பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 22 ஜூலை, 2013

விஜய் டி.வி -கோபிநாத் - நீயா நானா - 2

நேத்து 'நீயா நானா ஷோ' எப்போதும் இல்லாம கொஞ்சம் வித்யாசமா இருந்தது..எப்பவும் ஆண்,பெண் இருபாலரும் கலந்து உக்காந்துருப்பாங்க.அது ரெண்டு டீம்-ஆ இருப்பாங்க..நேத்து பெண்கள் எல்லாம் ஒருபக்கம் ஆண்கள் எல்லாம் ஒரு பக்கம் .பெண்களுக்கு அதிகமா பேச வாய்ப்பு இல்ல..ஆண்களுக்கு தான் அதிகமா பேசும் வாய்ப்பு இருந்தது..ஏன்னா ,அந்த தலைப்பு அப்படி..அது என்ன அப்படி பட்ட தலைப்புனு கேக்குறீங்களா? 'பெண்களை ஆண்கள் எப்படி எல்லாம் வர்ணிக்கிறார்கள் ?' .. பின்ன , இந்த தலைப்புக்கு ஆண்கள் தானே அதிகமா பேசமுடியும்..

இந்த தலைப்புல சாதாரணமா பேச ஆரம்பிச்சு , கடைசில சிறந்த மூணு பேரை பெண்கள் மூலமாவே வோட் பண்ணி  செலக்ட் பண்ணினது  வித்யாசமா இருந்தது..ஒரு சின்ன போட்டியே நடந்ததுனும் சொல்லலாம்..பெண்கள் இந்த தலைப்புல பேசின ஆண்கள் சொன்ன கமெண்ட்ஸ்ல எது நல்லா இருந்தது?யார் நல்லா வர்ணிச்சாங்கனு சொல்லணும் இதுதான் வேல..அதுல கோபி சார் கேட்ட சில கேள்விகளும் அதுக்கு ஆண்கள் சொன்ன சில வித்யாசமான, சிரிக்கவைக்குற,எப்படி எல்லாம் யோசிக்குறாங்கயானு நினைக்க வச்ச பதிலும்(வர்ணனைகளும்) இதோ இங்க...


என் தேவதை (வர்ணிக்கணும்) :

- ஆண்டவனை அனிமேஷன்ல பாத்த மாதிரி இருக்கும்

பிரியங்கா சோப்ரா :

பிரியங்கா சோப்ரா டீத் (பல்லு) A.R.ரஹ்மான் கண்ல பட்டா 'கீபோர்ட்'
- லிப்ஸ் கிஸ் பண்ற 'கோப்ரா '.

நார்மல் பெண்கள் :

-ஆல்ட் + டாப் பிரஸ் பண்ற அழகு..
-கீபோர்ட்ல நியூமெரிக் கீஸ்ல இருக்குற எண்ட்டர் தட்டும் போது என்னையே தட்ர மாதிரி இருக்கும்.

வித்யாபாலனின் புடவை :

- சன்ரைஸ்
- தியேட்டர்ல ஸ்க்ரீன்க்கு பதிலா புடவையை மாட்டினா அந்த புடவையை மட்டும் மூணு மணி நேரம் பாப்பேன்.
- மின்னலும் மேஜிக்க்கும் மிக்ஸ் பண்ணின மாதிரி இருக்கும்.

அழகான டீச்சர் :

- அடுத்த கிளாஸ்க்கு போனா கோவம் வரும்
- டஸ்டர்ல இருக்குற டஸ்ட் கூட மேல படக்கூடாதுன்னு நினைப்போம்.
-அந்த டீச்சர் அடிச்சா எவ்ளோ வேணும்னாலும் வாங்கிக்கலாம்.

பெண்களின் குரல் :

-காத்து கம்போஸ் பண்ணி அனுப்பின மாதிரி இருக்கும்

சத்யம் தியேட்டர்க்கு வரும் பெண்களை பார்க்கும் போது  :

- 120 ரூபாய் வொர்த்
-தியேட்டர் வெளில படம் பாக்கலாம்



இந்த எபிசோட் முழுவதும் பாக்கணுமா ?



நீங்க எப்படி எல்லாம் பதில் சொல்லி இருப்பீங்க...?????

1 கருத்து:

  1. நானும் இந்த நிகழ்ச்சியை மிகவும் ரசித்தேன் பசங்க எப்படியெல்லாம் பெண்களை வர்ணிக்கிறார்கள் என்பது மிகவும் ரசிக்க தக்கதாக இருந்தது எந்த வித ஆபாசமும் இல்லாமல்

    பதிலளிநீக்கு