பக்கங்கள் (Pages)

செவ்வாய், 17 டிசம்பர், 2013

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான எனது படைப்புகளில் ஒன்று...

தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான எனது படைப்புகளில் ஒன்று...
இது ரெண்டாவது தடவையா பப்ளிஷ் ஆகுது.சில வருஷத்துக்கு முன்னாடி நான் எழுதியது முதல் தடவையாக தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியானது .அப்பறம் எழுதல எதுவும் நான்.இப்போ மறுபடியும்எழுத ஆரம்பிச்சேன் .

இந்த ஆர்டிகல் நான் எழுதிபோட்டு ஒரு மாசத்துக்கும் மேல ஆகுதுன்னு நினைக்குறேன்.

இதை எழுதி போட்ட அடுத்த வாரத்துல இருந்து ஆர்வமா இந்த புக் வாங்கி நான் எழுதினது இருக்கானு பாப்பேன்.இல்லைனதும் கொஞ்சம் சோகமா சரின்னு போயிட்டேன்..

அடுத்த இதழை வாங்கினேன் அதே ஆர்வம். தேடினேன்.இல்ல.சோகமா போயிட்டேன்.

இந்த இதழ் போஸ்ட்ல வந்ததும் நான் ரெஜிஸ்டர் பண்ணலையே புக்குக்குனு யோசிச்சேன்..ஒரு வேல அப்பா பண்ணிருப்பாரோனு நினச்சு புக் பிரிக்கலாமானு யோசிச்சேன் ,எப்படியும் நாம எழுதினது வரபோரதில்ல ,அப்பறம் பாத்துப்போம்னு வச்சுட்டு போயிட்டேன்.ரொம்ப நேரம் கழிச்சு புக் ஓப்பன் பண்ணி படிச்சுகிட்டே வந்தேன் பாத்தா சர்ப்ரைஸ் நான் எழுதினது பப்ளிஷ் ஆகிருந்தது.அப்பா வந்தும் நீங்க ரெஜிஸ்டர் பண்ணினீங்களா   புக்குக்குனு  கேட்டா நானும் பண்ணலைன்னு சொன்னார்.

ஸோ ,அவங்களே புக் அனுப்பிவச்சுருக்காங்கனு அப்போ தான் தெரிஞ்சது.

ஒரு படைப்பாளிக்கு தன்னுடைய படைப்புக்கு கிடைக்குற பாராட்டுத்தான் அங்கீகாரம்.அதுதான் மேல மேல அவங்கள ஊக்கப்படுத்தும்.

படைப்பை வெளியிட்டதோட இல்லாம அதுக்கு 100 ரூபாய்(நம்மளோட படைப்புக்கு எவ்வளவு பரிசு கிடைக்குதுன்னு முக்கியம் இல்ல..எத்தன பேரை போய் சேருதுனுதான் முக்கியம்.இந்த 100 ரூபாய் என்னோட படைப்புக்கு கிடைச்ச பெரிய தொகை அளவுக்கு சந்தோஷத்தை கொடுத்துருக்கு எனக்கு).  பரிசும் குடுத்து புத்தகத்தையும் அனுப்பிவச்சுருக்காங்க.

நன்றி தமிழ் கம்ப்யூட்டர்.புக் அனுப்பிவச்சதுக்கும்  நன்றி.

2 கருத்துகள்: