பக்கங்கள் (Pages)

வியாழன், 26 செப்டம்பர், 2013

சென்னை எக்ஸ்பிரஸ் படம் எனக்குப் பிடிச்சதுக்கான காரணம்

சென்னை எக்ஸ்பிரஸ் படம் எனக்குப் பிடிச்சதுக்கான காரணம்


-முதல்ல, பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹீரோயின் தீபிகாவின் பெயரை முதல்லயும் தன்னோட பெயரை இரண்டாவதுமாக டைட்டில் கார்ட்ல போட சம்மதிச்சது

-ஹாலிவுட்க்கு நிகரா எல்லா 'ஸீனு'ம் பாலிவுட்ல சர்வ சாதாரணமா எடுத்துக்கிட்டு இருக்குற இந்த சமயத்துல , ஒரு சின்ன அருவருப்பு காட்சியோ ,முகம் சுழிக்குற காட்சியோ இல்ல தலைகுனியுற காட்சியோ இல்லாம இந்த படத்தை எடுத்திருக்குற விதம் .( அட ஒரு 'கிஸ்' ஸீன் கூட இந்த படத்துல இல்லைனா பாத்துக்கோங்க )

-இது ஒரு சாதாரண கமர்ஷியல் மசாலா படம் தான்....ஆனா ஹீரோவுக்கு மட்டும் முக்கியத்துவம் குடுத்து படத்தை எடுக்காம ஹீரோவுக்கு நிகரா ஹீரோயினுக்கும் முக்கியத்துவம் குடுத்து காட்சிகளையும் குடுத்துருக்குறது.



-பெரிய ஹீரோ, பாலிவுட் சூப்பர் ஸ்டார் இந்த பந்தா எதுவும் இல்லாம எல்லாவித கோனாங்கித்தனத்தையும் சேஷ்டையும் செஞ்சு நடிச்சுருக்குற ஷாருக்கான் .(ஹீரோயின் கிட்ட உதை கூட வாங்கிருக்காறு இந்த படத்துல)

-அவருக்கு சமமா அசால்ட்டா என்னாலையும் முடியும்னு எல்லாவித கோனாங்கித்தனத்தையும் சேஷ்டையும் செஞ்சு அழகா நடிச்சுருக்குற தீபிகா...அழகு சிரிப்பு(சோனம் கபூர் ஸ்மைல் கூட அழகா இருக்கும்,எனக்கு பிடிக்கும்) ,சிரிக்கும் போது அழகா கன்னத்துல விழுற குழி ....என்ன மாதிரி டிரஸ் பண்ணினாலும் அழகா இருக்காங்க

-பல தமிழ் பட நடிகர் நடிகைகளின் முகங்களை பாக்க முடியுது இந்த படத்துல.சத்தியராஜ் சார்-ஐயும் சேர்த்துதான் சொல்றேன்.

-டட்லீயின் ஒளிப்பதிவு

-விஷாலின் இசை ...

-ஜாலியா போனுச்சு ரெண்டரை மணிநேரம்

தமிழர்களை அவமானப் படுத்துற விதத்துல படம் டயலாக் இருக்குனு பலபேர் கருத்து சொன்னாங்க படம் வந்த புதுசுல..

இதுல எங்க அப்படி நம்மள அவமானப் படுத்துரமாதிறி டயலாக் இருக்குனு எனக்கு தெரியல..தமிழையும் தமிழர்களையும் கிண்டல் பண்ணனும் நக்கல் பண்ணனும்னா அதுக்கு ஒரே ஒரு கேரக்டர் போட்டு அந்த கேரக்டர் படம் முழுக்க தமிழ் பேசுறமாதிரி அதை படம் முழுக்க கிண்டல் பண்றமாதிரி எடுத்திருக்கலாமே ?சவுத் இந்தியாவுக்கு அதுவும் தமிழ் ஆளுங்க இருக்குற ஊருக்கு வரதா கதை அமச்சா தமிழ்ல பேசுறமாதிரி தானே டயலாக் இருக்கணும் அதத்தானே செஞ்சுருக்காங்க..ஒரு தமிழ் பொண்ண கல்யாணம் பண்ண தானே ஹீரோ கடைசியா (வழக்கம் போல) அடி வாங்குறார் சண்டைப் போடுறார்..

எல்லா பெரிய ஆளுங்க படத்துக்கும் ரிலீஸ்க்கு முன்னாடி எதிர்ப்பு சொல்றது இப்போ ஒரு ஃபேஷன் ஆகிடுச்சு.வேற என்ன சொல்ல?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக