எங்க ஏரியால ஒரு பெண்மணி இருக்காங்க...அவங்க பிச்ச எடுக்குறவங்களும் இல்ல ,வீடு குடும்பம்னு வாழுறவங்களும் இல்ல...ரொம்ப வயசானவங்களும் இல்ல, ரொம்ப இளமையானவங்களும் இல்ல...அவங்கள முழுசா பைத்தியமோனு நினச்சுடவும் முடியாது...கணிக்கவும் முடியாது..
சாப்பாடு கேட்டு வீட்டு கேட்டை தட்டினாங்க ..என் அம்மா கோவமா ஏதும் இல்லமா போ-னு சொல்லி அனுப்பினாங்க..எனக்கு செம கோவம்..பொறுமையா சொல்லாம் இல்ல , பாவம் தானே, ஏன் இப்படி கோவமா சொல்றீங்கனு கோவிச்சுகிட்டேன் ..வேற யாரும் இவங்களுக்கு சாப்பாடு குடுக்கமாட்டாங்க ..சில பல சமயம் தண்ணி கூட தரமாட்டாங்கனு சொன்னாங்க என் அம்மா ..ச்ச ..இப்படி இருக்காங்களே ஜனங்க , கொஞ்சம் கூட மனசே இல்லாமனு முனுமுனுத்துக்கிட்டு இருந்தேன் ..உனக்கு தெரியாது ,பேசாம வாய மூடிக்கிட்டு உன்வேலைய பாருன்னு சொன்னாங்க என் அம்மா ...
இன்னோர் நாள் அதே மாதிரி சாப்பாடு கேட்டு வீட்டு கேட்டை தட்டினாங்க .. அய்யோ பாவம் பசியால இருக்காங்கலேன்னு சாப்பாடு குடுத்து , எப்படி கவுண்ட்டர் வாங்கினேன் தெரியுமா?
- இதுதான் இருக்கா?ஏன் இன்னைக்கு வேற எதுவும் சமைக்கலையா?
(முகத்தை சுழிச்சுகிட்டு)
என் அம்மாவை திரும்பி பாத்தேன்..பெருசா எங்கிட்ட சத்தம் போட்ட,நல்லா வாங்குன்னு சொல்லிட்டு உள்ள போய்ட்டாங்க..
பாவம்ன்னு நினச்சு பராவாஇல்ல பேசட்டும் , போகட்டும்னு சாப்பாடையும் கொடுத்துட்டு , இப்படி ஒரு ஒரு நாளும் என்ன என்ன கவுண்ட்டர் வாங்கி இருக்கேன் தெரியுமா?
- சாதம் சூடா இல்லையா?
-இட்லிக்கு தொட்டுக்க ஏதும் இல்லையா?
-அப்பா...இவ்வளவு காரத்தையா போடுவீங்க...எப்படித்தான் சாப்புடுறீங்களோ ?
-கத்தரிக்கா கொழம்பா ?எனக்கு பிடிக்காதே....சொல்லிட்டு ஊத்தி இருக்கலாம் இல்ல சாப்பாட்டுல...
சில சமயம் ஏதும் இல்லைனா/இல்ல சாப்பிட்டு முடிச்சுருந்தோம்னா ,இல்லைன்னு அவங்க கிட்ட சொன்னா..
- ஏன் இன்னைக்கு ஏதும் சமைக்கலையா?சமைக்காம என்னதான் பண்ணுவீங்களோ அப்படி?!?
-ஏன் தண்ணி பாட்டில்ல தான் குடுப்பீங்களா ?சொம்புல குடுத்தா என்ன?ஏன் உங்க வீட்ல சொம்பே இல்லையா?
வடிவேல் சார் டயலாக் மாதிரி ,இந்த அவமானம் உனக்கு தேவையான்னு என்ன நானே கேட்டுக்குறேன் ..
என்ன கொடுமைங்க இது... இதுமாதிரி பேசினா எப்படிங்க செய்ய மனசுவரும்...
ஒரு நாள் கோவம் வந்து நாங்களும் இந்த பாட்டில்ல தான் தண்ணிகுடிக்குறோம் , உங்களுக்கு குடுக்குறதுக்கு எனக்கு இதுலாம் தேவைதான்னு சத்தமே போட்டேன்..
ரொம்ப சோதிக்குறாங்க பாஸ்....