பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

ஞாயிறு, 27 அக்டோபர், 2013

குடும்ப அட்டை எப்படி பெறுவது?

குடும்ப அட்டையை விண்ணப்பிக்குறதுக்கான விண்ணப்பபடிவம் எல்லா தாலுகா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கும் . தமிழக அரசின் இணையதளத்தில கூட டவுன்லோட் பண்ணிக்கலாம். http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdf


சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவங்க அவங்க வசிக்குற பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்கணும் .

மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவங்க வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்கணும் விண்ணப்பத்தைப் பதிவுத் தபாலிலும் அனுப்பலாம். நேர்ல கொடுத்தா கொடுத்ததுக்கான ரெசிப்ட் கண்டிப்பா வாங்கிக்கோங்க.

புதிய குடும்ப அட்டை வாங்கும்போது ரூ10 கட்டணமாக வாங்கிக்குறாங்க.

விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு அதோட கீழ்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்னோட ஜெராக்ஸ் சேர்த்து தரனும்.

1.தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாசத்துக்கான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்னு அல்லது வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முதல் பக்க ஜெராக்ஸ் / பாஸ்போர்ட் ஜெராக்ஸ்/ வாடகை ஒப்பந்தம் இதுல ஏதாவது ஒன்னு மட்டும் போதும் . ஒரு வேளை இந்தச் சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் வாங்கி கொடுக்கலாம்.
v 2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று.

3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் (TSO) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.

4.முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் குடும்ப அட்டை இல்லை என்ற சான்று.

5.எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்களை தரனும் .

6.விண்ணப்பத்தை கொடுத்ததுக்கு அப்பறம் விண்ணப்பத்தோட வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி இது எல்லாம் சேந்த ஒப்புகைச் சீட்டை மறக்காம வாங்கிக்கணும் . பதிவுத் தபாலில் அனுப்புறவங்க தன்னோட முகவரியிட்ட தபால் தலையோட இருக்குற தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.

குடும்ப அட்டை தொலைஞ்சு போச்சுன்னா புது குடும்ப அட்டை வாங்க

தொலைஞ்சு போன குடும்ப அட்டையோட ஜெராக்ஸ் மற்றும் ஏதாவது ஓர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ்யைம் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணைய அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்ங்க குடுக்குற விண்ணப்பத்தைப் பூர்த்தி செஞ்சு தரனும் .அவங்களோட விசாரணைக்குப் பிறகு புதுக் குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டைகிடைச்சிடும் . இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்தணும்.

விண்ணப்பித்த 30 நாட்கள்ல அதிகாரிகள் நேர்ல வந்து ஆய்வு செஞ்சு 60 நாட்களுக்குள்ல குடும்ப அட்டை கொடுக்கணும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கப்படாததற்கு காரணம் சொல்லநம் . அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்கணும் .

சரியான காரணம் இல்லாம காலதாமதம் ஆனா நீங்க புகார் செய்யணும்னு நினச்சா மாநில நுகர்வோர் மையத்தை 044 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumertn.gov.in, schtamilnadugmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4ஆவது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை-5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.

தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.

உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய http://cscp.tn.nic.in/allotmentver2/repallotmentshopwise.jsp இத்தளத்திற்குச் செல்லவும்.

http://egov-civilmis.pon.nic.in/SearchCardPondyAppNo.aspx புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இத்தளத்திற்குச் சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.

மேலும் விவரங்களை அறிந்துகொள்ள http://www.consumer.tn.gov.in/fairprice.htm

                                                      --நன்றி வாரஇதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக