பக்கங்கள் (Pages)

வியாழன், 6 ஜூன், 2013

இன்சுலினா இனி வேண்டாம்

சர்க்கரை நோய்க்குத்தர இன்சுலின், செல் மூலக்கூறில் போய் எப்படி வேலை செய்யுதுங்குறதை ஆஸ்திரேலிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிச்சிருக்காங்க.

இந்த ஆராய்ச்சியோட முடிவு, சர்க்கரை நோய் சிகிச்சையில் புதிய நம்பிக்கையைத் தந்திருக்குறதோட தினமும் இன்சுலின் தேவைப்படும் லட்சக்கணக்கானவங்களுக்கு அதன் தேவையையும் முடிவுக்கு கொண்டுவந்திருக்கு . இந்த ஆராய்ச்சி முடிவுகளை பிரதான ஆராய்ச்சியாளர் மைக் லாரன்ஸ், சர்வதேச மருத்துவ இதழான, ‘நேச்சர்’ (nature) ல் வெளியிட்டு இருக்கார்.

‘இன்சுலினை செலுத்தியவுடன் மூலக்கூறுகள் எப்படி உடம்புல இருக்குற செல்களைத் தூண்டி, இன்சுலின் ஹார்மோனை சுரக்க வைக்குதுங்கறதை இவ்வளவு நாளா புதிராக இருந்தது. 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி பண்ணி கண்டுபிடிச்ச இந்த முடிவுகள், சர்க்கரை நோய்க்கு இப்போ இருக்குறத விட ரொம்ப சக்தி வாய்ந்த புதிய மருந்துகள் கண்டுபிடிக்க உதவும்’ -னு சொல்றார் மைக் லாரன்ஸ்.


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

1 கருத்து:

  1. சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு இது மிக சக்கரையான விஷயம். பகிர்வுக்கு நன்றி

    பதிலளிநீக்கு