பக்கங்கள் (Pages)

வியாழன், 24 அக்டோபர், 2013

உங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க பெற்றோர்களே!!!!


பிள்ளைங்க காதலிக்க ரெண்டுவிஷயத்தை முக்கிய காரணமா சொல்லலாம்

1. இவங்க தன்னோட அம்மா /அப்பா போலவே இருக்காங்க குணத்துல , அந்த கம்ஃபர்டபெல் இவங்க கிட்டயும் இருக்கும்னு நினைச்சு காதலிக்குறது.

2.அன்பும் அரவணைப்பும் சரியா/சுத்தமா கிடைக்காம ,திடீர்னு அது கிடைக்கும் போது அவங்க மேல காதல் வருவது..

முதல் வகை சாதாரணமானது ஆனா இரண்டாவது வகைல காதலிக்குறவங்கதான் ரொம்ப ஈஸியா ஏமாந்து போகுறது..

இதே அன்பு காலம் முழுக்க கிடைக்கும்னு நினச்சு அது பாதியில கிடைக்காம போகும் போதோ இல்ல / ஒரு கட்டத்துல கிடைக்காம போகுறதோ தான் அவங்களுக்கு மனசுல வலியை இன்னும் இன்னும் அதிகமா உண்டாக்கும்..

இந்த ரெண்டாவது வகைக்கு காரணம் பெத்தவங்கதான்..பெத்தவங்ககிட்ட கிடைக்காததைதான் அவங்க வெளில தேடுறாங்க..சிலபேருக்கு நல்ல விதமா அமையுது பலபேருக்கு ஏமாற்றம் தான் மிஞ்சுது....இப்படி பல ஏமாற்றம் தான் சமுதாயத்துல அந்த பிள்ளையை தவறான வழிக்கு போக தூண்டுது...நீங்க பெத்து வளத்த உங்க குழந்தைகள் வீணாபோக நீங்களே காரணம் ஆகிடாதீங்க பெற்றோர்களே....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக