பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 26 ஜூலை, 2013

நம்ம ஆட்டோ

வாடகை டாக்ஸி, கார் போன்று, ‘நம்ம ஆட்டோ’ என்ற பெயரில் புதிய கம்பெனி ஒன்னு சென்னையில் துவக்கி இருக்காங்க . நிர்ணயிக்கப்பட்ட கட்டணம், எலெக்ட்ரானிக் மீட்டர், இறங்கும்போது எவ்வளவு தூரம் பயணம் செஞ்ஜோம் ,அதுக்கான கட்டணம் போன்ற விவரங்களைச் சொல்லும் அச்சிடப்பட்ட பில் என்று இந்த ஆட்டோக்களில் கிடைக்குமாம் .



முதல் கட்டமா 17 ஆட்டோக்கலும் சீக்கிரமே சென்னை முழுவதும் 350 நம்ம ஆட்டோ ஓட்டத் திட்டமிட்டிருக்குதாம் .


எலெக்ட்ரானிக் மீட்டர் பொருத்தப்பட்டுள்ள நம்ம ஆட்டோவில் முதல் 2 கிலோ மீட்டருக்கு குறைந்தபட்சக் கட்டணமாக 25 ரூபாய்.அதன்பின் ஒவ்வொரு கூடுதல் கி.மீ.க்கும் 10 ரூபாய் நிர்ணயித்து இருக்கிறார்கள். இந்தக் கட்டணத்தில் 2 மணி நேரத்திலேயே 650 ரூபாய் சம்பாதிக்க முடியும்,நியாயமான கட்டணத்தை நிர்ணயித்து, ஒரு நாளைக்கு 4 மணி நேரம் வேலை செய்தாலே கணிசமான லாபத்தைப் பெற முடியும்னு சொல்றாங்க .


இதுபோன்ற மீட்டர் பொருத்தப்பட்ட ஆட்டோக்களில், மேல்புறத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் நம்ம ஆட்டோனு எழுதப்பட்டு இருக்குமாம்.

தொடர்புக்கு : 044 65554040 /65552020
infonammaauto.com,
www.nammaauto.com




                                    ----வார இதழில் இருந்து 

5 கருத்துகள்:

  1. நம்ம ஆட்டோ பற்றிய சேதியை ஒரு வாராந்தரியில் படித்திருந்தேன்.கடந்த செவ்வாய் அன்று அதிக செல்லும் வாய்ப்பு கிடைத்தது. மாலை 05,15 மணிக்கு தி,நகர் கிருஷ்ணகான சபாவில் "ரமணனைக் கேளுங்கள்"
    நிகழ்ச்சிக்கு 1.7 கிலோ மீட்டர் தூரததை வெறும் 25 ரூபாயில் பில்லுடன் இனிய முறுவலுடன் நம்ம ஆட்டிவில் பயணித்த அனுபவம் கிடைத்து. .
    பெயருக்கு பொருத்தமான ஆட்டோ சேவை தான. மிகத் தேவையானதும் கூட

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்கள் அனுபவத்தை பகிர்ந்தமைக்கு நன்றி திரு.வாசன்

      நீக்கு
  2. எங்கினும் இந்த சேவை தொடர வேண்டும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெயரில்லா26 ஜூலை, 2013

      Namma Auto is very essential for Coimbatore city where the people are suffering a lot by the greedy Auto drivers.

      நீக்கு
  3. அருமை. எல்லா ஊரிலும் இதே மாதிரி சேவை வரவேண்டும். எல்லோரும் ஆட்டோவில் பயணம் செய்ய இயலும்.
    நன்றி.

    பதிலளிநீக்கு