லியன்

பெரும் வெடியில் உலகம் தோன்றியது.

கி.மு 6 - 4 பில்லியன்

பூமியின் தோற்றம்.

கி.மு. 2.5 பில்லியன்

நிலத்தில் பாறைகள் தோன்றிய காலம். முதன் முதலில் தமிழ் நாட்டில் மனித இனம் தோன்றியது. தென் குமரிக்குத் தெற்கே இலெமூரியா கண்டத்தில் முதலில் மனித இனம் தோன்றியது.

கி.மு. 470000

இக்கால இந்தியாவின் தமிழ் நாடு, பஞ்சாப் ஆகிய இடங்களில் மனித இனம் சுற்றித் திரிந்தது.

கி.மு. 360000

முதன் முதலாக சைனாவில் யோமோ எரக்டசு நெருப்பை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

கி.மு. 300000

யோமோ மனிதர்கள் ஆசியாவிலும் ஆப்பிரிக்காவிலும் சுற்றித் திரிந்தனர்.

கி.மு. 100000


நியாண்டெர்தல் மனிதன்
கிழக்கு ஆப்பிரிக்காவில் தற்கால மனிதனின் மூளை அளவு உள்ள மனிதர்கள் வாழ்ந்தனர்.

கி.மு. 75000

கடைசி பனிக்காலம.். உலக மக்கட் தொகை 1.7 மில்லியன்.

கி.மு. 50000

தமிழ்மொழியின் தோற்றம்.

கி.மு. 50000 - 35000

தமிழிலிருந்து சீன மொழிக் குடும்பம் பிரிவு.

கி.மு. 35000 - 20000

ஆஸ்திரேலிய, ஆப்பிரிக்க சிந்திய மொழிகள் தமிழிலிருந்து பிரிந்ந காலம்.

கி-மு. 20000 - 10000

ஒளியர் கிளைமொழிகள் தமிழிலிருந்து பிரிந்தகாலம் ( இந்தோ ஐரோப்பிய மொழிகள் )

கி-மு. 10527

முதல் தமிழ்ச்சங்கத்தை பாண்டிய மன்னன் காய்கினவழுதி தோற்றுவித்த காலம். 4449 புலவர்கள் கூடினர். முதுநாரை, முதுகுருகு, களரியாவிரை முதலிய நூல்கள் இயற்றப்பட்டன.

கி.மு. 10527 - 6100

பாண்டிய மன்னர்கள் காய்கினவழுதி வடிவம்பலம்ப நின்ற நெடியோன், முந்நீர்ப் விழவின் நெடியோன், நிலந்தரு திருவிற் பாண்டியன் செங்கோன், பாண்டியன் கடுங்கோன்.

கி.மு. 10000

கடைகி பனிக்காலம் முற்றுப்பெற்றது. உலக மக்சுள் தொகை 4 மில்லியன். குமரிக்கணடம் தமிழர் 100000.

கி.மு. 6087

கடல் கொந்தளிப்பில் குமரிக் கண்டம் மூழ்கியது.

கி.மு 6000 - 3000

கபாடபுரத்தைத் தலைநகரமாகக் கொண்டவன் பாண்டிய மன்னன் வெண்தேர் செழியன். இரண்டாம் தமிழ்ச்சங்கத்தை நிறுவினான். 3700 புலவர்கள் இருந்தனர். அகத்தியம், தொல்காப்பியம் முதலிய இலக்கண நூல்கள் எழுந்தன. பாண்டிய மன்னர்கள் செம்பியன் மந்தாதன், மனுச்சோழன், தூங்கெயில் எறிந்த தொடிதோட் செம்பியன் அதியஞ்சேரல், சோழன் வளிதொழிலாண்ட உரவோன், தென்பாலி நாடன் ராகன், பாண்டியன் வாரணன், ஒடக்கோன், முட்டதுத் திருமாறன் ஆண்டகாலம்.

கி.மு. 5000

உலக மக்கள் தொகை 5 மில்லியன். சிந்து சமவெளி நாகரிகம் தொடக்கம். முகஞ்சதாரோ, ஹரப்பா.

கி.மு. 4000

சிந்து சமவெளி மக்கட் தொகை 1 மில்லியன்.

கி.மு - 4000

கிருத்துவ உலக நாட்குறிப்பு ஆரம்பம். சுமேரியாவில் புதை பொருளாராய்ச்சி சிந்து சமவெளி வணிகப் பொருள் கண்டது.

கி.மு - 3200

சிந்து சமவெளியினர் 27 விண்மீன்கள் இடைத்தொடர்பு நோக்கி சூரிய, சந்திரனின் முழு மறை வடிவங்கள் நிலைபபாடு கண்டனர்.

கி.மு - 3113

அமெரிக்க- தமிழினத்தவராகிய மாயர்கள் தொடங்கிய மாயன் ஆண்டுக் கணக்கு ஆரம்பம்.

கி.மு - 3102

சிந்து சமவெளிக் தமிழர்களின் "கலியாண்டு" ஆண்டு தொடக்கம், சிந்து சமவெளியில் தமிழர்களின் நாகரிகம் தழைத் தொடங்கியது.


மண்டையோட்டு வடிவங்களின் வகைகள்

இடமிருந்து வலம்: நெடுமண்டை நீள்வட்ட வடிவம்; இரண்டு குட்டைமண்டை வடிவங்கள்- நீளுருண்டை வடிவமும் ஆப்பு வடிவமும்; நடுமண்டை ஐங்கோண வடிவம்.



கி.மு - 3100 - 3000

ஆரியர்கள் சிந்து சமவெளி வழி நுழைந்தனர். துணி நெய்தல் ஐரோப்பா சிந்து சமவெளியில் ஆரம்பித்தது. தென்னிந்தியாவில் குதிரைகள் இருந்தது. சைவ ஆகமங்கள் முதல் தமிழ்ச் சங்க காலத்தில் பொறிக்கப்பட்டன.

கி.மு - 2600

எகிப்திய பிரமிடுகள் வேலை ஆரம்பம்.

கி.மு - 2387

இரண்டாம் கடல் கொந்தளிப்பால் கபாடபுரம் அழிந்தது. ஈழம் பெருநிலப் பகுதியிலிருந்து பிரிந்தது.

கி.மு - 2000 - 1000

காந்தாரத்தில் இருந்த ஆரியர்களுடன் வடபுலத் தமிழ் மன்னர்களும் சிந்து வெளி தமிழர்களும் போர் புரிந்த காலம். கடற்பயணங்களில் புதியன கண்டுபிடித்த சேர இளவரசர்கள் ஈழத்தில் ஆண்டகாலம். கங்கைவெளி - சிபி மரபினர் ஆட்சி. சிந்து வெளி - சம்பரன் ஆட்சி.

கி.மு - 1915

திருப்பரங்குன்றத்தில் மூன்றாம் தமிழ்ச் சங்கம் நடந்தது.

கி.மு. - 1900

வேத கால முடிவு. சரசுவதி ஆறு வற்றியதினால் மக்கள் தொகை கங்கை ஆறு நோக்கி நகர்ந்தது.

கி.மு. 1500

முக்காலத்து பிராமி மொழி வழக்கத்தில் இருந்த துவாரக நகர் வெள்ளத்தில் மூழ்கியது. இரும்பின் உபயோகம். கிராம்பு சேர நாட்டிலிருத்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.

கி.மு. - 1450

உபநிசத்துக்களும் வேதங்களும் உண்டாக்கப்பட்டன.

கி.மு. - 1316

மகாபாரத கதை வசிஸ்டரால் அமைக்கப் பட்டது.


கி. மு. 1250

மோசஸ் 600,000 யூதர்களை எகிப்திலிருந்து வெளியேற்றினார்.

கி. மு . 1200

ஓமரின் இல்லயாய்டு, ஓடசி பாடல்கள் மேற்கோற்படி கிரேக்க துரோசன் சண்டை.

கி. மு. 1000

உலக மக்கள் தொகை 50 மில்லியன்.

கி. மு. 1000-600

வடக்கில் சிபி மரபினர், தெற்கில் திங்கள் மரபினர் ஆட்சி நிலவியது.

கி. மு. 950

அரசன் சாலமன் வர்த்தகக் கப்பலில் யூதர்கள் இக்காலத்து கூறப்படும் இந்தியா வருகை.

கி. மு. 950

வடமொழி முழு வளர்ச்சியடையாது பேச்சு மொழி உருவெடுத்தக் காலம்.

கி. மு. 925

யூதர்களின் அரசன் தாவிது இப்போதைய இசுரேல், லெபனானை பேரரசாகக் கொண்டிருந்தான்.

கி. மு. 900

இப்போதைய இந்தியாவில் இரும்பின் உபயோகம்.

கி. மு. 850பின்

இப்போதைய இந்தியாவின் பொதுவான மொழி தமிழ், வடமொழி, (வடதமிழ், தென்தமிழ்) என மொழிகள் உருவாயின. வடபுலத்தில் பிராமி எனவும் தென்புலத்தில் தமிழி எனவும் பெயர்பெற்றன. பிராமிக்கும், தமிழுக்கும் எழுத்திலக்கண ஒற்றுமை உண்டு. வடமொழி பாகதமாகவும், தென்மொழி தமிழாகவும் பெயற்பெற்றன. (சமசுகிருதம் வடமொழி அல்ல. காரணம் அது போதுமான வளர்ச்சி அடைந்திருக்கவில்லை.) தொல்காப்பியம்- பிராகிருதப் பிரகாசா இலக்கண நூற்கள் எழுதப்பட்டன, கடைச் சங்க காலத்தில் நற்றினை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு, கலித்தொகை, பதிற்றுப்பத்து, பரிபாடல், பத்துபாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள், திருமுருகாற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை, மருதக்காஞ்சி, முல்லைப்பட்டு, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, நெடுநல்வாடை, முதலிய நூல்கள் தோன்றின. திருக்குறள் தலையாய நூல், பின்னர் சங்க கால முடிவுக்குப் பின் சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி முதலிய ஐம்பெரும்காப்பியங்களும், முதுமொழிக்காஞ்சி, களவழி நாற்பது, கார்நாற்பது, நாலடியார் திரிகடுகம், நான்மணிக்கடிகை, சிறுபஞ்ச மூலம், ஏலாதி, ஆசாரக்கோவை, பழமொழி நானூறு, இன்னா நாற்பது, இனியவை நாற்பது, முத்தொள்ளாயிரம் முதலிய நூல்களும் தோன்றின.

கி. மு. 776

கிரேக்கத்தில் (கிரிஸ்) முதல் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டி.


குழந்தைகள் குகையில் கண்டு எடுக்கப்பட்ட மண்டையோடு. மென்டோனா, இத்தாலி. பித்திக்காந்திரோப் பஸ் 1 யின் மண்டையோடு. (தூபுவா 1891ல் கண்டு எடுத்தது) சீனாந்திரோப்பஸின் மண்டையோடு (மீட்டமைப்பு: கெராஸிமவ்)


கி. மு. 750

பிராகிருத மொழி மக்கள் மொழியாக ஆரம்பித்தது.

கி. மு. 700

சொரோஸ்டிரேணியிசம் பெர்சியாவில் சொரோஸ்டரால் துவக்கப்பட்டது, இவருடைய மதப்புத்தகம் செண்டு அவெசுடா.

கி. மு. 623- 543

கெளதம புத்தர் காலம், தற்போதைய உத்திரப்பிரதேசத்தில் பிறந்தார்.

கி. மு. 600

லாவோ - துசு காலம். துவோசிசம் சைனாவில் புழக்கம், எளிமை, தன்னலமின்மை சீனர்கள் வாழ்வானது.

கி. மு. 600

கோதடிபுத்தர் அறிந்த மொழிகளில் தமிழும் ஒன்று, கி.மு. நான்கு, ஐந்து, ஆறாம், நூற்றாண்டுகளில் குறிப்பிடத்தக்க மன்னர்கள் இளைஞன் கரிகாற்சோழன், பெருஞ்சோற்று உதயஞ்சேரலாதன். பழந்தமிழ் இசைக்கருவிகள் வடநாடு முழுவதும் வழக்கில் இருந்தன. (தோற்கருவிகள்) தமிழிலக்கணத்தைப் பின்பற்றி சமஸ்கிருதத்திலும் எழுத முயற்சி மேற்கொள்ளபட்டது. புணர்ச்சி இலக்கணம் சமஸ்கிருதத்தில் திணிக்கப்பட்டுள்ளது.

கி. மு. 599 - 527

மகாவீரர் காலம். ஜெயின மதம் தோற்றம் உயிர்த்துண்பம் தவிர்த்தல் இவரின் பெருங்கருத்து.

கி. மு. 560

பித்தகோரசு கிரேகத்தில் (கீரிஸ்) கணிதம், இசைக் கற்றுக் கொடுத்தக் காலம். மரக்கறி உண்ணல், யோகாசனம், ஓவியம் தமிழ் நாட்டில் கற்பிக்கப்பட்டன.

கி. மு. 551-478

கன்பூசியஸ் காலம். சீனர்களின் கல்விக்கு அடிப்படையே இவருடைய சமுதாய கல்வி, மக்களின் வாழ்முறை, மதம் யாவும்.

கி. மு. 500

கரிகாற் சோழன் காலம். உலக மக்கள் தொகை 100 மில்லியன். இப்போதைய இந்திய மக்கள் தொகை 25 மில்லியன்.

கி. மு. 478

இளவரசன் விசயா 700 துணையாளர்களுடன் இலங்கையில் சிங்கள அரசு ஏற்படுத்தல்.

கி. மு. 450

ஏதேன்சில் சாக்கரடீஸ் புகழோடு இருந்த காலம்.

கி. மு. 428 - 348

சாக்கரடீஸ் மாணவர் புளுட்டோவின் காலம்.

கி. மு. 400

கிரேக்கத்தில் மருத்துவமேதை இப்போகிரட்டீசின் காலம். பனினி வடமொழி இலக்கணம் அமைத்தார்.

கி. மு. 350 - 328

உதயஞ் சேரலாதன் காலம் (செங்குட்டுவன் நெடுஞ்சேரலாதன்)

கி. மு. 328 - 270

மகன் இமயவரம்பன் - நெடுஞ்சேரலாதன் ( ஆரியரை வென்றவன் - கிரேக்க யவனரை அடக்கியவன்)

கி. மு. 326

அலெக்சாண்டர் சிந்துப் பிரதேசத்தின் மீது படையெடுப்பு. வெற்றி அமையவில்லை.

கி. மு. 305

சந்திரகுப்த மெளரியரின் அட்சிக்காலம். கிரேக்க பேரரசு அமைத்த செலுக்கசை தோற்க்கடித்தவர்.

கி. மு. 302

சந்திரகுப்தரின் அமைச்சர் கெளடில்யர் அர்த்தசாத்திரம் எழுதல்.

கி. மு. 300

சீனர்கள் வார்த்த இரும்பு கண்டுபிடித்தல்.

கி. மு. 300

கல்வெட்டுகளில் சோழ, பான்டிய, சத்தியபுத்திர, சேர அரசுகள் இருந்தன. கி.மு. இரண்டாம் நூற்றாண்டு வரை தமிழ், பிராகிருதம் இரண்டும் எழுத்து மொழியாகவும் பேச்சு மொழியாகவும் விளங்கின. பிராகிருதம் - மக்களின் மொழி. நாணயங்களின் ஒரு பக்கம் தமிழ், மறுபக்கம் பிராகிருதம் என அமைந்திருந்தன.

கி.மு. 273-232

மெளரிய பேரரசர் அசோகர் காலம். தமிழ்நாடு தவிர மற்றவை இவர் வசம் இருந்தது. கலிங்க போர் இவரை புத்த மதத்திற்கு மாற வைத்தது. இவரது அசோக சக்கரம் இன்று இந்தியக் கொடியில் உள்ளது.

கி.மு. 270-245

சேரன் பல்யானை செல்கெழு குட்டுவன், சோழன் பெரும்பூண் சென்னி, பாண்டியன் ஒல்லையூர் பூதப் பாண்டியன், ஆகியோரின் காலம்.

கி.மு. 251

புத்த மதம் பரப்ப அசோகர் தன் மகனை இலங்கைக்கு அனுப்பினார்

கி.மு. 245-220

சேரன் களங்காய்க்கண்ணி நார்முடிச்சேரல் காலம்.

கி.மு. 221

புகழ் வாய்ந்த சைனாவில் 2600 கல் நீளமுள்ள பெரும் சுவர் கட்டப்பட்டது.

கி.மு. 220 - 200

கரிகாற்சோழனுக்கும் பெருஞ் சேரலாதனுக்கும் போர்.

கி.மு. 220-180

குடக்கோ நெடுஞ்சேரலாதன் ஆட்சி. உறையூர்ச் சோழன் தித்தன், ஆட்டணத்தி, ஆதிமந்தி, ஆகியோர் வாழ்ந்த காலம்.

கி.மு. 200

முனிவர் திருமூலர் காலம். 3047 சைவ ஆகமங்களின் தொகுப்பான திருமந்திரம் எழுதினார்.

கி.மு. 200

தமிழ்நாட்டில் பதஞ்சலி முனிவர் யோக சூத்திரங்கள் எழுதினார். 18 சித்தர்களில் ஒருவரான போகர் முனிவர் பழனி முருகன் கோவிலை ஏற்படுத்தினார்.

கி.மு. 125-87

ஆடு கோட்பாட்டுச் சேரலாதன் காலம்.

கி.மு. 87-62

செல்வக் கடுங்கோ வாழியாதன் ஆட்சி. பாரி, ஒரி, காரி, கிள்ளி, நள்ளி முதலிய குறுநில மன்னர்கள் ஆட்சி

கி.மு. 62-42

யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை ஆட்சி, சேரமான் மாரி வெண்கோ தொண்டியில் ஆட்சி. இக்காலத்தில் வாழ்ந்தவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன், மாங்குடி மருதனார் கல்லாடனார்.(கல்லாடம்)

கி.மு. 42-25

பெருஞ்சேரலிரும்பொறை ஆட்சி, சேரமான் மாரிவென்கோ இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, கானபெரெயில் கடந்த உக்கிரப்பெருவழுதி ஒற்றுமையாய் இருந்தார்கள். இவர்களை இன்றே போல்கநும்புணர்ச்சி என அவ்வை பாராட்டினார், மோசிக்கீரனார், பொன்முடியார் கொண்கானங்கிழான் நன்னன், கரும்பனூர்கிழன், நாஞ்சில் வள்ளுவன் குறிப்பிடத்தக்கவர்கள்.

கி.மு. 31

உலகப் பொது மறையாம் தமிழனின் நன்கொடையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவர் பிறந்த ஆண்டு.

கி.மு. 25-9

இளஞ்சேரல் இரும்பொறை ஆட்சி. பாண்டியன் பழையன் மாறன். கோப்பெருஞ்சோழன், பிசிராந்தையார், பொத்தியார், புல்வற்றூர் ஏயிற்றியனார் ஆகியோரின் காலம்.

கி.மு. 9-1

கருவூர் ஏறிய ஒள்வாட் கோப்பெருஞ்சேரல் இரும்பொறை, பாண்டியன் கீரன் சாத்தன் வாழ்ந்த காலம்.

கி.மு. 4

ஏசுநாதர் - கிருத்துவர் மதம் கண்டவர் பெத்தலயேமில் பிறந்தார்
                                         -----facebook -ல் இருந்து 

தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ............

வியாழன், 11 ஏப்ரல், 2013

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 1


நீயா நானா எனக்கு பிடிச்ச ப்ரோக்ராமில் ஒன்னு.கோபிநாத்தும் ,அவரோட திறமையான பேச்சும் எப்பவுமே ரொம்ப பிடிக்கும் .
ஒரு ஒருத்தங்ககிட்டயும் பேசி அவங்க மனசுல நினைக்குறதை அப்படியே வெளில பேசவைக்குற திறமை கோபிநாத் சார்க்கு நிறைய இருக்கு.எப்படியும் போட்டு வாங்கி மேட்டர்-ஐ வாங்கிடுவார் .

போன வாரம் நீயா நானாவின் தலைப்பு 'ஆணுக்குள் இருக்கும் பெண்மை ,பெண்ணுக்குள் இருக்கும் ஆண்மை ' .பெண்கள் எப்போல்லாம் கோவப்படுறாங்க ஆண்கள் எப்போ எல்லாம் கோவப்படுறாங்க?.ஆண்களின் பயம் என்ன?எப்போ எல்லாம் அழறாங்க?ஆண்கள் எப்போ எல்லாம் வெட்கப்படுகிறார்கள்னு நிறையா விஷயங்கள் விவாதிச்சாங்க .
சினிமாவில் ஒரு சாதாரண ஹீரோ கூட 50 பேரை அடிக்குற மாதிரி அதுவும் எப்படி இவரு பறந்து பறந்து அடிக்குறது அவங்க சுழண்டு சுழண்டு விழறதுனு  காட்றாங்க.ஆனா இந்த ஷோ -வில் கலந்துகிட ஆண்களில் 99% பேர் அடிதடி சண்டை -னா பயம்னு  தான் சொன்னாங்க.

ரொம்ப சுவாரசியமா இருந்த அந்த தலைப்பின் கீழ் நடந்த விவாதத்தில் 
கொஞ்சம் ஜாலியாவும் கொஞ்சம் சீரியஸாவும் இருந்த சில 'ஹை லைட்ஸ் ' இங்க..

 * கோவம் வந்தா நானும் பேசுவேன் அவங்களும் பேசுவாங்க ரெண்டுபேரும் பேசுவோம் ,சில சமயம் சமாதானம் ஆகிடுவோம்னு சொல்ல , கோபிநாத் கைதட்டி சிரிப்பை கன்ட்ரோல் பண்ண முடியாம குதிச்சு சிரிச்சார் , அதாவது கோபி சொன்னது அந்த பங்கேற்பாளர் சொன்னதை விட தமாஷா இருந்தது ,என்னனா ,"சூப்பர் சார் ,அவரும் பேசுவாரு நீங்களும் பேசுவீங்க பேசிகிட்டே இருப்பீங்க கடைசியா டயர்ட் ஆகி ரெண்டுபேரும் டீ குடிச்சுட்டு போய்டுவீங்களா"னு கேக்க அரங்கமே சிரிப்பலைல இருந்தது.

* அதே போல இன்னோர்த்தர் சொன்னார் , நானும் சண்டைக்கு பல்க்-கா ஆள் கூப்பிட்டு போவேன் அவங்களுக்கும் உள்ளுக்குள்ள பயம் இருக்கும் ஆனாலும் சமாலிச்சுப்போம் சொல்ல மறுபடியும் சிரிப்பலை.

* "நைட் 9 மணிக்குமேல வெளில போகமாட்டேன் நான்.அப்படி போயி ஆகனும்னா வீட்ல யாரையாவது வாசல்ல வெயிட் பண்ண சொல்வேன் நான் திரும்ப வர வரைக்கும்"னு  ஒருத்தர் சொன்னதை கேட்க ஆச்சர்யமா இருந்தது. (இப்படியும் இருக்காங்களா ?)

* ஒருத்தர் தான் வேலைக்காக 50 ஆயிரம் ஒருத்தர்கிட்ட குடுத்து அவர் ஏமாத்திட்டார் .என்ன பண்றதுன்னு தெரியாம தற்கொலை முயற்சி பண்ணினேன்.ஏதோ அதிஷ்டம் பொ ழச்சுட்டேன் ,ஆனா அந்தாளு கண்ல மறுபடியும் பட்டா சும்மா விடமாட்டோம் அவர்கிட்ட ஏமாந்த 121 பேர் இருக்கோம்னு சொன்னப்போ ரொம்ப வருத்தமா இருந்தது.

பெண்கள்கிட்ட, உங்களுக்கு எவ்ளோ கோவம் வரும்னு கேட்டப்போ ,ஒரு பெண் எங்க பில்டிங் முழுக்க கேக்குற மாதிரி கத்துவேன்னு சொல்ல,இன்னோர் பெண் கைல கிடைக்குறது எல்லாம் பறக்கும்னு சொல்ல  ,இன்னோர் பெண் கெட்ட கெட்ட வார்த்தைல திட்டுவேன்னு சொல்ல ,ஒருத்தர் சட்டை பட்டன் போடலைனா சாத்திடுவேன் சாத்தி ,யாருன்னு பாக்கமாட்டேனு அழகான ஸ்லாங்கில் சொன்னாங்க.

* சிறப்பு அழைப்பாளர்களில் திருநங்கை சுதாவும் ஒருவர்.அவ்வளவு அழகா தெளிவா அவங்க பேசினதை ரசிக்க முடிஞ்சது..பஸ்ல நைட் ட்ராவல் பண்ணினப்போ பக்கத்துல ஒரு பொண்ணு பயணம் பண்ணினா ,அவளுக்கு பொழுது போகல என்னபத்தி விசாரிச்சுகிட்டே வந்தா ,நான் திருனங்கைனு சொன்னா அவ அந்த நேரத்துக்கு வேற சீட் தேடி போய் இருக்கலாம் ,அதனால நா சொல்லல .உங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சானு கேட்டா ,ஆகிடுச்சுனு சொல்லிட்டேன் ,எத்தன குழந்தைங்க என்ன பண்றாங்கன்னு கேட்டா எனக்கு கோவம் வந்துடுச்சு எப்படியாவது அவகிட்ட பேசுறதை கட் பண்ணனும்னு ரெண்டு கொழந்தைங்க ,செத்துட்டாங்கனு சொல்லி பெட் ஷீட் எடுத்து போத்திகிட்டு என்னால சிரிப்பை அடக்க முடியலை சிரிச்சிட்டேன் ,அவ ஆன்ட்டி அழாதீங்கனு சொல்ல ஆரம்பிச்சுட்டா-னு சொன்னாங்க.

* 'ஒரு நாள் ஆட்டோவில் நானும் இன்னோர் திருநங்கையும் போய்ட்டு இருந்தோம் ,நாங்க பேசுறத வச்சு அவர் கண்டுபிடிச்சுட்டார் .அப்படியே பேசி ரூட் விட்டு பாத்தார் ,நாங்க எவ்ளவோ சமாளிச்சோம் ஒரு கட்டத்துல முடியாம எங்க ஆண் குரல்ல பேசினோம் அவ்ளோதான் அந்தாளுக்கு 'மூட்' போய்டுச்சு'னு, அவங்க கஷ்டத்தை கூட சிரிசுகிட்டே சொன்னாங்க.

* "ஒரு நாள் ரொம்ப வயிர் வலினு டாக்டர் கிட்ட போனேன் .அவர் என்ன திருனங்கைனு கண்டுபிடிக்கல.அவரும் ஜெல் போட்டு என்னனவோ டெஸ்ட் பண்ணி பாத்தார் வயித்துல. அவரால என்ன எனக்கு பிரச்சனைன்னு கண்டுபிடிக்க முடியல.கடைசியா ரிப்போர்ட் குடுத்தார் அதுல ,இது நார்மல் அது நார்மல் அப்படி இப்படினு இருந்தது கடைசியா யுட்ரஸ் 
நார்மல்னு எழுதி கையெழுத்து போட்ருந்தார் .எனக்கு பாத்ததும் சிரிப்பு வந்துடுச்சு.எதுக்கு நான் டாக்டர் கிட்ட போனேனோ அது சரியாகலை"ன்னு சொன்னாங்க.

   எவ்ளோ வலி வேதனைகளை தினம் தினம் தாங்குறாங்க இவங்க எல்லாம்.ஆனா தன் கஷ்டத்தை கூட மத்தவங்க ரசிக்குற மாதிரி சொல்றாங்க.என் குடும்பத்துக்கு நான் பையனா செய்ய வேண்டிய கடமைகளையும்  செய்யணும்.சில சமயம் ஆணாகவும் இருக்க வேண்டியது இருக்கு சில சமயம் பெண்ணாகவும் இருக்கவேண்டியது இருக்குனு அவங்க சொன்னப்போ நிஜமாவே கஷ்டமா இருந்தது.
      
    பெண்களை விட ஆண்கள் தான் தங்களை அதிகமா ஆதரிக்குறாங்க  எங்க மேல ஒரு கனிவோட இருக்காங்க .ஆண்களுக்கு நன்றி எல்லார் சார்பாவும் சொல்றேன்னு சொன்னாங்க. பெண்கள் தான் இன்னும் எங்கள முழுசா புரிஞ்சுக்கல ஏத்துக்கல-னும் சொன்னாங்க .

 சில ஆண்கள் தவறா  நடக்குறதால எல்லாரையும் தப்புன்னு சொல்லிடமுடியாது.சில  திருநங்கைகள் தவறா நடந்துக்குறதால எல்லாரையும் தப்புன்னு சொல்லிட முடியாது .ஹார்மோன் பிரச்சனைக்கு அவங்க என்ன செய்ய முடியும் .நம்மால முடிஞ்சவரை சப்போர்ட்-ஆக இருக்க நினைப்போம்.







முழு எபிசோடையும் இந்த http://www.youtube.com/watch?annotation_id=annotation_490944&feature=iv&src_vid=8_EDAw8wjuw&v=ErlnrSxi9Hg இல் பார்க்கலாம் 


இந்த தலைப்பு ,விவாதங்களை பத்தி நீங்க என்ன நினைக்குறீங்க?...விவாதிப்போம்

செவ்வாய், 9 ஏப்ரல், 2013

கடலுக்கு அடியில் இருக்கும் தமிழ் நகரம் ...


ஃபேஸ்புக்-ல 'தமிழ்ச் சமுதாயம் -தமிழுக்காக தமிழர்களுக்காக ஒரு பகுதி' என்ற   பக்கத்தின் ஒரு போஸ்ட்-ஐ படிச்சேன் .ரொம்ப சுவாரசியமா  இருந்தது.அந்தபோஸ்ட்டின் சில பகுதிகளை உங்ககூட ஷேர் பண்றேன்.

கடலுக்கு அடியில் தமிழர் நகரம்

கடலுக்கடியில் பூம்புகார்..

கிறித்து பிறப்பதற்கு 7500 ஆண்டு முந்தைய நகரம் இதுவாகும். அதாவது 9500 ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்பட்ட கடல் கொந்தளிப்பில் இந்த நகரங்கள் மூழ்கின.பூம்புகாரும் குசராத்தின் காம்பேவும் அரப்பா, மொகஞ்சதரோ நாகரிகங்களை விடப் பழமையானவை ஆகும். கண்காட்சியில் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக பூம்புகார், காம்பே நகரங்கள் பற்றிய வீடியோ காட்சிகள் காண்பிக்கப்பட்டது. கடலுக்கடியில் சென்று எடுக்கப்பட்ட முக்கியமான வீடியோ படங்கள் அவை. இந்திய நிலவியல் விஞ்ஞானிகள் மீனவர்கள் உதவியுடன் எடுக்கப்பட்டது. கடலுக்கடியில் நகரங்களின் சுவடுகள் ஆங்காங்கே உள்ளது. ஏறக்குறைய பூம்புகார், காம்பே நகரங்கள் ஒரே காலத்தவை. இரண்டும் ஒரே காலத்தில் தான் கடலில் மூழ்கி இருக்க வேண்டும் என்று கிரகாம் குக் கருதுகிறார்.

வீடியோ படத்தில் மண் கல்லான கருவிகள், மனித எலும்புகள், வீட்டுச் சுவர்கள், பாத்திரங்கள், ஆபரணங்கள், வீட்டு முற்றங்கள் ஆகியவை காணப்படுகின்றன. பூம்புகார் அருகே மூழ்கிய நகரம் பற்றி எடுக்கப்பட்ட வீடியோ படத்தில் பெரிய குதிரை வடிவ பொம்மைகள் காணப்படுகின்றன. இதைப் பற்றி அறிய வந்ததும் விஞ்ஞானிகள் வியப்பில் மூழ்கிப் போயுள்ளனர். இதைப் பற்றி மேலும் ஆராய்ச்சி செய்தால் கூடுதல் விவரங்கள் கிடைக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்”.கடற்கரை ஓரங்களில் மாறுதல் ஏற்படுவது இயற்கை இடையறாது நடத்தும் அழிவுச் செயல்களில் ஒன்றாகும். குமரிக்கண்டம்‘சோழர்களின் புகழ்பெற்ற பூம்புகார் துறைமுகம் தற்போது கடலுக்கடியில் உள்ளது. அதே சமயத்தில் முன்னொரு காலத்தில் கடற்கரையோரம் இருந்த சீர்காழி நகரம் தற்போது கடற்கரையிலிருந்து உள்ளடங்கி பல கி.மீ. துரத்தில் உள்ளது.

இவை தமிழகக் கடற்கரையோரத்தில் ஏற்பட்ட கடல் மட்ட மாறுதல்களைப் பற்றிய வரலாற்று ஆதாரங்களாகும். தவிர இது தொடர்பாக பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் உள்ள புவி அறிவியல் பள்ளியில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வும் பல புதிய தகவல்களைக் கொணர்ந்துள்ளது”

1) சென்னையிலிருந்து சத்தியவேடு வரை காணப்படும் கடலால் உருவாக்கப்பட்ட மணல் திட்டுக்கள்

2) நேராகப் பாயும் பாலாறு நதியில் செங்கல்பட்டுக்கு அருகில் காணப்படும் திடீர் வளைவு

3) கடலைச் சந்திக்காமல் திருவெண்ணை நல்லூர் அருகில் புதையுறம் மலட்டாறு

4) வேதாரணியம் பகுதியில் திருத்துரைப்பூண்டி வரை காணப்படும் கடலால் ஏற்படுத்தப்பட்ட மணல் திட்டுகள்

5) வைகை நதியில் காணப்படும் மூன்று கழிமுகங்கள். இத்தகவல்கள் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கடலானது சென்னை செங்கல்பட்டு, திருச்சி, மதுரை வரை பரவி இருந்தது என்பதைத் தௌ¤வாக விளக்குகிறது.

தவிர தமிழகக் கடற்கரையோரம் காணப்படும் கோண்டுவானா பாறைகளும் (290 மில்லியன் வருடங்கள்), கிரிடேசியஸ் (Cretaceous) பாறைகளும் (70 மில்லியன் வருடங்கள்), டெர்சியரி (Tertiary) பாறைகளும் (7 மில்லியன் வருடங்கள்) மேற்கூறிய தகவல்களை உறுதி செய்வதோடு பல ஆண்டுகட்கு முன்பிருந்தே கடல் மட்டம் இப்பகுதியில் உயர்ந்தும் தாழ்ந்தும் இருந்து வந்துள்ளது. உறுதியாகிறது” என கடல்மட்ட மாறுதல்களும் தமிழகக் கடல் ஓரத்தின் எதிர்கால நிலையும் என்ற கட்டுரையில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொலையுணர்வு மைய இயக்குநர் பதிவு செய்துள்ளார்.
(தமிழக அறிவியல் பேரவை 3-வது கூட்டம் 1994 மலர் )

1) சுமார் 1.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு கடல் மதுரை வரை பரவி இருந்தது.

2) சுமார் 90,000 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை, புதுச்சேரி, வேதாரண்யம் பகுதிகள் கடலால் சூழப்பட்டிருந்தன.

3) சுமார் 65000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்தால் இந்தியாவும் இலங்கையும் சேர்ந்தன.

4) சுமார் 27000 ஆண்டுகளுக்கு முன் கடல் மட்டம் உயர்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் பிரிந்தன.

5) சுமார் 17000 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தாழ்ந்ததால் இலங்கையும் இந்தியாவும் சேர்ந்து பின் கடல் மட்டம் உயர்ந்ததால் மீண்டும் பிரிந்தன” என்று சொல்லும் முனைவர் சோம. இராமசாமி கூற்றுப்படி “புவியமைப்பியல் வல்லுநர்களின் கூற்றுப்படி அண்டார்டிகா, கிரீன்லாந்து ஆசிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் உருகி அதன்மூலம் கடல் உயர்ந்ததால் தாழ்வான கடற்கரையைக் கொண்டிருக்கும் தமிழகத்தின் பல கடலோரப் பகுதிகள் மூழ்கடிக்கப்படும்” என எச்சரிக்கிறார். தமிழகக் கடற்கரையோரப் பாறைகள்-கோண்டுவானாய் பாறைகள் 290 மில்லியன் வருடம் பழைமை வாய்ந்தவை.
நன்றி : அனைத்துலக தமிழ் மையம்
                                         -facebook -ல் இருந்து 

திங்கள், 8 ஏப்ரல், 2013

வேலை வேலை ....

நல்ல கற்பனை வளமும் , நல்ல க்ரியேட்டிவிட்டி இருக்கா உங்களுக்கு.ரிப்போர்ட்டர்-ஆக வேலை செய்றதுக்கு ஆர்வம் இருக்கா?உங்களுக்கு ,தினமலரில் வெள்ளிகிழமை தோறும் வரும் அங்காடி தெரு இணைப்பில் ரிப்போர்ட்டர்-ஆக வேலை செய்ய ஒரு வாய்ப்பு . விருப்பம் இருக்குறவங்க உங்க போட்டோ ,பயோடேட்டா,உங்கள பத்தி,உங்க தனி திறமை பத்தி&nbsp எழுதி angaditheru@dinamalar.in முகவரிக்கு மெயில் பண்ணுங்க.


                                            ஆல் தி பெஸ்ட் 

ஞாயிறு, 7 ஏப்ரல், 2013

கரண்ட்டே இல்லாமல் நீர் இறைக்கலாம்!


தரங்கம்பாடியில்இருக்குற ஹைடெக் ஆராய்ச்சி நிறுவனம்  சூரிய ஒளி மூலம் இயங்குற நீர் இறைக்கும் மோட்டார் பம்ப் -ஐ கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.

150 வாட்ஸ் திறனுள்ள சோலார் பேனல், 12 வாட்ஸ் திறனுள்ள கார்களில் பயன்படுத்தப்படும் சாதாரண வைப்பர் மோட்டார் மற்றும் 600 ரூபாய் விலையுள்ள பைப் ஆகியவற்றைக் கொண்டு இந்த சோலார் மோட்டார் பம்ப் உருவாக்கப்பட்டு உள்ளது. சூரிய ஒளியின் மூலம் கிடைக்கும் மின்சாரத்தை நேரடியாக மோட்டாருக்குக் கொடுத்து இயங்கச் செய்வதால் பேட்டரியின் அவசியமும் இல்லை என்பதால், இதன் அடக்க விலை 1,000 ரூபாயாக உள்ளது.

உப்பளங்கள் நிறைந்த வேதாரண்யம் பகுதியில், பெரிய உப்பள உரிமையாளர்கள் மோட்டார் பம்ப் கொண்டு நீர் இறைப்பார்கள். மோட்டார் பம்ப் வாங்க வசதி இல்லாதவர்கள், கைகளால்தான் நீரை இறைக்க வேண்டும். இதனால், சில நேரங்களில் அவர்களுக்கு தோல் உரிந்து ரத்தம் கூட வரும். இதற்குத் தீர்வு காண வேண்டும் என்பதற்காகவே விலை குறைந்த நீர் இறைக்கும் மோட்டார் பம்ப்பை உருவாக்கினோம். உப்பளத் தொழிலாளர்களிடம் பலத்த வரவேற்பைப் பெற்ற மோட்டார் பம்ப்பில் சில மாற்றங்கள் செய்து விவசாயிகளுக்கு கொடுத்தோம்" என்கிறார், கண்டுபிடிப்பாளர்களில் ஒருவரான ஜெயராஜ்.

உப்பளத் தொழில் பெரும்பாலும் கோடை காலத்தில் நடப்பதால், இந்த சோலார் மோட்டார் பம்ப் பயன்படுத்துவதில் பிரச்சினை இருக்காது. நாற்றாங்காலுக்கு நீர் இறைத்தல்,தொட்டியில் இருக்கும் தண்ணீரை நிலத்திற்குப் பாய்ச்சுதல் போன்ற விவாசய வேலைகளைச் செய்ய இது உதவும். இந்தப் பம்ப்பில் இணைக்கப்பட்டுள்ள கருவி, சரியான அளவில் பயிர்களுக்கு நீர் வழங்கும் வகையில் சுழன்று கொண்டு இருக்கும். இதனால், நீர் வீணாவது தடுக்கப்படுகின்றது.10 அடி ஆழம் வரை உள்ள நீரை எடுக்க, இந்த மோட்டார் பம்ப்பை பயன்படுத்த முடியும்.

இந்த மோட்டார் பம்ப், 10 அடி ஆழம் வரை உள்ள நீரை இறைக்கக் கூடியது. சோலார் பேனல் மற்றும் மோட்டார் திறனை அதிகப் படுத்தும் போது, இன்னும் அதிக ஆழத்தில் உள்ள நீரை இறைக்க முடியும். நீர் இறைக்கும் திறனுக்கேற்ப விலை கூடும்" என்கிறார், ஹைடெக் நிறுவனத்தைச் சேர்ந்த பாலசுந்தரம்.

தொடர்புக்கு95666 68066
                                              -- -நன்றி வார இதழ் 

சனி, 6 ஏப்ரல், 2013

காந்தியும் சாப்ளினும்





1931-ம் வருஷம் செப்டெம்பர் 22-ம் தேதி டாக்டர் கட்டியால் என்ற நண்பரோட வீட்ல காந்தி சாப்ளின் ரெண்டுபேரும் சந்திச்சுகிட்டாங்கலாம்.அப்போ எடுத்த புகைப்படம் இது.

வெள்ளி, 5 ஏப்ரல், 2013

டீட்டிகாகா ஏரி

தென் அமெரிக்காவின் பெரு மற்றும் பொலிவியா நாட்டோட எல்லைல டீட்டிகாகா-ங்கற அழகான பிரமாண்டமான ஏரி இருக்காம்.தென் அமெரிக்கால இருக்குற முக்கியமான ஏரிகள்ல இதுவும் ஒன்னாம்.இதுல 27 ஆறுகள் வந்து கலக்குதாம்.


கடல் மட்டத்துல இருந்து 3812 மீட்டர் உயரத்துல இந்த ஏரி இருக்குறதால பாக்க ரொம்ப ரொம்ப அழகா இருக்குமாம்.இந்த மலையை சுத்தி ஏராளமான பழங்குடியினர் வசிக்குறாங்கலாம் .இவங்க தங்கள எதிரிகிட்ட இருந்து எப்படி காப்பாதிக்குறாங்கலாம் தெரியுமா ?

இந்த ஏரிகளை சுத்தி இருக்குற இடத்துல அடர்ந்து வளரும் நாணல் செடிகள் தான் இவங்களுக்கு தற்காப்பு கவசமா இருக்காம்.

இந்த நாணல்கள வெட்டி உலர வச்சு பக்குவபடுத்தி அழகான குடில்கள செய்ராங்கலாம் .ஒவ்வொரு பத்து குடிலுக்கு கீழையும் நாணல்களாலே கட்டு மரம் மாதிரி ஒரு அமைப்பை செஞ்சு ஏரிகளில் மிதக்க விட்ராங்கலாம் .தூரத்துல இருந்து பாக்குறப்போ ஏரிக்குள்ள அழகான குட்டி தீவு இருக்குற மாதிரி ஒரு அமைப்பு இருக்குமாம்.எதிரிங்க வந்துட்டா படகை எப்படி துடுப்பு மூலமா இயக்குறோம் அதே போல இந்த குடிலையும் இயக்கி அங்க இருந்து தப்பிச்சிடுவாங்கலாம் .

ஆரம்ப காலத்துல வெறும் நாணலை மட்டும் பயன் படுத்தின இவங்க இப்போ தெர்மாகோல் மாதிரி மத்த பொருளை எல்லாம் பயன்படுதுறாங்கலாம்.

நாணல் புதருல இருந்து அயோடின் தயாரிச்சு அத விக்குறாங்கலாம்.இதுல இருக்குற பூக்கள பக்குவபடுத்தி பானங்கள் தயாரிக்குறாங்கலாம் ,மருந்து பொருளாவும் இத பயன் படுத்துறாங்கலாம்.

சமீபகாலமா இங்க சூரிய சத்தியில் மின்சாரம் தயாரிக்குற தகடுகளை பாக்க முடியுதாம் .இதன் மூலமா இவங்க டி.வி ,ரேடியோ,விளக்கு போன்ற நவீன வசதிகளையும் பயன்படுதுறாங்கனு சொல்றாங்க.

வியாழன், 4 ஏப்ரல், 2013

நாங்களும் பல மொழில பேசுவோம்ல ..!!!!


புதுசா ஒரு மொழியை கத்துக்கணும்னு ஆசை இருக்குதா உங்களுக்கு, புரனவுன்சியேட்டர் என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை வழங்குகதாம் . நாம  எந்த மொழியைப்கத்துக்க ஆசப்படுறோமோ  அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தேகதுக்கலாமாம்.

www.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில்நாம எந்த மொழியை பேசுறவங்க  அல்லது எந்த மொழியில் இருந்து கத்துக்க விரும்புறோமோ  அந்த மொழியை தேர்ந்தெடுக்கணும்.அடுத்து இருக்கும் I want to learn கட்டத்திற்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் என 60க்கும் மேற்பட்ட உலக மொழிகள், நம் நாட்டு மொழிகள் இருக்கும். எந்த மொழி  கத்துக்க விரும்புறோமோ அதைத் தேர்ந்தெடுக்கணும். சொற்கள் தொகுப்பு, முக்கிய வினைச்சொற்கள், எளிய சொற்றொடர்கள், சுற்றுலா பயணிகளுக்கான சொற்றொடர்கள், உரையாடல்கள் என 5 பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 1,000க்கும் மேற்பட்ட பயிற்சிகளும், பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தையும் அது வார்த்தைக்கு வார்த்தை அழகாக சொல்லிக் கொடுக்குது. சொல்லித்தர வார்த்தைகள் தேர்வு செய்த மொழியிலும், ஆங்கிலத்திலும் வரும்.

உதாரணமாக, நீங்கள் தமிழ் மொழியிலிருந்து, பிரெஞ்ச் மொழி கத்துக்குறீங்கனா ,
Bonjour  (வணக்கம்)
Excusez - moi  (என்னை மன்னியுங்கள்)
Silvous plait  (தயவு செய்து)என வரும்.


கூடவே கார்ட்டூன் படமும் நமக்கு செய்கை மூலம் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை அழகாக விளக்கிக் காட்டுகிறது. அதனால், புரிந்துகொள்ளுதல் ரொம்ப ஈசி . 


 -நன்றி வார இதழ் 

கூகிள் -ல் சில products பாத்தேன்.இத  உங்ககிட்ட introduce அப்படியே பண்ணாம ஒரு சின்ன சசீன் மாதிரி சொன்னா எப்படி இருக்கும்னு ஒரு கற்பனை

போரில் வல்லவரோ இல்லையோ பெண்களை அள்ளிக்கொண்டு வருவதில் வல்லவரான 26-ம் எலி கேசி ,இந்த முறை தான் அ(த)ள்ளி வந்த அண்டை நாட்டு அரசி,இளவரசிகளை எப்படி தன்  வசம் மயங்க வைக்கலாம் என தன் அமைச்சர் இடம் கேட்டதும் அதற்க்கு


அமைச்சர் : மன்னா பெண்களுக்கு எப்பவும் பிடித்த தங்கத்தால் செய்த பதக்கங்களை பரிசாக தந்தால் பதக்கம் எவ்வாறு அவர்கள் மனதிற்கு நெருக்கமாக உள்ளதோ அதே போல் தாங்களும் அவர்களுக்கு நெருக்கமாக இருப்பீர்கள் ..
மன்னர் : அப்படியா சொல்கிறீர் ...ஆனால் ..ம்......(ஆழ்ந்த சிந்தனையில் மன்னர்)
அமைச்சர் : கவலை வேண்டாம் மன்னா பட்ஜெட் விலையில் கஜானாவை காலி செய்யாத அளவிற்கே வாங்கலாம் மன்னா 
மன்னர் : க.க.க.போ ..
பாராட்டை பெற்ற உற்சாகத்தில் அமைச்சர் மன்னனிடம் எந்த எந்த பதக்கத்தை எந்த அரசி/இளவரசிக்கு வழங்கலாம் என கூறுகிறார்..
ஓவர் டூ அமைச்சர் ......

அமைச்சர் : பூ போன்ற மென்மையான மனதுள்ளவராம் நாம் அள்ளி வந்த ...
மன்னர்       : ம்.....என்ன ......?!!!?
அமைச்சர் : ஸாரி மன்னா ...தாங்கள் அள்ளிவந்த தென்னாட்டு அரசியாம்..அவர்களுக்கு இந்த இலையுடன் கூடிய பூ பதக்கத்தை பரிசாக தரலாம்..





மன்னா தாங்கள்  தூக்கிவந்த அண்டைநாட்டு இளவரசி 'அல்லி மயிலும்  அழகான மயிலும்'
வளர்த்து வந்தார்களாம்.அப்பா அம்மாவை பிரிந்ததை விட அவைகளை பிரிந்த துயரத்தில் தான் அதிகமாம் .அவர்களுக்கு இந்த மயில் பதக்கத்தை தந்து துயரம் தீர்க்கலாம்.

அமைச்சர்  : மன்னா மேலை நாட்டு அரசியை அழைத்து வந்தீரே ..
மன்னர்        : நான் எங்கேயடா அழைத்துவந்தேன் ..அவள் தானடா  என்னை இழுத்துவந்தாள் ..
அமைச்சர்   : சரி ..ஏதோ ஒன்று ..அவர்களுக்கு பாலே நடனம் என்றால் மிகவும் பிடிக்குமாம் .அவர்களுக்கு இந்த பாலே நடன வடிவ மங்கையை பரிசாக தரலாம் ..பொருத்தமாக இருக்கும்..

அமைச்சர்  : மற்றொரு மேலை நாட்டு அரசியை அழைத்து வந்தீரே..அவர் எப்போதும் லேப்டாப் -ம் கையுமாக சாட்டில் தான் இருக்கிறாராம்.அவருக்கு இந்த விண்டோஸ் வடிவ பதக்கத்தை பரிசாக தந்து ஃப்ரண்ட் ரிக்வஸ்ட் குடுக்கலாம்..

வடநாட்டில் இருந்து அழைத்து வந்தீரே அந்த அரசியிடம் 'உன் மனதை பெரிய பூட்டால் பூட்டி வைத்திருக்கிறாய் ..அதை உடைக்க மனமில்லை ..அதற்காகத்தான் இந்த சாவி என்று இந்த சாவி வடிவ பதக்கத்தை பரிசளியுங்கள் ..





மன்னர்        : அருமை ..அருமை அமைச்சரே...அசத்துகிறீர்..ஆமாம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் ..
                            என்னை விட அதிகமாக அவர்களை பற்றி தெரிந்து                          வைத்துள்ளீரே ..யாரங்கே ....
அமைச்சர்  : மன்னா..நான் பிள்ளைகுட்டி காரன்...


செவ்வாய், 2 ஏப்ரல், 2013

தமிழக ரயில்வே




சமீபத்துல புவனேஸ்வர் ரயில் நிலையத்துல பிளாட்பாரம்ல துப்புறவங்களுக்கு 100 ரூபாய் அபராதம் போடப்பட்டதாம்.புவனேஸ்வர்ல 'ஏ' நகரம் ,'பி' நகரம் ,'சி ' நகரம்னு அந்த நகரப் பிரிவுக்கு தகுந்தாப்ல 100,50,30 ரூபாய்னு அபராதம் போடப்படுதாம்.

இதுமாதிரி தமிழகத்துல ரயில்வே மட்டும் இல்ல , பொது இடங்கள்ல எங்க துப்பினாலும் ஃபைன்  போடலாம்.அப்படியாவது நம்ம ஜனங்க இடத்த சுத்தமா வச்சுப்பாங்கலானு பாப்போம்.

ஒரு சோஷியல் நெட்வொர்கில் பார்த்து ரசித்தது ..




                  

திங்கள், 1 ஏப்ரல், 2013

பாரதியாரின் கையெழுத்து




பாரதியார் பத்திரிக்கையாளராகவும் இருந்தாருன்னு நமக்கு தெரியும் ,ஆனா அவர் செய்திகளை மொழிபெயர்க்கவும் ,கட்டுரைகள்ல பயன்படுத்தவும் சில ஆங்கில சொல்லுக்கு தாமே கலைச் சொற்களை உருவாக்கிக்கிட்டார் தெரியுமா ?அதை எல்லாம் ஆங்கில எழுத்துக்களோட அகர வரிசைல (alphabetical  order )தொகுத்து ஒரு நோட் புத்தகத்துல எழுதி வச்சாராம்.அந்த நோட்டு புத்தகம் புதுச்சேரில இருக்குற அவரோட நினைவு இல்லத்துல இருக்காம் .இப்போ அந்த நினைவு இல்லம் மூடப்பட்டதால பாரதிதாசன் நினைவு இல்லத்துல  இருக்காம்.