பக்கங்கள் (Pages)

வெள்ளி, 7 ஜூன், 2013

நாவல் பழம்

நாவல் பழம் ,சிலபேருக்கு பிடிக்கும் சில பேருக்கு பிடிக்காது .ஆனா அதோட சிறப்பம்சம்கள தெரிஞ்சுகிட்டோம்னா நாவல் பழம் எல்லாருக்கும் பிடிக்க ஆரம்பிச்சுடும்.
  • இரத்தத்தை சுத்தப்படுத்தும் .இரத்ததிலிருக்கும் இரும்பு சத்தை அதிகரிக்கும்.இதனால இரத்தத்தின் கடினத்தன்மை மாறிஇரத்தம் இலகுவாகும்.
  • சிறுநீரகத்தை சீரா செயல்படவைக்கும் மூல நோய் இருக்குறவங்க நாவல் பழம் அடிக்கடி சாப்பிட்டா நோயின் தாக்கம் குறையும் பழுத்த நாவல் பழத்தை உப்பு இல்ல சக்கரை சேர்ந்து சாப்பிட்டு வந்தா வாய்ப்புண் ,வயிற்றுப்புண் ,குடற்புண் எல்லாம் சரியாகும். 
  • அஜீரண கோளாறு சரி செய்ய உதவும் 
  • தூக்கம் இல்லாதவங்க மதியம் சாப்பிட்டதுக்கு அப்பறம் நாவல் பழம் சாப்பிட்டா தூக்கம் இன்மை பிரச்சனை சரியாகும். 
  • ஒல்லியா இருக்குறவங்க தினமும் நாவல் பழம் சாப்பிட்டா உடம்பு தேறுமாம்.  
  • நாவல் பழம் சரும நோய் ஏற்படாமல் பாதுகாக்கும். பித்தத்தை குறைக்கும் 
  • உடல் சூட்டை தணிக்கும் நியாபக சத்தியை அதிகமாக்கும் 
  • பெண்களுக்கான கருப்பை பாதிப்புகளை சரியாகும். 
  • நாவல் பட்டையை இடிச்சு தண்ணி ஊத்தி கொதிக்கவச்சு வடிகட்டி குடிச்சா நீரிழிவு நோயாள உண்டான பாதிப்புகள் சரியாகும். 

 அதனால இந்த சீசன்ல நாவல் பழம் கண்டிப்பா சாப்பிடுங்க.உடம்ப பத்திரமா பாத்துக்குங்க .


இந்த போஸ்ட்-ஐ ஆடியோவிலும் கேக்கலாம்

7 கருத்துகள்:

  1. வாங்கியாச்சி... ஹிஹி...

    கிடைக்கும் போது வாங்கிடுவோம்...

    பயன்களுக்கு நன்றி...

    பதிலளிநீக்கு
  2. //அதனால இந்த சீசன்ல நாவல் பழம் கண்டிப்பா சாப்பிடுங்க.உடம்ப பத்திரமா பாத்துக்குங்க // இப்படி சொல்லிவிட்டு ஒடிப் போகாதீங்க பழம் வாங்கி அனுப்புங்க மேடம்

    யமிக உபயோகமான பகிர்வு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வாங்கி அனுப்பனுமா சார்.. அதனால என்ன அனுபிட்டா போச்சு

      நீக்கு
  3. அருமையான பதிவு.
    நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீண்ட நாட்களுக்கு பின்னர் தங்களுடைய வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி ஐயா

      நீக்கு
  4. சிறு வயதில் சாப்பிட்டது அதன் பின்பு வேலை நிமிர்த்தமாக அங்கே இங்கே என ஓடிக்கொண்டு இருப்பதால் நாவல் பழத்தை நினைத்ததே இல்லை.இதில் இவ்வளவு விஷயம் இருப்பதால் இனிமேல் முயற்சி செய்வேன் நல்ல பயனுள்ள பதிவு நன்றிகள் பகிர்ந்துகொண்டமைக்கு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களுடைய வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி திரு சிவா அவர்களே

      நீக்கு