இனி இன்டர்நெட்டை ஒரு பல்ப் மூலம் பெறும் ‘லைபை’ வசதியை சீனாவின் ஷாங்காயில் இருக்குற ஃபுடான் பல்கலைக்கழக பேராசிரியர் சி (chi) என்பவர் கண்டுபிடிச்சுருக்காராம்.
ஒரு வாட் பல்பை வாங்கி எரிய விட்டாபோதும், அடுத்த நொடி இன்டர்நெட்டுக்கு பயன்படுத்தமுடியும் . லைட்டை நிறுத்திட்டா இன்டர்நெட்டுக்கான ‘லைபை’ போயிடும். ஒரு பல்பு எரியவிட்டா நான்கு கம்ப்யூட்டர் வரைக்கும் இன்டர்நெட்டை பயன்படுத்த முடியுமாம்.
விநாடிக்கு 150 மெகாபைட் வேகம் கொண்ட இந்த‘லைபை’ குறித்து இன்னும் ஆராய்ச்சிகள்நடந்துகிட்டு இருக்காம் .
LED வகை பல்பில் மைக்ரோசிப் பொருத்தப்பட்டிருக்குமாம்.அதன் மூலம் அலைக்கற்றைகள் எழுப்பப்பட்டு, இன்டர்நெட் வசதி ஏற்படுத்தப்படுது.
வழக்கமான ‘வைபை’ வசதி, ரேடியோ அலைகளை கொண்டு ஏற்படுத்தப்படுது. அதன் மூலம் இன்டர்நெட் இணைப்பு கிடைக்குது . ஆனால், இந்த ஒரு வாட் பல்பை வைத்து சீனா, இன்டர்நெட்டை பயன்படுத்த முடியும் என்று கண்டுபிடிச்சுருக்கு
சீனாவில் மட்டும் 60 கோடி பேர் ‘வைபை’யிலிருந்து ‘லைபை’க்கு மாறிடுவாங்கன்னு சொல்றாங்க.இதேபோல உலகநாடுகளும் சீக்கிரமே ‘வைபை’யிலிருந்து ‘லைபை’க்கு மாறிடுவாங்கன்னு சொல்றாங்க.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக