சோலார் பாலத்தை மதுரை கே.எல்.என். தொழில்நுட்பக் கல்லூரியின் கட்டடத்துறை மூன்றாம் ஆண்டு மாணவர்களான அஜய் குமார்,தனசேகரன்,சிவசங்கர்,கார்த்திக் ஸ்ரீனிவாஸ் மற்றும் ஸ்ரீராம் கண்டுபிடிச்சு இருக்காங்களாம்.
சோலார் பாலங்களில அமைக்கப்படுற சாலைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கண்ணாடிகள்ரொம்ப உறுதியானவையா இருக்கும். CHEM GLASS என அழைக்கப்படும் இந்த பிரத்யேக கண்ணாடிகள் கனரக வாகனங்களின் எடையைகூட தாங்கும். கண்ணாடிச் சாலைகள்ல போற வாகனங்கள் வழுக்காமல் இருக்க , கண்ணாடியின் மேற்பரப்பில் சொரசொரப்பான படலம் ஒன்று அமைக்கப்படுதாம்.
மூன்று பகுதிகள் கொண்ட இந்தச் சாலைகளின் அடிப்பகுதி பிளாஸ்டிக் போன்ற மறுசுழற்சி செய்ய முடியாத கழிவுகள் மூலம் அமைக்கப்படுது. நடுப்பகுதியில சோலார் பேனல் அமைக்கப்படுது. அதன் மேல் ஃபேவர் பிளாக் கற்கள் கொண்டு கண்ணாடியிலான சாலை அமைக்கப்படுது. இந்தக் கண்ணாடிச் சாலையில் சூரிய ஒளி விழும்போது, கீழே உள்ள சோலார் பேனல் மூலமாக மின்சாரம் தயாரிக்கப்படுது. பாலத்தின் அருகிலுள்ள மின்சார நிலையத்துக்கு நேரடியாக சூரிய ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை அனுப்பலாமாம் . மின்சாரத்தை நேரடியாக மின் நிலையத்துக்கு அனுப்புவதால் பேட்டரி அவசியமில்லைனு சொல்றாங்க.
இந்த சோலார் பாலத்தில் அமைக்கப்படும் கண்ணாடிச் சாலைகள் 35 முதல் 40 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்டவை இருக்குமாம் . மேலும் தண்ணீர் தேங்காது. இதனால், கண்ணாடிச் சாலைகளைப் பாரமரிக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்த சோலார் தொழில்நுட்பத்தைப் பாலங்களில் மட்டுமின்றி, எல்லா வகையான சாலைகளிலும் பயன்படுத்தலாம்.சோலார் பேனல்கள் கொண்ட கண்ணாடிச் சாலைகள் அமைக்க அதிக செலவாகும் என்றாலும் தார்ச் சாலைகளை விட அதிக ஆயுட்காலம்னால 4 முறை தார் ரோடுகள் அமைப்பதும், ஒரு முறை சோலார் ரோடுகள் போடுவதும் ஒன்னுதான்னு சொல்றாங்க இத கண்டுபிடிச்சவங்க. மின்சாரமும் கிடைப்பதால் வருங்காலத்தில் சோலார் கண்ணாடி சாலைகள் முக்கியத்துவம் பெறலாம்.
சோலார் பேனல்கள் சரியாக வேலை செய்கிறதா என்பதைக் கண்காணிக்க, பாலங்கள்ல ஒவ்வொரு 12 அடி இடைவெளியில ஒரு சென்சார் அமைக்கப்படுது. இதன் மூலம் பழுது ஏற்பட்டுள்ள சோலார் பேனல் அமைந்துள்ள பகுதியை மட்டும் மாற்றிக் கொள்ளலாம்.
தற்போது அமெரிக்கா மற்றும் இத்தாலி ஆகிய நாடுகளில் இந்த சோலார் பாலங்கள் மற்றும் சாலைகள் அமைக்கப்பட்டுறுக்கு . 1.6 கி.மீ. (1 மைல்) தூரத்திற்கு அமைக்கப்பட்ட சோலார் சாலைகள் மூலம் 1.4 மெகாவாட் மின்சாரம் தயாரிக்க முடியும். இந்த மின்சாரம் 1,500க்கும் மேற்பட்ட இந்திய வீடுகளின் மின்சாரத் தேவையை தீர்க்கப் போதுமானது.
தற்போது விற்பனையில் உள்ள பேட்டரி கார்களை எங்காவது ஓர் இடத்தில் சார்ஜ் செய்துதான் ஆகவேண்டும். ஆனால்,' induction plating’என்ற தொழில்நுட்பத்தை பேட்டரி கார்களில் பொருத்தினால், சோலார் சாலைகளில் பயணம் செய்யும்போதே பேட்டரி கார்களை சார்ஜ் செய்ய முடியும். ஒரு சதுர அடி சோலார் பேனல் தற்போது 160 ரூபாய் விலை.
சமீபத்தில இவர்களோட கண்டுபிடிப்பைப்பாத்து பாராட்டிய மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, சோலார் பாலம் தொழில்நுட்பத்தை மதுரையில செயல்படுத்த முழுமுயற்சி எடுப்பதா சொல்லி இருக்காறாம் .
இந்த மாணவர்களுக்கு நம்மோட வாழ்த்துக்களையும் சொல்லுவோம் .
தொடர்புக்கு: 89030 05026
---நன்றி வாரஇதழ்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக