பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 1 ஜனவரி, 2014

விஜய் டிவியும் சிவகார்த்திகேயனும் - 9

பண்முகத் திறமை கொண்ட மனிதர் சிவகார்த்திகேயனோட  ஒரு நடன கச்சேரி/நிகழ்ச்சியின்  நிகழ்படம்  தான் இது.

 மைக்கேல் ஜாக்சன் அவர்களின் நிலா நடையையும் ,நம்ம விஜயகாந்த் அவர்களின் உடல் மொழியையும் சேத்து இவர் ஆடுற இந்த தொனி எல்லாராலையும் ரொம்ப பாராட்டப்பட்டது.,.. ரசிக்கப்பட்டது..

சகப்போட்டியாளர்கள் பொதுவா எப்படி  பேசுவாங்கனு கடைசியா எல்லாரையும், அவங்க எல்லாரும்போல பேசிக்காமிச்சது 'சிறப்புக் கூறு '..இந்த நிகழ்படத்தை பாருங்க.... சிரிங்க... 


2 கருத்துகள்:

  1. பல முறை எழுத வேண்டும் என்று நினைத்து யோசித்துக் கொண்டே சென்று இப்போது வேறு வழியே இல்லாமல் எழுதுகின்றேன். ஒருவேளை நீங்க சங்கடம் அடைந்தாலும்கூட. நீங்க எழுதுகின்ற தமிழ் வார்த்தைகள் ஒவ்வொன்றையும்கூகுள் தனது தேடுபொறியில் சேமித்துக் கொண்டே இருக்கின்றது. இயல்பான தமிழ் வார்த்தைகளைக் கொண்டு தற்போது எழுத்துப்பிழை திருத்தி என்ற மென்பொருளை தமிழிலில் ஒரு குழுவினர் கூகுள் நிறுவனத்துடன் சேர்ந்து உருவாக்கிக் கொண்டு வருகின்றார்கள். ஏன் இது போல எழுதுகின்றோம் என்று யோசிக்கலாமே? இலக்கியத்தமிழ் தேவையில்லை. இயல்பான தமிழிலில் எழுதலாமே?

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. புரியல...நான் பேச்சு தமிழ்லதானே எழுதுறேன்..சுத்தத்தமிழ்லையும் எனக்கு எழுத வரும்...நல்ல விஷயங்கள் அதிகமா போய் நிறையா பேரை சேரணும்னா , எல்லாருக்கும் ரொம்ப ஈஸியா புரியுறமாதிரி இருக்கணும்.அப்படித்தான் நான் இத எழுதுறேன்..எழுத்துப்பிழை திருத்தி மாதிரி எழுதினா எத்தன பேருக்கு புரியும் சொல்லுங்க?அந்த "மல்டி டேலன்ட்டட் பெர்சன்"-னுலாம் இங்கிலீஷை அப்படியே தமிழ்ல எழுதிருக்குறது பிடிக்கலையோ?இதை இயல்பான தமிழ்ல எழுதனும்னா "பன்முகத் திறமை கொண்ட "-னு எழுதனும் தானே..எத்தனை பேருக்கு அந்த வார்த்தை புரியும்னு நினைக்குறீங்க?நீங்க சொன்னத்துக்காக இதை மாத்தி எழுதிடுறேன்.நன்றி

      நீக்கு