இப்போ பஸ்லையோ , கார்லையோ பயணம் போகும்போது வாந்தி எடுக்கும் உணர்வு ஏற்படுது சிலபேருக்கு அது ஏனு தெரியுமா?
காரில, பஸ்ல பயணம் போகும்போது நாம நடக்குறதில்ல. உக்காந்து எதிரே சாலையைப் பாத்துட்டுருப்போம் . அப்போ கண்கள் எதிரே நகரும் உருவங்களை, மரங்கள், கட்டிடங்கள், வாகனங்கள்இதையெல்லாம் பாத்துக்கிட்டு வரும் . அதைப்பத்தி மூளைக்குத் தகவல் அனுப்பும் ... ஆனா நம்ம உடம்பு பெருசா அசையாது .அதனால உள்காதில் உள்ள வெஸ்டிப்யூலார் சிஸ்ட்டத்தில் அசைவு இருக்காது . ஸோ ,அதுகிட்ட இருந்து மூளைக்கு நியூஸ் போகாது. அதனால மூளை திணறுகிறது.ஸோ மூளை "என்னவோ கோளாறு போல!!!நமக்கு செய்தி கொண்டு வருகிற நியூரான்கள் எங்கேயோ தவறு செய்து . அவங்க தவறு செய்யக் காரணம், toxins-ஆகதானிருக்கும்"னு முடிவு செய்து. உடலில் ஏதாவது கெட்டது (toxins) இருந்து அதை வெளியேத்தனும்னு அது நினைச்சா முதல்ல வயிற்றைக் காலி செய்யும் வேலையில்தான் மூளை இறங்குமாம்.
உணவு பெரும்பாலும் இரைப்பையில் செரிமானம் செய்யப்பட்டுடும் . சிறுகுடலுக்குப் போகும்போது செரிமானம் ஆன உணவுல இருக்குற சத்துக்கள் உறிஞ்சப்பட்டு ரத்தக் குழாய்கள் மூலம் உடம்பின் பல பகுதிகளுக்கு அனுப்பப்படுது. அதனால இந்த toxins சிறுகுடலுக்குப் போயிட்டா,உடம்பு பூரா புகுந்திடும்னு , முதல்ல இரைப்பையிலிருந்து சிறுகுடலுக்கு உணவை அனுப்பும் பாதையில் உள்ள பைலோரிக் வால்வை இழுத்து மூடுமாம். பின் வாந்தி எடுக்கத் தோன்றும் உணர்வை ஏற்படுத்துமாம் . அந்த உணர்வுக்கு நாசியா என்று ஆங்கிலத்தில் பெயர்.
பயணத்தின் போது மட்டுமில்லாம , கண்ணுக்கும் உள்காதுக்கும் எப்போதெல்லாம் பொருத்தமின்மை ஏற்படுதோ, அப்போதெல்லாம் இந்த வாந்தி எடுப்பது போன்ற உணர்வு வரும்னு சொல்றாங்க.
நன்றி வார இதழ்
Why don't you tell which magazine name? Why secret?
பதிலளிநீக்குஅட நீங்க வேற சார்...புக் பேரை மறந்துடுவேன்..அதனாலதான் வார இதழ்,மாத இதழ்,நாளிதழ்னு பொதுவா சொல்லிடுறது ..தப்பா மாத்தி சொல்லிட்டா அதுக்கு யாராவது கமெண்ட் பண்ணி திட்டவா?
நீக்கு