பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 24 டிசம்பர், 2013

கீரோபோ ..

உலகிலேயே முதன்முதலாகப் பேசும் ரோபோவை ஜப்பான் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்துள்ளனர்.


விண்வெளிக்குப் பயணம் செய்யும் விஞ்ஞானிகளுக்குப் பேச்சுத்துணையாக இருக்கவே இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. 2,452 பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டு இறுதியில் இந்த ரோபோவுக்கு விஞ்ஞானிகள் வைத்த பெயர், ‘கீரோபோ’. கீரோபோ என்கிற வார்த்தை ஜப்பானிய மொழியில் கீபோ மற்றும் ரோபோ என்கிற வார்த்தைகளின் கூட்டு. கீபோ என்றால் நம்பிக்கை என்று அர்த்தம்.

34 செ.மீ. உயரம் மற்றும் 1 கிலோ எடையுள்ள இந்த ரோபோவால் மனிதனின் குரல் மற்றும் உணர்ச்சிகளைக் கண்டறிதல், புகைப்படம் எடுத்தல் மற்றும் ஜப்பானிய மொழியில் பேசுதல் போன்ற காரியங்களைச் செய்யமுடியும்.

இந்த ரோபோவுடன் உரையாடும் முயற்சியில் இறங்கிய விஞ்ஞானிகள் ரோபோவிடம் உன்னுடைய கனவு என்ன என்று கேட்டதற்கு, ‘மனிதர்களும் ரோபோக்களும் சேர்ந்து ஒற்றுமையாக வாழும் உலகத்தை உருவாக்குவதே தனது லட்சியம்’ என்று பதிலளித்து ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. மனிதர்கள் ஸ்மார்ட்போனை எப்படி பாக்கெட்டில் வைத்துச் செல்கிறார்களோ, அதே போல் சிறிய அளவிலான ரோபோவையும் வைத்துச் செல்லும்படி உருவாக்கும் முயற்சியில் தாம் ஈடுபட்டு இருப்பதாகவும் கூறுகிறார், இந்த ரோபோவை உருவாக்கிய விஞ்ஞானி டக்காஹாஷி.

கீரோபோ வருகின்ற ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி விண்ணிற்குச் சென்று, தனது முதல் உரையாடலை ஜப்பானிய விண்வெளி ஆராய்ச்சியாளர் வகாடாவுடன் தொடங்கவுள்ளது. 2014 டிசம்பர் வரை இது விண்வெளியில் இருக்கும்.

                                                                 --நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக