புதுசா ஒரு மொழியை கத்துக்கணும்னு ஆசை இருக்குதா உங்களுக்கு, புரனவுன்சியேட்டர் என்ற இணையதளம் இந்த அற்புதமான வசதியை வழங்குகதாம் . நாம எந்த மொழியைப்கத்துக்க ஆசப்படுறோமோ அந்த மொழியை, நம் தாய்மொழியிலிருந்தேகதுக்கலாமாம்.
www.pronunciator.com என்ற இத்தளத்திற்குச் சென்று I speak என்பதில்நாம எந்த மொழியை பேசுறவங்க அல்லது எந்த மொழியில் இருந்து கத்துக்க விரும்புறோமோ அந்த மொழியை தேர்ந்தெடுக்கணும்.அடுத்து இருக்கும் I want to learn கட்டத்திற்குள் ஆங்கிலம், பிரெஞ்ச், ஜெர்மன், ஹீப்ரு, ஸ்பானிஷ் என 60க்கும் மேற்பட்ட உலக மொழிகள், நம் நாட்டு மொழிகள் இருக்கும். எந்த மொழி கத்துக்க விரும்புறோமோ அதைத் தேர்ந்தெடுக்கணும். சொற்கள் தொகுப்பு, முக்கிய வினைச்சொற்கள், எளிய சொற்றொடர்கள், சுற்றுலா பயணிகளுக்கான சொற்றொடர்கள், உரையாடல்கள் என 5 பகுதிகள் கொடுக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு பகுதியிலும் 1,000க்கும் மேற்பட்ட பயிற்சிகளும், பாடங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாடத்தையும் அது வார்த்தைக்கு வார்த்தை அழகாக சொல்லிக் கொடுக்குது. சொல்லித்தர வார்த்தைகள் தேர்வு செய்த மொழியிலும், ஆங்கிலத்திலும் வரும்.
உதாரணமாக, நீங்கள் தமிழ் மொழியிலிருந்து, பிரெஞ்ச் மொழி கத்துக்குறீங்கனா ,
Bonjour (வணக்கம்)
Excusez - moi (என்னை மன்னியுங்கள்)
Silvous plait (தயவு செய்து)என வரும்.
கூடவே கார்ட்டூன் படமும் நமக்கு செய்கை மூலம் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை அழகாக விளக்கிக் காட்டுகிறது. அதனால், புரிந்துகொள்ளுதல் ரொம்ப ஈசி .
கூடவே கார்ட்டூன் படமும் நமக்கு செய்கை மூலம் வார்த்தைகள் மற்றும் வாக்கியங்களை அழகாக விளக்கிக் காட்டுகிறது. அதனால், புரிந்துகொள்ளுதல் ரொம்ப ஈசி .
-நன்றி வார இதழ்
useful post- பயனுள்ள பதிவு ...
பதிலளிநீக்குthank u..
நீக்கு