தினேஷ்குமார் ராதாகிருஷ்ணன்.மன்னார்குடியை சேர்ந்த 27 வயது இளைஞன்.
நம்முடைய கல்விமுறைல கண்டிப்பா ஒரு மாற்றம் தேவைன்னு சொல்ற எதிர்பாக்குற பலபேர்ல இவரும் ஒருத்தர்.ஆனா அதோட மட்டும் இல்லாம அதற்கான முயற்சிலயும் இறங்கிருக்கார் இவர் .
'Propel Steps'-ங்குற இவரோட வலைப்பூ(propelsteps.wordpress.com) ரொம்ப பிரபலம்.அதுல கல்விக்காக மட்டும் இல்லாம எல்லா விதமான தலைப்புகளின் கீழ் இவர் எழுதிக்கிட்டுவரார்.
அதுமட்டும் இல்லாம 'செய்' என்னும் பெயர்ல ஒரு வொர்க்ஷாப்(பயிலரங்கம்) நடத்துறாரு.ஸ்கூல்களுக்கு போய் அங்க இருக்குற மாணவ/மாணவிகளுக்கு தன்னம்பிக்கையை வளர்துக்குறதுக்கான வழிகளை, நம்பிக்கைகளை குடுக்குறதுனு இவரோட ஆர்வம் வித்யாசமாவே இருக்கு.
செய்' -ங்குற வொர்க்ஷாப்(பயிலரங்கம்)ல என்ன செய்வீங்கனு கேட்டப்போ ..
"எண்ணங்கள் தான் நம் செயல்களை தீர்மானிக்குது .அந்த செயல்கள் தான் சமுதாயத்தை உருவாக்குது.நம்ம சமுதாயம் மாறனும்னா நாம நம்ம எண்ணத்தை முதல்ல புரிஞ்சுக்கணும்.நம்மோட எண்ணத்தை மாத்துனா செயல்களும் மாறும் செயல்கள் மாறினா சமுதாயத்துல ஒரு மாற்றம் வரும்.ஒரு மனுஷன் ஏன் வாழுறான்?அவன் வாழ்றதுக்கான காரணம் என்ன?அதை எப்படி கண்டுபிடிக்கலாம்?கண்டுபிடிச்சா எப்படி நடைமுறை படுத்தலாம்.இடையில் வரும் சவால்களை எப்படி எதிர் கொள்ளலாம்"னு பலவகைல ஸ்டுடென்ட்ஸ் கிட்ட நாங்க பேசுவோம்னு சொல்றார் .
இதுமட்டும் இல்லாம தமிழ்லையும் ஆங்கிலத்துலையும் திறமைவாய்ந்த இவர் , பல கதைகள்,பாடல்கள்,கவிதைகள் எழுதுறார்.
இவரோட இந்த பணி தொடரணும்னு மேன்மேல இன்னும் பல ஸ்டுடென்ட்ஸ் இவரோட வொர்க்ஷாப் மூலமா பயன்பெறனும்னு வாழ்த்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக