பக்கங்கள் (Pages)

வெள்ளி, 17 ஜனவரி, 2014

ரோபோ மூலம் படிக்கலாம்

அமெரிக்காவுல உடல்நலம் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கி இருக்குற குழந்தைகள் ரோபோ மூலம் பள்ளிப் பாடங்களைப் படிக்குறாங்களாம் . V.GO. என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ, உடல்நலம் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குப் பதில் பள்ளிக்குச் போகுதாம் .
வகுப்பறையில நடத்தப்படும் பாடங்களை ரோபோ வீடியோ எடுத்து, இவங்க கம்ப்யூட்டருக்கு அனுப்பிடுமாம். இவங்க முகமும் ரோபோவின் முகத்திரையில் தெரிஞ்சுகிட்டே  இருக்குமாம். வகுப்புல இருக்குற நண்பர்களோட பேசுவது, வகுப்புல நடத்தும் பாடங்களைக் கவனிப்பது என சகலமும் இந்த ரோபோ மூலம் செய்யலாமாம். ஆசிரியர் பாடம் எடுக்கும்போது இவங்களுக்கு ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் கம்ப்யூட்டரிலஇருக்குற பட்டனை அழுத்தினா போதும். ரோபோவில் ஒரு விளக்கு எரியுமாம். இவங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தினை ஆசிரியர் ரோபோவின் முகப்பில் உள்ள கேமரா முன் விளக்குவாராம். அது இவங்களுக்கு வீடியோவாக ஒளிபரப்பாகுமாம்.



V.GO. ரோபோவை உருவாக்கிய நிறுவனம் ஏற்கெனவே நோயாளி மற்றும் டாக்டர் உரையாடும் வகையில் இயங்கி வந்த ரோபோவை சிறிய மாற்றத்துடன் கல்வி கற்கும் வகையில மாத்தி  வடிவமைத்துள்ளது. ஜீ.பி.எஸ். மற்றும் இன்டெர்நெட் வசதியுடன் இயக்கும் இந்த ரோபோவின் விலை மூன்றரை லட்சம் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

தற்போது V.GO. ரோபோவின் உதவி கொண்டு அமெரிக்காவுல உடல்நலம் பாதிக்கப்பட்ட சுமார் ஐம்பது மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பள்ளிப்பாடங்களைப் பசிச்சுகிட்டுவராங்களாம்.




நன்றி வார இதழ் 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக