படம் :ரௌத்திரம்
பாடல் : மாலை மங்கும் நேரம்
பாடியவர் : ரெய்னா ரெட்டி
இசை : பிரகாஷ் நிகி
பாடலாசிரியர் : தாமரை
மாலை மங்கும் நேரம்பாடல் : மாலை மங்கும் நேரம்
பாடியவர் : ரெய்னா ரெட்டி
இசை : பிரகாஷ் நிகி
பாடலாசிரியர் : தாமரை
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
பூங்காற்றும் போர்வை கேட்கும் நேரம் நேரம்
தீயாய் மாறும் தேகம் தேகம்
உன் கைகள் என்னை தொட்டு போடும் கோலம்
வாழ்வின் எல்லை தேடும் தேடும்
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
ஒரு வீட்டில் நாமிருந்து
ஓர் இலையில் நம் விருந்து
இரு தூக்கம் ஒரு கனவில்
மூழ்கி வாழ்க்கை தொடங்கும்
நான் சமையல் செய்திடுவேன்
நீ வந்து அணைத்திடுவாய்
என் பசியும் உன் பசியும்
சேர்ந்தே ஒன்றாய் அடங்கும்
நான் கேட்டு ஆசைபட்ட பாடல் நூறு
நீயும் நானும் சேர்ந்தே கேட்போம்
தாலாட்டை கண்ணில் சொன்ன
ஆணும் நீ தான்
காலம் நேரம் தாண்டி வாழ்வோம்
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஓரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
பால் சிந்தும் பௌர்ணமியில்
நாம் நனைவோம் பனி இரவில்
நம் மூச்சுக் காய்ச்சலில்
இந்த பனியும் நடுங்கும்
வீடெங்கும் உன் பொருட்கள்
அசைந்தாடும் உன் உடைகள்
தனியாக நான் இல்லை
என்றே சொல்லி சினுங்கும்
தீண்டாமல் தீண்டி போகும் வாடை காற்றே
தூக்கம் தீர்ந்து நாட்கள் ஆச்சு
உன் வாசம் என்னில் பட்டும் ஆடி போனேன்
வாசல் தூணாய் நானும் ஆனேன்
மாலை மங்கும் நேரம்
ஒரு மோகம் கண்ணின் ஒரம்
உன்னை பார்த்து கொண்டே நின்றாலும்
போதும் என்று தோன்றும்
காலை வந்தால் என்ன
வெயில் எட்டி பார்த்தால் என்ன
கடிகாரம் காட்டும் நேரம்
அதை நம்ப மாட்டேன் நானும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக