பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

சனி, 12 அக்டோபர், 2013

ஜாதி தேவையில்லை

அந்த அரசாணை (நிலை) 205-இல், ‘பார்வையில் காணும் (அரசாணை 1210, நாள். 02.07.1973) அரசாணையின்படி - இடைநிலைப் பள்ளிச் சான்றிதழ் மற்றும் மாற்றுச் சான்றிதழ் ஆகியவற்றில் ஜாதி இல்லை, சமயம் இல்லை என்று குறிப்பிடவோ, அந்த இரு பத்திகளுக்கும் எதிரான இடத்தைக் காலியாக விடவோ எவரேனும் விரும்பினால், அவ்வாறே செய்யும் உரிமையை அவருக்கு அளிக்கலாம் என பள்ளிக்கல்வி இயக்குநருக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. பள்ளியில் சேரும்போதும் மற்ற சமயங்களிலும் பெற்றோர் விருப்பப்படாவிட்டாலும் தெரிவிக்க இயலாவிட்டாலும் ஜாதி, சமயக் குறிப்பு தேவையில்லை எனவும் ஆணையிடப்படுகிறது’ என்று தெரிவித்தது.

‘பார்வையில் கண்ட அரசாணையின்படி மாணவர்களை பள்ளியில் சேர்க்கும்போது சம்பந்தப்பட்ட மாணவர்களின் பெற்றோர்/பாதுகாவலர் விருப்பப்பட்டால் அந்த மாணவனின் பள்ளிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ்களில் ஜாதியில்லை, சமயமில்லை என்று குறிப்பிடவோ அல்லது அந்த வினாக்களுக்கு எதிரான இடத்தில் காலியாக விடவோ எவரும் விரும்பினால் சம்பந்தப்பட்டவரின் விருப்பக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டு அவர்களின் விருப்பப்படியே சான்று வழங்கலாம்

இன்னொன்றையும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஜாதியைக் குறிப்பிடாதவர்களின் குழந்தைகள், பொதுப்பிரிவில் உள்ளவர்களாகக் கருதப்படுவார்கள்.இடஒதுக்கீடு போன்ற சில சலுகைகள் அவர்களுக்குக் கிட்டாமல் போகலாம்.

ஜாதி இல்ல ஒண்ணுமில்ல ஜாதியை ஒழிப்போம்னு சொல்றவங்க எல்லாம் எங்க மொதல்ல இத செய்யுங்க பாப்போம் ..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக