பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

திங்கள், 28 அக்டோபர், 2013

நல்ல செய்தி

இப்போலாம் குழந்தைங்க அதிகம் செலவு செய்றது மொபைல் போன்ல தான்.
எவ்ளோ சொன்னாலும் கேக்குறது இல்ல..இதனால கவலைப்படாத,கோவப்படாத பெற்றோர்கள்  இருக்கவே முடியாதுங்குற நிலைக்கு வந்தாச்சு..இந்த பெற்றோர்களுக்குநிம்மதி குடுக்குற விதமா குழந்தைகள் அளவுக்கு அதிகமாக மொபைல் போனைப் பயன்படுத்துவதைத் தடுப்பதற்காகவும் டொரோண்டோவில் செயல்பட்டு வரும் நிறுவனமொன்று புதியதொரு ஆன்ட்ராய்டு மென் ஒருங்கியை உருவாக்கியிருக்கு.


KYTEPHONE என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஒருங்கியை யார் வேண்டுமானாலும் (இன்டர்நெட் வசதியுடன்) தங்களின் மொபைல் போனில் டவுன்லோட் செஞ்சு ,இன்ஸ்டால் பண்ணிக்கலாம்.
.
இந்த ஒருங்கியை மொபைல் போனில் பயன்படுத்துவதற்கு ஒரு யூசர்நேம்,பாஸ்வேர்ட்  ஒன்றையும் புதிதாக உருவாக்கி, SIGN UP / IN பண்ணனும்.

உடனே ஆன்ட்ராய்டு பயன்பாட்டிலுள்ள மொபைல் போன் KYTEPHONE ஒருங்கியின் புதிய முகப்பு, திரைக்கு மாறிடுது (PARENT மோடிலிருந்து CHILD மோடுக்கு மாறிடுது). இந்தப் புதிய முகப்புத் திரையிலிருந்து குழந்தைகள் வெளியேற முடியாது. மொபைல் போனை சுவிட்ச் ஆஃப் செய்து, ஆன் செஞ்சாகூட இந்தத் திரையை விட்டு குழந்தைகளால வெளிலவர முடியாது .



திரும்ப PARENT மோடுக்கு மாற, பெற்றோர்கள் பயன்படுத்திய பாஸ்வேர்டை  பயன்படுத்தனும்.
இதன்மூலமா  அந்த செல்போனில, பெற்றோர்கள் தேர்வு செய்றவங்களுக்கு   மட்டும்தான்  குழந்தைகள் கால் செய்யவோ, மெசேஜ் செய்யவோமுடியும் . அவங்க  தேர்வு செய்யும் APPLICATIONS மற்றும் கேம்ஸ்களை மட்டும்தான்  குழந்தைகளால பயன்படுத்த முடியும். பெற்றோர்கள் தேர்வு செய்யும் வெப்சைட்களை மட்டும்தான்  குழந்தைகள் பயன்படுத்த முடியும்.குழந்தைகள், கேம்ஸ்களை எவ்வளவு நேரம் விளையாடலாம்கறதையும் பெற்றோர்களே நிர்ணயிக்கலாம்.

பெற்றோர்கள் வேறு இடங்கள்ல இருந்தும் தங்கள் பிள்ளைகள் மொபைல் போனில் என்ன செய்றாங்க , என்ன செஞ்சுருக்காங்க என்பதையும் (கைட்போனின் வலைத்தளத்தில் SIGN IN‡ செய்து பேரண்டல் டேஷ் போர்டு உதவியுடன்) கம்ப்யூட்டர், TABLET போன்ற கருவிகளைப் பயன்படுத்தி அறிந்து கொள்ளலாம்.

மேலும் தங்கள் குழந்தைகள் எந்த இடத்தில் உள்ளார்கள் என்பதையும் –MAPS -களின் உதவியுடன் அறிந்துகொள்ளலாம். இந்த ஒருங்கியை கூகுள் ப்ளே ஸ்டோரிலும் (http://play.google.com/store/apps/details?id=com.kytephone.com) என்ற தளத்திலும் டவுன்லோட் செஞ்சுக்கலாம்..

                                              ---நன்றி வார இதழ் 

2 கருத்துகள்: