பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

பாடலின் வரிகள் - காதல் ரோஜாவே - ரோஜா

படம் :ரோஜா 
பாடல் : காதல் ரோஜாவே 
பாடியவர்கள் : s .p .b 
பாடலாசிரியர் :வைரமுத்து 
இசை : A .R .ரஹ்மான் 

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீதான்
கண் மூடிப்பார்த்தால்
நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்


தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் நியாபகம்
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம்பார்த்த நியாபகம்
வெள்ளியோடை பேசினால்
சொன்ன வார்த்தை நியாபகம்
மேகம் ரெண்டும் சேர்கையில்
மோகம் கொண்ட நியாபகம்
வாயில்லாமல் போனால்
வார்த்தை இல்லை கண்ணே
நீ இல்லாமல் போனால்
வாழ்க்கை இல்லை கண்ணே
முள்ளோடுதான் முத்தங்களா
சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்

வீசுகின்ற தென்றலே
வேலை இல்லை நின்றுபோ
பேசுகின்ற வெண்ணிலா
பெண்மை இல்லை ஓய்ந்துபோ
பூ வளர்த்த தோட்டமே
கூந்தல் இல்லை தீர்ந்துபோ
பூமி பார்க்கும் வானமே
புள்ளியாக தேய்ந்து போ
பாவை இல்லை பாவை
தேவை இல்லை தேவை
ஜீவன் போன பின்னே
சேவை என்ன சேவை
முள்ளோடுதான் முத்தங்களா
சொல் சொல்

காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர்
கண்ணுக்குள் நீ தான்
கண்ணீரில் நீதான்
கண் மூடிப்பார்த்தால்
நெஞ்சுக்குள் நீ தான்
என்னானதோ ஏதானதோ
சொல் சொல்
காதல் ரோஜாவே
எங்கே நீ எங்கே
கண்ணில் வழியுதடி கண்ணீர் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக