டெங்கு காய்ச்சலை தடுக்கும் ஆயில் பந்து .இத எப்படி தயாரிக்குறதுன்னு ஒரு வார இதழ்ல படிச்சப்போ அதை எல்லாருக்கும் தெரியபடுத்தனும்னு தோணிச்சு எனக்கு .அத இப்போ எப்படி தயாரிக்குறதுன்னு பாப்போம் ..
---நன்றி வார இதழ்
இரு சக்கரம் இல்ல நான்கு சக்கர வாகனங்களுக்கு பயன்ப்படுதக்கூடிய 'கழிவு ஆயில்' (இது எல்லா மெக்கானிக் கடைலயும் கிடைக்குமாம்) ,எத்தன பந்து தயாரிக்கப்போறோம்ங்குறதை பொருத்து ரெண்டு லிட்டர் இல்ல அஞ்சு லிட்டர் கழிவு ஆயில் வாங்கிக்கணும்.
ஒரு கர்ச்சீப் அளவுக்கு வெள்ளை நிறக்காட்டன் துணி எடுத்து அதுல மரத்தூள் (எல்லா மரக்கடைலையும் கிடைக்குமாம்) கொட்டி ,கிரிக்கெட் பந்து அளவுக்கு உருண்டையா கட்டிக்கனுமாம்.அந்த உருண்டைகளை கழிவு ஆயிலில் ஒரு நாள் முழுவதும் ஊறவைக்கனுமாம்.
கைல உறையை மாட்டிகிட்டோ இல்ல கிடுக்கி பயன்படுத்தியோ இந்த உருண்டைகளை எடுத்து தண்ணீர் தேங்கி இருக்குற நீர்நிலைகளில மிதக்க விடனுமாம் ..
நல்ல ஐடியா ,தயவுசெஞ்சு நீங்க இருக்குற இடத்துல இப்படி தண்ணி தேங்கி இருந்தா இந்த வழியை ட்ரை பனி பாருங்க..
---நன்றி வார இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக