'பாடகர் திலகம்' ,'காந்தக்குரலோன்' T.M சௌந்தராஜன் - மார்ச் 24 1922 -மார்ச் 25 2013(91 வயது)
மார்ச் 24 1922 அன்று பிறந்த T.M சௌந்தராஜன் 1945ஆம் வருஷம் திரை உலகத்திற்க்கு அறிமுகமானார் .தனது 6 வயசுலயே இருந்து முறையான இசையை கத்துக்க ஆரம்பிச்சார்.பல மேடைக்கச்சேரிகளை செஞ்சுருக்கார்.தியாகராஜா பாகவதரை போல ஆகணும்னு ஆசைப்பட்டார்.
இவரோட முதல் பாடலில் இசையமைப்பாளரால நிராகரிக்கப்பட்டவர் இவர் ,பின்னர் 1945ஆம் வருஷம் 'கிருஷ்ணா விஜயம்' படத்துக்காக பாடினார்.ஆனா அந்த படம் 1950ல் தான் வெளியானது.அன்றிலிருந்து இன்றுவரை 'பாடகர் திலகம்' T.M சௌந்தராஜன் இசை உலகத்துல கொடிக்கட்டி பறந்தார்.
இதுவரை 10000க்கும் மேற்பட்ட திரைப்பாடல் 2000க்கும் மேற்பட்ட தெய்வீகப் பாடல்களை பாடி இருக்கார்.பல கர்னாடக சங்கீத கச்சேரிகளையும் செய்துருக்கார் .
சில படங்களில் நடிச்சுருக்கார் .சில பாடங்களை தயாரிச்சு இருக்கார்.
பத்மஸ்ரீ,கலைமாமணி,பாடகள் திலகம்,இசை சக்கரவர்த்தி,சிங்கக்குரலோன் போன்ற பல பட்டங்களை பெற்றுருக்கார்.
கவுரவ டாக்டர் பட்டம்,MGR விருது உட்பட பல்வேறு விருதுகளை வாங்கி இருக்கார்.
பல நடிகர்களுக்கு பின்னணி பாடி இருந்தாலும் ,திரு MGR ,சிவாஜி அவர்கள் பாடும் போது அவர்களே தனது சொந்தக்குரலில் பாடுவதை போன்ற ஒரு எண்ணத்தை நமக்கு ஏற்படுத்தியவர்.திரு MGR ,சிவாஜி அவர்களுக்கு அவர்களின் அனைத்துப் படங்களிலும் பின்னணி பாடி இருக்கார்.
இவரது குரலில் திரு MGR ,சிவாஜி அவர்களின் பாடல்கள் இப்போதும் கேட்க கேட்க திகட்டாமல் இருப்பதற்கு அவர்களின் நடிப்பு மட்டும் காரணம் அல்ல. பாடலின் இசை, பாடலின் வரிகள் அதோடு மனதிலே பதியும் இந்தக் குரல் ,லட்சக்கணக்கான ரசிகர்களை கொண்ட இந்த காந்தக்குரலும் தான் காரணம் என்பதை நம்மால் மறக்க முடியாது.
இவரோட 'கல்லானாலும் திருசெந்தூரில் கல்லாவேன்','உள்ளம் உருகுதய்யா' போன்ற முருகன் பக்தி பாடல்கள் கேட்டா நம்மோடு சேர்ந்து அந்த முருகனே இவரோட குரலில் மயங்கிடுவார்.
TMS அவர்கள் மறந்தாலும் அவரது குரலில் ஒலிக்கும் பாடல்கள் இன்னும் பல தலைமுறைகளை தாண்டி வாழும் என்பதில் சந்தேகமில்லை.

இந்த உலகம் இருக்கும் வரை அவர் குரல் ஒலித்துக் கொண்டு தான் இருக்கும்...
பதிலளிநீக்குஅவரது ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்...
Super anna
நீக்கு