கலைஞர் டி.வி இல் ஒளிபரப்பாகும் நாளைய இயக்குநர் எப்போவாவது பாக்குற வழக்கம் எனக்கு.
எவ்வளவு திறமைகளோட இருக்காங்க எல்லாரும்.
குறிப்பிட்ட நிமிஷத்துக்குள்ள எவ்ளோ அழகா,அளவான நடிப்போட,அளவான இசையோட ,நல்ல கதை கருத்துனு எல்லாம் கலந்து எடுக்குறாங்க.
பல ஷார்ட் பிலிம்கள் நான் ரசிச்சு பாத்ததுன்டு ,பாலாஜியின் ஷார்ட் பிலிம்கள் ரொம்ப பிடிச்ச வகை. அவரோட 'காதலில் சொதப்புவது எப்படி' ஷார்ட் பிலிம் படமாவும் எடுத்துட்டார்.இதுபோல பீட்சா இயக்குனர்..இன்னம் பலபேர் வரப்போறாங்க.
இந்த வாரம் பார்த்து ரசித்த ஹாரர் பிலிம் வரிசையில் முதல் படம் நிஜமாவே அவ்ளோ பயமா கச்சிதமா அவ்ளோ குறுகிய நேரத்துல தெளிவா எடுத்து இருந்தாங்க.
இதுமாதிரி திறமை இருக்குறவங்க எப்படி நாமும் ஷார்ட் பிலிம் எடுக்கலாம்னு யோசிக்குறவங்களுக்கு ஒரு உபயோகமான நியூஸ் இப்போ சொல்ல போறேன்.
ஒரு ஷார்ட் பிலிம் எடுக்க என்ன என்ன அம்சங்கள் இருக்கணும்? கொஞ்சம் நண்பர்கள் , ஒரு கேமரா, ஒரு கணினியும் இணைய இணைப்பும் இருந்தால் போதும்.
சரி ,எப்படி ஆரம்பிக்கலாம் என்ன என்ன முதல்ல தயார் பண்ணனும் ?இதோ..
மேலும், சினிமா குறித்த சில அடிப்படை விஷயங்களையும் தெரிந்துகொள்ள:http://en.wikiversity.org/wiki/Course:WikiUFilmSchoolCourse01 LearningtheBasicsofFilmmaking என்கிற இணையதளம் உங்களுக்கு உதவும்.
என்ன !!!!! உபயோகமா இருந்ததா?
-- நன்றி வார இதழ்

- முதல்ல ஒரு கதைக்கருவை தேர்வு செஞ்சுக்கணும்.
- உங்கள் கதைக்கரு எளிமையா, ஒருநாளில் ஒரு சில இடங்களில் நிகழ்வதாக ஒரு சில கதாபாத்திரங்களுடன் இருக்குறமாதிரி பாத்துக்கணும்.
- அதை பத்து-பதினைந்து நிமிஷ படத்துக்கான திரைக்கதையாக மாத்தனும்.
- அடுத்து எங்கெல்லாம் படமாக்குறது , யார் யார் எல்லாம் நடிக்க போறாங்கனு முடிவு செய்யணும்.
- அப்பறமென்ன,உங்ககிட்ட டிஜிட்டல் கேமரா இருக்கா? மொபைல் கேமரா இருந்தாலும்கூடபோதும் .( குறைந்தது 16ஜிபி அளவுள்ள மெமரி கார்டாவது வச்சுக்கணும்)
- கணினியில நீங்க எடுத்த காட்சிகளை சேமிச்சுக்கனும் உங்கள் கணினியில் SONY VEGAS PRO என்கிற மென்பொருளை டவுன்லோட் செஞ்சு , இன்ஸ்டால் செஞ்சு வச்சுக்கணும் . இது இணையத்தில் தேடினால், இலவசமாகவே கிடைக்குமாம் .
- இந்த மென்பொருளைப் பயன்படுத்தி, படம் பிடித்த காட்சிகளை வீட்டிலேயே வெட்டி ஒட்டலாம். எடிட்டிங் வேலைகள் அனைத்தையும் முடிச்சுடலாம்..
- அடுத்து டப்பிங்.உங்களுடைய விண்டோஸ் இயங்குதளத்திலேயே வாய்ஸ் ரெகார்டர் (VOICE RECORDER) இருக்கும். அதில் சிறிய மைக் உதவியோடு வசனங்களை பதிவுசெய்யலாம் . பதிவு செய்த வசனங்களை SONY VEGAS PRO மென்பொருள் உதவியோடு சரியான இடத்தில் சேக்கலாம்.
- அதோடு பின்னணி இசை தேவைப்பட்டால், இணையத்தில் கிடைக்கிற இலவச இசைக்கோப்புகளை டவுன்லோட் செஞ்சு, வசன சேர்ப்பினைப்போலவே செய்யலாமாம்.
- இப்போது உங்களோட குறும்படம்ரெடி . அதை அப்படியே எம்பி4 ஆக மாற்றி, யூ-ட்யூப் இணையதளத்தில் ஏற்றிவிட்டால். அப்பறம் என்ன நீங்களும் குறும்பட இயக்குநர்தான்!
மேலும், சினிமா குறித்த சில அடிப்படை விஷயங்களையும் தெரிந்துகொள்ள:http://en.wikiversity.org/wiki/Course:WikiUFilmSchoolCourse01 LearningtheBasicsofFilmmaking என்கிற இணையதளம் உங்களுக்கு உதவும்.
என்ன !!!!! உபயோகமா இருந்ததா?
-- நன்றி வார இதழ்
தங்கள் வருகைக்கு நன்றி ..பதிவு செய்துவிட்டேன்
பதிலளிநீக்கு