பக்கங்கள் (Pages)

சனி, 18 மே, 2013

இதையும் இனி சொல்லி தரனும்

சமீபகாலமா ,பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறையா நடந்துகிட்டு இருக்கு.ஒரு ஒரு நாளும் பேப்பர்ல படிக்குறது ,டிவி-ல பாக்குறது,யார் சொல்லியாச்சம் கேக்குறதுன்னு நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே தான் போகுது தவிர குறைந்த பாடில்ல .

ஒரு சில ஆண்களால மொத்த ஆண் வர்கத்துக்கும் அவமானம் .ஒரு பெண்ணை வம்பு பண்ணி வற்புறுத்தி அதுல சந்தோசம் பாக்குறது என்ன ஜென்மங்களோ தெரியல.ஒரு பெண் இஷ்டப்படாம அவளை அடையணும்னு நினைக்குற எவனும்,அவனோட அல்ப சந்தோஷத்துக்கு பெண்ணை வம்பு பண்ற எவனும் மனுஷனே இல்ல.



அதுவும் சின்ன கொழந்தைங்க 5 வயசு 6 வயசு பெண் கொழந்தைங்களை சீரழிக்க எப்படி மனசு வருது இவன்களுக்கு ?

எங்க இருந்து இந்த தப்பு நடக்குது ? ஆண் பிள்ளைகளை வளர்க்கும் விதத்துலையா ?இல்ல அவங்க வளர்ந்த விதத்துலையா ? பெண் அப்படீனா ,இதுஇதுக்குதான் அவ ,இந்த வேலை எல்லாம் செய்யணும் ,இது எல்லாம் அவ கடமை -னு தப்பாவே சொல்லி பெண்ணுக்கு ஒரு டெப்ஃனஷனும்,பையன்னா அதிகாரம் பண்ணனும் ,கெத்தா இருக்கணும்னு தப்பாவே ,பையனுக்கு ஒரு டெப்ஃனஷனும் சொல்லி வளர்க்குறதுலயா? இல்ல அவங்க புரிஞ்சுகிட்டதுலையா?இல்ல, சரி இல்லாத தன குடும்பத்தை பாத்து ஆணுனா இப்படி தான் இருக்கனும்னும் பெண்ணுனா இப்படி தான் இருக்கனும்னும் தப்பா புரிஞ்சுகிட்டதுலையா?எங்க இருந்து இந்த தப்பு நடக்குது ?

சின்ன பிள்ளையா இருந்தப்போ ,தீயதை கேக்காதே....தீயதை பார்க்காதே...தீயதை பேசாதே-னு மூணு குரங்கு பொம்மைகளை காட்டி சொல்லி தருவாங்க  ..

ஆனா இந்த காலத்துக்கு இது மூணு மட்டும் இல்லாம இன்னம் ஒன்னும் சேர்த்து சொல்லி தரனும் ..அது




5 கருத்துகள்:


  1. ///ஆனா இந்த காலத்துக்கு இது மூணு மட்டும் இல்லாம இன்னம் ஒன்னும் சேர்த்து சொல்லி தரனும் ..அது ///


    மிகச் சரியாக சொன்னீர்கள்.....கண்டிப்பாக அது பற்றி சொல்லித்தரவேண்டும்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி

      நீக்கு
  2. நிச்சயமாக உங்கள் கருத்துக்களுக்கு என் முழுமையான
    ஆதரவு

    ஆனால் ...இங்கே தாங்கள் கூற விளைவது
    ஆண்கள் தவறாக வழிநடத்தப்படுகிறார்கள் என்றா ?

    அல்லது பெண்கள் தவறே இளைகாதவர்கள் என்றா ?

    அல்லது இந்த சமூகத்தின் கட்டமைப்பே தவறானதா ?

    பெண்களிடம் தவறாக நடக்கும் எந்த மனிதனும்
    மனித இனத்தின் பிழைகளே .

    தங்கள் கூற விளைவதை இன்னும் தெளிவாக கூறுங்கள்
    உங்கள் கருத்துக்கள் சமூத்ததை சென்றடைய
    என் வாழ்த்துக்கள்...

    தி.சரவணன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி .

      பெண்கள் தப்பு பண்றாங்க பண்ணலைன்னு எதையும் நான் சொல்லலையே .எந்த பெண்ணும் தப்பு பண்ணலைனும் நான் சொல்லலையே.

      தப்பு பண்ற பெண்கள் கிட்ட இப்படி நடந்திருந்தா அது ஒரு இஷ்யூ ஆகி இருக்காதே.

      இஷ்டம் இல்லாத பெண்ணை வம்பு பண்ண கூடாது.அப்படி வம்பு பண்ணறதுல என்ன அற்ப சந்தோஷம் இபப்டி செய்ற ஆண்களுக்குனு கேட்டேன்.பெண்கள்னா இதுக்குதானு சில வீட்ல சொல்லுவாங்க,பிள்ளைகளை அப்படியே வளர்த்தும் இருப்பாங்க.அதனால அந்த கேள்விகளை கேட்டேன்.

      அதுவும் சின்ன சின்ன குழந்தைங்கள் கிட்ட இப்படி நடந்துக்கிறவனுக்கு 10 வருஷம் ஜெயில் தண்டனை ,அபராதம்னு சொல்லிட்டா போதுமா?கடுமையான தண்டனை குடுக்க வேண்டாமா?

      நீக்கு