இரண்டாம் உலகம் படத்தப்பத்தியான விஷயங்கள் பாத்துக்கிட்டு/படிச்சுக்கிட்டு இருந்தப்போ காஃபி வித் DD ப்ரோக்ராம் பாக்க நேர்ந்தது..அதுல ஆர்யாவும் அனுஷ்காவும் இரண்டாம் உலகம் படத்தோட ஷூட்டிங் பத்தி சிலது சொன்னாங்க...
ஜார்ஜியால 90 நாட்கள் ஷூட்டிங் நடந்துருக்கு..அப்போ ஆர்யா சொன்ன விஷயம், அங்க டோட்லோன்ங்குற இடத்துல ஷூட்டிங் பண்ணினோம் .மலை மேல சின்ன சின்ன குடிசை மொத்தமா ஒரு 13 குடிசை இருக்கும் .ஒரு குடிசைக்கு 8 படுக்கை (பெட்) .ஒரு குடிசைக்கு ஒரு காமன் பாத்ரூம் தான்னு சொன்னார்..எங்களுக்குள்ல ஹீரோ டைரக்டர்னு எந்த பேதமும் இல்ல .யார் முன்னாடி வராங்களோ அவங்க தான் பாத்ரூம் முதல்ல யூஸ் பண்ணிகமுடியும்..இதுனால எங்களுக்கு எந்த பிரச்சனையும் வரல..ஸ்போட்டிவா எடுத்துகிட்டோம்னு சொன்னார்..
முதல்ல ஆச்சரியமா இருந்தாலும் கொஞ்சம் யோசிக்கும் போது இது எவ்ளவு பெரிய விஷயம்னு தோணுது..
ஏன்னா ,கொஞ்சம் பாப்புலர் ஆகிட்டா நடிகர்கள் நடிகைகள் தனக்குனு தனியா கேரவேன் வேணும்னு கேக்குறது,இந்த சாப்பாடு தான் வேணும்,இந்த ஜூஸ் தான் வேணும் , வெளியூர்க்கு ஷூட்டிங் போனா ஸ்டார் ஹோட்டல்ல தான் தங்குவோம்ங்றது ,தன் கூட தன் குடும்பத்துல இருந்து யார் வராங்களோ அவங்களுக்கு அதே வசதிகள் செஞ்சுதரனும்ங்குறது ,தண்ணிகூட மினரல் வாட்டர் தான் வேணும்குறது இதுல எதாவது கிடைக்கலைனா உடனே பேக்கப்னு போய்டவேண்டியது ..
ஒரு வேல இந்த எல்லா வசதியும் செஞ்சுதந்தாலும் , சின்ன சண்ட இல்ல சின்ன தலைவலி இல்ல சின்ன காயம் இல்ல மனசு சரியில்ல இப்படி எதாவது ஒரு காரணத்தை காட்டி அதிகாரத்தை உபயோகிச்சு பேக்கப்னு போய்டவேண்டியது .இதுனால தயாரிப்பாளருக்கு எவ்வளவு நஷ்டம் ஆகும்னு நினைக்குறது எல்லாம் ரெண்டாம் பச்சம் தான்..நடிகர்களுக்கும் நடிக்குற திறமை வேணும் இல்லைன்னு சொல்லல..அது அவங்களுக்கு கண்டிப்பா இருக்குதான்.ஆனா அதுனால மட்டும் அவங்க பாப்புலர் ஆகல..
இவங்க இவ்வளவு பாப்புலர் ஆக காரணம் இவங்கள பின்னாடி இருந்து இயக்குற டைரக்டர் , சினிமாட்டோகிராபர்,எடிட்டர் ,மேக்கப் ஆர்டிஸ்ட்,காஸ்ட்யூம் டிசைனர் ,கோரியோகிராபர்,ஸ்டண்ட் மாஸ்டர்,மியூசிக் டைரக்டர்,டூப் போட்றவங்க ,லைட் மேன் இன்னும் எத்தனையோ பேர்..இவங்க எல்லாராலையும் தான் நடிகர்கள் ஜொலிக்குறாங்க....ஆனா எல்லா பெருமையும் நடிகர்களுக்கு மட்டும் தான் போகுது..பொருளாதாரத்துளையும் ஸ்டேட்டஸ்ளையும் நடிகர் நடிகைகள் தான் உயர்ந்து இருக்காங்க..
எதோ ஒரு சில மிகப் பெரிய டைரக்டர்கள் மட்டும் தான் நடிகர்களுக்கு ஓரளவுக்கு சமமா இருக்காங்க..அப்போ கூட ஒரு படம் ரிலீஸ் ஆகும் போது அந்த நடிகர்களுக்கு தான் கட்அவுட் வைக்குறோமே,மாலை போடுறோமே தவிர எவ்வளவு பெரிய டைரக்டர்களா இருந்தாலும் அவங்களுக்கு யாரும் கட்அவுட் வைக்குறதே இல்ல..டைரக்டர்க்கே இந்த நிலைமைனா மத்த டெக்னீஷியன்ஸ் பத்தி சொல்லவே வேணாம்.எல்லாத்துக்கும் மேல ப்ரோட்டியூசர் ...
இவங்க எல்லாரும் இன்னைக்கு வசதியா வாழுறதுக்கு முதல் காரணமே இந்த ப்ரோட்டியூசர்ங்குற முதலாளிகள் தான்.அவங்களுக்கு கீழ இருக்குற தொழிலாளிகள் தான் மத்த எல்லாரும்..ஆனா ப்ரோட்டியூசரா ?!இவரா ப்ரோட்டியூசர்?னு கேக்குற நிலைமைதான் இருக்கு .இன்னும் சொல்லனும்னா அவங்களாம் யாருனே பாதிபேருக்கு தெரியாது.
இதுக்கு முக்கியமான காரணம் ரசிகர்களாகிய நாமதான்.நம்ம ஹீரோ அடிச்சா நாலு தெரு தள்ளி போய் வில்லன் விழுறாங்கனா , அது நிஜம் இல்ல ட்ரிக் , நம்ம ஹீரோ பெரிய சாகசம் பண்றமாதிரியான ஸீன்னா நம்ம ஹீரோ பண்ணல அவருக்காக உயிரை பணயம் வச்சு ஒரு டூப் தான் பண்றார்னு எப்போ புரிஞ்சுக்கப் போறோம்..நாம மாறினாதானே அவங்க மாறுவாங்க..நாம எல்லாத்துக்கும் காரணம் நம்ம ஹீரோ தானேனு அவரை மட்டும் தலைல தூக்கி வச்சு ஆடாம எல்லாரையும் சமமா மதிச்சா தானே அவங்க தொழில்ல நம்மள மாதிரி நம்ம அப்பா மாதிரி கஷ்டப்படுற மிடில் கிளாஸ்,இல்ல லோயர் கிளாஸ்ல இருக்குறவங்களும் நல்லா இருக்க முடியும்னு நாமதானே உணரனும். அத ஏன் செய்ய மாட்றோம்?
இதுல நடிகர்களுக்கு இப்படினா , ஒரு 30% பேர் தான் நடிகையோட நடிப்புக்காக வரவங்க .மீதி எல்லாரும் நடிகையோட கவர்ச்சியை பாக்க வரவங்கதான்..யார தப்பு சொல்றது காட்றதுனால பாக்குறோம்னு சொல்றவங்களையா ? பாக்குறதுனால காட்றோம்னு சொல்றவங்களையா ? சரி இத விடுங்க ...
இந்த படத்துக்கு ,இவங்க அந்த 90 நாள் இருந்தமாதிரியே எப்பயுமே இருந்தா என்ன..மத்த தொழில் மாதிரி சினிமாவும் ஒரு தொழில் அவ்ளோதான்..நடிகர்கள்.நடிகைகள் மத்த டெக்னீஷியன்ஸ் எல்லாருமே அதுல வேலை செய்றவங்க..ஸோ, எல்லாரையுமே இப்படி ஒண்ணா ட்ரீட் பண்ணலாமே .
தொழில்னு வந்துட்டா நீ பெரியவன் நான் பெரியவன் இல்ல எல்லாரும் ஒண்ணுதான்..எல்லாரும் ஒரே டீம் நம்ம படம் நல்லா வர உழைக்கனும் எல்லாரும்னு நினைச்சு உழைக்கலாமே?!!ப்ரோட்டியூசர்களுக்கு பணமும் மிச்சம் ஆகுமே.(அதுக்காக இந்த படத்துக்கு கம்மியான பணம் செலவு பண்ணிருக்காங்கனு நான் சொல்லல ஜார்ஜியாவுல போய் இப்படி ஒரு இடத்தை தேடி பிடிச்சு ஷூட்டிங் பண்ணவே சொத்து எல்லாம் போயிருக்கும்.அது விஷயம் இல்ல இங்க.)
அட்லீஸ்ட் இப்போ இந்த சினிமா இண்டஸ்ட்ரில இருக்குற இந்த தலைமுறையாவது,ஏன்னா புதுசா நிறையா ப்ரோட்டியூசர்கள் ,டைரக்டர்கள்,நடிகர் நடிகைகள் எல்லாம் வராங்க.அட்லீஸ்ட் இவங்களாவது இனி இந்தமாதிரி இருந்தா இதுமாதிரி ஒண்ணா வேலை செஞ்சா வேலை செய்ய முயற்சி பண்ணினா இந்த சினிமா இன்டஸ்ட்ரி இன்னும் நல்லா இருக்குமே இன்னும் பலபேர் நல்லா வாழுவாங்களே..
பல சங்கங்களை வச்சுருக்குற இந்த சினிமா இன்டஸ்ட்ரி இதை எல்லாம் யோசிப்பாங்களா?
இந்த வீடியோவுல 03:50 - 07:13 டைம் Duration -ல பாருங்க 'இரண்டாம் உலகம்' ஷூட்டிங் பத்தி சொல்லிருப்பாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக