சில வடிகட்டின வாழைப்பழ சோம்பேறிங்களுக்கு இடத்த எந்திரிச்சு போய் ஃபேன் லைட் போடணும் இல்ல நிறுத்த கூட கஷ்டப்படுவாங்க.இப்படியாப்பட்ட ஆளுங்களுக்காகவே சைகை காட்டினாலே ஆஃப்/ஆன் ஆகுற தொழில்நுட்பத்தை உருவாக்கி இருக்காங்க வாஷிங்டன் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த கணினித் துறை விஞ்ஞானிகள். இதன் மூலம் ஸ்விட்ச்சை (SWITCH) தொடாமலேயே, சைகையின் மூலம் ஆஃப்/ஆன் பண்ணலாம் .
Wi-Fi router மற்றும் ஒயர்லெஸ் சாதனங்களின் உதவியுடன் இயங்குது இந்த WI-SEE தொழில்நுட்பம். ஒயர்லெஸ் சாதனங்களின் மூலம் கிடைக்கும் அலைகள் (SIGNAL) ஸ்மார்ட் ரிஸீவரின் மூலம் கண்டறியப்பட்டு, நம்ம கட்டளைகளுக்கு ஏற்ப செயல்படும் வகைல இந்தத் தொழில்நுட்பத்தை வடிவமைச்சுருக்காங்க.
மனிதர்களின் ஒன்பது விதமான உடல் அசைவுகளை மிக எளிமையாகப் புரிந்து / உணர்ந்துகொண்டு, அதற்கேற்றவாறு செயல்படுதாம் இந்த WI-SEE .
இந்த ஒன்பது விதமான அசைவுகளின் மூலம் கதவைத் திறக்கவோ, மியூசிக் சிஸ்டத்தில் ஓடும் பாடலை நிறுத்தவோ, தொலைக்காட்சிப் பெட்டியின் ஒலியைக் குறைக்கவோ, மின் அடுப்பை அணைக்கவோ அல்லது அது மாதுரியான பல செயல்களை எளிமையாக செய்யலாம் .
இதற்கான கடவுச்சோல்லும் (PASSWORD) சைகைகள்தான். நமக்குத் தேவைப்படும் நேரங்களில் மட்டும் இந்தத் தொழில்நுட்பத்தை LOG IN செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைப்படாத நேரங்களில் LOG OUT செய்து, வெளிவந்த பின்னர் வழக்கம் போல மின்சாதனப் பொருட்களைக் கட்டுப்படுத்தலாம்.
தற்போது மாதிரி வடிவத்தை (PROTOTYPE) உருவாக்கியுள்ள விஞ்ஞானிகள் குழு, வரும் செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள 19-ஆவது சர்வதேச மொபைல் கம்ப்யூட்டிங் மற்றும் நெட் வொர்க்கிங் மாநாட்டில் இதை அறிமுகப்படுத்தபோறாங்களாம்.
அருமையான கண்டுபிடிப்பு ஆனா கண்டிப்பா ,ஏற்கனவே நாம சோம்பேறியா மாறிகிட்டு இருக்கும் , இந்த கண்டுபிடிப்பால இன்னும் சோம்பேறி ஆகப்போறோம்னு நினைக்குறேன் .
இந்தத்தொழில்நுட்பத்தின் செயல்பாட்டை www.youtube.com/watch?v= VZ7Nz942yAY என்கிற வலைத்தள முகவரியில் பார்க்கலாம்.
-நன்றி வாரஇதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக