பரம்பரை என்றால் என்ன?
வழி வழியாக என்று சொல்லலாம் என்றாலும்,
"தலைமுறை தலைமுறையாக"
என்பதே உண்மை பொருள் ஆகும்.
அப்படியென்றால், பரம்பரை என்பது முந்தைய தலைமுறையை குறிக்கும் சொல்லா? ஆம்!..
பரன் + பரை = பரம்பரை
நமக்கு அடுத்த தலைமுறைகள்:
நாம்
மகன் + மகள்
பெயரன் + பெயர்த்தி
கொள்ளுப்பெயரன் + கொள்ளுப்பெயர்த்தி
எள்ளுப்பெயரன் + எள்ளுப்பெயர்த்தி
நமக்கு முந்தைய தலைமுறைகள்:
நாம் - முதல் தலைமுறை
தந்தை + தாய் - இரண்டாம் தலைமுறை
பாட்டன் + பாட்டி - மூன்றாம் தலைமுறை
பூட்டன் + பூட்டி - நான்காம் தலைமுறை
ஓட்டன் + ஓட்டி - ஐந்தாம் தலைமுறை
சேயோன் + சேயோள் - ஆறாம் தலைமுறை
பரன் + பரை - ஏழாம் தலைமுறை.
ஒரு தலைமுறை - சராசரியாக 60 வருடங்கள் என்று கொண்டால்,
ஏழு தலைமுறை - 480 வருடங்கள்..
ஈரேழு தலைமுறை - 960 வருடங்கள்..(கிட்டத்தட்ட ஆயிரம் வருடங்கள்)
ஆக, பரம்பரை பரம்பரையாக என்று சொல்வதன் பொருள் ஈரேழு,
பதினான்கு தலைமுறையாக என்று பொருள் வரும்.
நன்றி FB
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக