'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-பேரே நல்லா இருக்குல்ல.2010-ஆம் ஆண்டுல இருந்து இந்தியாவுல இயக்கப்படுற இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ்-ல பயணம் பண்றது தான் ஆசியாவிலேயே ரொம்ப காஸ்ட்லியான ட்ரைன் பயணம்.ஏன்னு கேக்குறீங்களா?
இந்த ட்ரைனோட கம்மியான டிக்கெட் எவ்ளோ தெரியுமா ?
ஒரு பயணிக்கு ஒரு நாளுக்கு 800 டாலர்.நம்ம நாட்டோட பணத்தின் படி ,சுமார் 42,600 ரூபாய்(சாப்பாடோட).அதுவும் இதுல இருக்குற டீலக்ஸ் பெட்டிக்கு தான்.அதிகபட்ச கட்டணம் 2500 டாலர் அதாவது இந்திய பணத்தின் படி 1,33,000 ரூபாய்(சாப்பாடோட) .இது பிரசிடன்சியல் சூட் -க்கு .
மொத்தம் 8 நாள் பயணத்துல நாட்ல(இந்தியா) முக்கியமான சுற்றுலா தலங்களை வலம் வருது இந்த மஹாராஜா எக்ஸ்பிரஸ் .
ரயில்வேயின், இந்திய ரயில்வே கேட்டரிங் அன் டூரிசம் கார்பரேஷன் (ஐ ஆர் சி டி சி )நிறுவனமும் ,தனியார் துறையை சேர்ந்த காக்ஸ் அன் கிங்க்ஸ் இந்தியா லிட் நிறுவனமும் கூட்டுத் தொழிலா இந்த ரயிலை இயக்குறாங்க.
தங்குற அறைகள் ,ஓய்வு கூடங்கள் ,நட்சத்திர விடுதி போன்ற உணவு கூடங்கள் என 24 பெட்டிகள், ஏகப்பட்ட வசதிகளோட இருக்குற இந்த ரயில்ல மொத்தம் 88 பயணிகள் மட்டும் தான் பயணம் செய்ய முடியும்.
எங்க எங்க இந்த 'மஹாராஜா எக்ஸ்பிரஸ் '-ல போகலாம் ?
1.இந்தியாவின் பண்பாடு (ஹெரிடேஜ் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் : 7 இரவு/9 பகல்
எங்க எங்க போகலாம் : மும்பை - அஜந்தா - உதய்பூர் - ஜோத்பூர்-பிகனேர் -ஜெய்பூர் - ரந்தம்போர் - ஆக்ரா-டெல்லி
2.இந்தியாவின் கருவூலம் (ட்ரஷர் ஆஃப் இந்தியா )
எத்தனை நாட்கள் : 3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி
3.இந்தியயாவின் பொக்கிஷம் (ஜெம்ஸ் ஆஃப் இந்தியா)
எத்தனை நாட்கள் : 3 இரவு/4 பகல்
எங்க எங்க போகலாம் :டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் - ஜெய்பூர்-டெல்லி
4.இந்தியக் கலைக்கூடம் (இந்தியன் பனோரமா )
எத்தனை நாட்கள் : 7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஜெய்பூர்- ரந்தம்போர் -பாடேஹ்பூர் - ஆக்ரா-கலிலோர் -ஒர்ச்ஹா -கஜுரஹோ -வாரனாசி-லக்னோ -டெல்லி
5.ஒளிரும் இந்தியா (இந்தியன் ஸ்ப்லண்டர்)
எத்தனை நாட்கள் : 7 இரவு/8 பகல்
எங்க எங்க போகலாம் : டெல்லி-ஆக்ரா- ரந்தம்போர் -ஜெய்பூர்-பிகனெர் - ஜோத்பூர்-உதய்பூர் -பலசினோர்-மும்பை
மேலும் விவரங்களுக்கு http://www.maharajas-express-india.com/
Theriyatha visayathai theiriya vachirukinga romba nandri...
பதிலளிநீக்கு