பக்கங்கள் (Pages)

வெள்ளி, 31 ஜனவரி, 2014

பாஸ்வேர்ட்

பாஸ்வேர்ட்டை முறையை முதன் முதலா கண்டுபிடிச்சது எப்போன்னு தெரியுமா?
1960ல MIT பல்கலைக்கழக ஆய்வாளர்கள் உருவாக்கிய CTS -னு சொல்லப்படுற டைம் ஷேரிங் கணினியை பயன்படுத்துறவங்களை முறைப்படுத்த முதல் முதலா பாஸ்வேர்ட்டை முறையை பயன்படுதினாங்கனு சொல்றாங்க.

பாஸ்வேர்ட்ல எத்தனை வகை இருக்குனு தெரியுமா?

1. பயோமெட்ரிக் முறை.
கண் மற்றும் கைரேகையை அடையாளம் காணும் முறை .இந்த முறையோட சாதகம்(அட்வான்டேஜ்) என்னனு பாத்தா ,சீக்கிரத்துல திருடமுடியாது,செலவு கம்மி.

2.வடிவ ஒற்றுமை முறை 


இப்போ வந்துருக்குற ஆண்ட்ராயிட் ,ஆப்பிள் மற்றும் சில விண்டோஸ் இயங்குதள செல்போன்ல இந்த முறை பயன்படுது.அதாவது விண்டோஸ்ல 8 இயங்குதளத்துல ,ஒரு புகைப்படத்தோட ஒரு குறிப்பிட்ட பகுதியில வட்டம்,சதுரம் போன்ற குறியீடுகளை உருவாக்கி அத பாஸ்வேர்ட்டாக செட் பண்ணிக்குறது.ஆண்ட்ராயிட் ,ஆப்பிள் இயங்குதளத்துல நாம கோலம் போட புள்ளி வைப்போம் இல்ல அதுமாதிரி கொடுக்கப்பட்டுருக்குற புள்ளிகளை இணைச்சு அத பாஸ்வேர்ட்டாக செட் பண்ணிக்குறது.

3.முகத்தை அடையாளம் காணுதல் 
இது முகத்தை ஸ்கேன் செஞ்சு அடையாளம் காணும் முறை.அதாவது கணினியில இருக்குற வெப் கேமரா மூலமா நம்மள படம் எடுத்து அந்த படத்தை செக் பண்ணி கணினியை திறக்க அனுமதிக்குறது.

4.கடவுச் சொற்கள்.
இது சாதாரணமா நாம எல்லாருமே இப்போ பயன்படுத்திக்கிட்டு இருக்குற அத பாஸ்வேர்ட் முறை.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக