பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

வியாழன், 27 பிப்ரவரி, 2014

நம்ம உடம்ப பத்தி கொஞ்சம் தெரிஞ்சிப்போமா!!!


- நம்ம உடம்புல ரொம்ப பெரிய பகுதி எது தெரியுமா?நம்ம 'தோல்' தான்.ஒரு மனுஷனோட தோல் பரப்பளவு 20 சதுர அடி .

- மொத்த வியர்வை சுரப்பிகள் 20 லட்சம்.

- மொத்த உரோமக்கால்கள் 50 லட்சம்.

- நம்ம உடம்புல இருக்குற செல்லோட எண்ணிக்கை 50 ட்ரில்லியன் அதாவது 500 லட்சம் கோடி.

-ஒவ்வொரு ஒரு மணிநேரத்துக்கும் அழிந்து புதுப்பிக்க படும்  செல்களின் எண்ணிக்கை 6 லட்சம்.இதுமாதிரி சுழற்சி முறையில புதுப்பிக்கப்படுறதுனால ரெண்டு வருஷக்கு ஒருமுறை புதுசா உருவாகுதாம் உடல்.

- உடம்புல ரொம்ப சின்ன செல் ஆணோட உயிரணு.

- ரொம்ப பெரிய செல் பெண்ணோட கரு முட்டை.

- நம்ம உடம்புல ஓடுற ரத்தத்தோட சராசரி அளவு 5 லிட்டர்.

- ரத்த குழாய்களோட மொத்த நீளம் 148800 கிலோமீட்டர் .

- ரத்தத்தின் ஓர் சிகப்பு அணுவின் ஆயுட்காலம் 127 நாட்கள்.

- வெள்ளை அணுவின் ஆயுட்காலம் 120 நாட்கள்.

- நம்ம உடம்புல இருக்குற நீரோட மொத்த அளவு 42 லிட்டர்.

- சிறுகுடலின் நீளம் 6 மீட்டர்.

- இதயம் துடிப்பது ஒரு நாளைக்கு 103689 தடவை.

- பிறக்கும் குழந்தையோட உடம்புல இருக்குற எலும்புகள் 300 ,முழுமையா வளர்ச்சியடைந்த உடலின் மொத்த எலும்புகள் 206 .

- நம்ம உடம்புல இருக்குற தனிமங்கள் கார்பன் ,ஆக்சிஜன் ,ஹைட்ரஜன் ,நைட்ரஜன் ,கால்சியம் ,பாஸ்பரஸ் ,இரும்பு ,அதாவது , 3 அங்குல நீளமுள்ள ஆணி செய்ய தேவையான இரும்பும் ,900 பென்சில்கள் செய்ய தேவையான கார்பனும்,7 சோப்பு கட்டிகள் செய்ய தேவையான கொழுப்பும் ,2200 தீக்குச்சிகள் செய்ய தேவையான பாஸ்பரசும் மனுஷனோட உடம்புல இருக்காம்.

- நாமசிரிக்கும் போது 17 தசைகள் வேலைசெய்யுதாம்.

- கோபப்படும்போது 43 தசைகள் வேலைசெய்யுதாம் .

- தலையில சராசரியா ஒரு லட்சம் முடிகள் இருக்கு.

- கண்ணிமைகள் ஒரு நாளைக்கு 20000 முறை இமைக்குது.

- நாம சாப்பிட்ட உணவு செரிமானம் ஆக 12 மணிநேரம் ஆகும்

- உடல்ல 230 மூட்டு இணைப்புகள் இருக்கு.

- தும்மும் போது நமது மூக்கில் இருந்து வெளியேருற காத்தோட வேகம் 180 கிலோ மீட்டர்.

- உடம்புல இருக்குற வலுவான தசை தாடைல இருக்குற 'மாசெட்டர் தசை '.

- வளர்ந்த ஒருத்தரோட நுரையீரல்ல 30கோடி காற்றுப் பைகள் இருக்கு.

- உடம்புல 70% தண்ணி இருக்கு.

- நம்ம உடம்புல ஓடுற நரம்புகள் எல்லாத்தையும் இணைத்தால் 10000 கிலோமீட்டர் தூரம் இருக்குமாம்.

- மூக்கும் காதும் வாழ்நாள் முழுக்க வளருமாம்..

இவ்வளவு ஆச்சர்யங்கள் இருக்குற நம்ம உடம்ப நல்ல ஆரோக்யமான சாப்பாடு சாப்பிட்டு ஆரோக்கியமா பாத்துக்கலாமே.

செவ்வாய், 25 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - வெரசா போகையில - ஜில்லா

படம் : ஜில்லா
பாடல் : வெரசா போகையில
பாடியவர்கள் :  D .இமான்
பாடலாசிரியர் : பார்வதி 
இசை: D .இமான்

வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

கும்ப…கும்ப…கும்ப…கும்ப…கும்
கும்ப…கும்ப…கும்ப…கும்ப
கும்…கும்..கும்…

கும்ப…கும்ப…கும்ப…கும்ப…கும்
கும்ப…கும்ப…கும்ப…கும்ப
கும்…கும்..கும்…

கும்…கும்..கும்.
இது நானா என்ன
கும்…கும்..கும்…
பழசெல்லாம் எங்க
கும்…கும்..கும்…
புது சந்தேகங்கள் உண்டாகுது
கும்…கும்..கும்…
இது திண்டாட்டமா
கும்…கும்..கும்…
இல்ல துள்ளாட்டமா
கும்…கும்..கும்…
மண்ண விட்டு ரெண்டு கால் தாவுது

எப்போதும் நான் போகும் பாதை இது
இப்போது நிற்காமல் ஏன் நீளுது
என்னுள்ளம் லேசாக கைமீறுது

வெரசா போகையில
புதுசா போறவளே

பப்பா…பப்பா…பா…பா…
பப்பா…பப்பா…பா…பா…

கும்…கும்..கும்…
நல்லா கச்சிதமா
கும்…கும்..கும்…
என்ன பிச்சி சும்மா
தைச்சி சேர்க்குறது உன் வேலையா…
கும்…கும்..கும்…
சுற்று வட்டாரத்தில்
கும்…கும்..கும்…
தந்த பட்டமெல்லாம்
இப்ப நூல் அறுந்த காத்தாடியா

நேத்தோட நீ வேற நான் வேறையா
இப்போது நீ என் நெஞ்சின்மேல் கூரையா
என்னுள்ளே நீ பாதி நான் மீதியா

வெரசா போகையில
புதுசா போறவளே
இதுவரையில குளிர் எடுக்கல
பெண்ணாலே
அவ சிரிச்சததும் தல உரையுது
தன்னால
என் பேச்சு மூச்சு எங்கே காணல…

ஞாயிறு, 23 பிப்ரவரி, 2014

படத்த பத்தி - இது கதிர்வேலன் காதல்

இது கதிர்வேலன் காதல் -  இது ஒரு ரொமாண்டிக் காமெடி திரைப்படம்.

இந்த படத்தை  பத்தி மேலும் படிக்க கீழ குறிப்பிட்டுருக்குற  லிங்க்கிற்கு போங்க

http://srivalaipakkam.blogspot.in/p/4.html

மனசுவிட்டு பேசுங்க...

மனஅழுத்தம் தான் தற்கொலைக்கு காரணம்..யார்கிட்டயும் சொல்லமுடியாத கஷ்டங்கள் , வேதனைகள் , மனச விட்டு பேச ஆள் இல்லாம தனிமைல இருக்குறது இதுலாம் தற்கொலை எண்ணத்தை அதிகம் தூண்டக்கூடியது ..

இந்த மாதிரி மனநிலமைல இருக்குறவங்களுக்கு அவங்களோட கஷ்டத்தை காது குடுத்து கேக்கவே இருக்கு ஒரு தொண்டு நிறுவனம்.அதன் பெயர் சிநேகா தொண்டு நிறுவனம்.இந்த நிறுவனத்தோட போன் நம்பர் குடுத்துருக்காங்க அந்த நம்பருக்கு போன் செஞ்சு உங்க மனசுல இருக்குற கஷ்டத்தை சொல்லலாம்.வெளிப்படையாக மனம் விட்டு பேசலாம் பேசலாம்.இது முற்றிலும் இலவச சேவை தான்.

நீங்க யார் என்னனு கூட சொல்லவேணாம்.உங்க கஷ்டத்தை பகிர்ந்துகிட்டா போதும்னு சொல்றாங்க.நீங்க சொன்னது எந்தகாரணத்தக்கொண்டும் வேற யாருக்கும் தெரியாது உங்க விஷயம் பாதுகாக்கப்படும்னு சொல்றாங்க.

மனசுவிட்டு பேசுங்க..

உங்களால பேசமுடியலை சொல்ல முடியலைனா எழுதுங்க..எல்லாத்தையும் எழுதி அப்பறம் கிழிச்சு போட்டுடுங்க..இதுவும் ஒருவகைல ரிலாக்ஸ் பண்றதுக்குத்தான்.

சிநேகா தொண்டு நிறுவனம்-    044 - 24640050 .

                     -                                                          -நன்றி நாளிதழ் 

சனி, 22 பிப்ரவரி, 2014

தூக்கம் ஏன் வருது?


நமக்கு தூக்கம் ஏன் வருது, எப்படி வருதுனுதெரியுமா? நம்ம மூளையில ஹைப்போதலாமஸ்னு ஓர் இடம் இருக்கு அதன் முன் புறத்தில் VLPO ( Ventrolateral Preoptic Nucleus)னு ஒரு ஏரியா இந்த VLPO-வை சில நரம்புகளின் செயல்களும் ஹார்மோன்களின் விளைவுகளும் இயக்குது . தூக்கம் வர்ற நேரத்தில இந்த VLPO ˆ கபா (GAPA) னு ஒரு ஹார்மோனை சுரக்குது . இந்தக் கபாவோட வேலையே நம்மைத் தூங்க வைக்கிறதுதானாம் .

நம்ம உடல்ல ‘பாடி கிளாக்’னு ஒரு கடிகாரம் இருக்கு இரவு வந்த உடனே, நம்ப புலன்களுக்கு (பார்வை, ஒலி, சுவை போன்றவைகளுக்கு) அது ஷட்டர் போட ஆரம்பிச்சிரும். இது எதையுமே உணர முடியாத நிலையில் VLPO சுறுசுறுப்பாகி கபாவை சுரந்திடுமாம். அது சுரந்தால் தூக்கம் வருமாம் .

அதே மாதிரி நமக்கு பிடிக்காத சமயத்துல ஸ்கூல் இல்ல காலேஜ்ல பிடிக்காத சப்ஜெக்ட் எடுக்கும் போது உங்கள் புலன்களை ஷட்டவுன் பண்றீங்க. உடனே VLPO ˆ அதை ‘தப்பா’ புரிஞ்சிக்கிட்டு கபாவை சுரக்குது... தூக்கம் வருது.

                                                ----நன்றி வார இதழ் 

வெள்ளி, 21 பிப்ரவரி, 2014

2011 உலகக்கோப்பை கிரிக்கெட்


2011 உலகக்கோப்பை கிரிக்கெட் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையேயான  கடைசி போட்டி.

நான் ,அண்ணா, அம்மா ஆர்வமா பாக்க உக்காந்தோம்..இந்தியா பேட்டிங் பண்ணினப்போ ஆரம்பத்துல பொறுமையை சோதிக்குற அளவுக்கு இருந்தது , எப்போ சச்சின் அவுட் ஆனாரோ என் அண்ணனுக்கு நம்பிக்கை போய்டுச்சு..அட போங்கையா ... இனி இந்தியா ஜெயிக்காதுன்னு முடிவு பண்ணி தூங்க ஆரம்பிச்சுட்டாங்க..

ஆனாலும் நான் விடாம பாத்துக்கிட்டு இருந்தேன் .என்னால வேற வழியே இல்லாம என் அம்மாவும்  பாத்தாங்க ..

அடுத்து களத்துல இறங்கின வீராட் கோலி நல்லா விளையாடிகிட்டு இருந்தார்..என் அண்ணன் தூக்கத்துல இருந்து கண்ணு முழிச்சு பாத்தப்போ ஒரு அவுட் ... ச்ச்ச்...போங்கையானு சொல்லி மறுபடியும் தூங்க ஆரம்பிச்சாங்க..

அடுத்தது யார் விளையாடினதுனு  எனக்கு நியாபகம் இல்ல ஆனா என் அண்ணன் தூக்கத்துல இருந்து கண்ணு முழிச்சு பாத்தப்போ எல்லாம் ஒரு அவுட் ...

இப்போ,எனக்கு டென்ஷன்..என் அம்மாவுக்கும்....இவ்ளோ நேரம் இந்தியா ஜெயிக்கணும்னு மட்டும் வேண்டிகிட்டு இருந்த நான் இப்போ மேட்ச் முடிஞ்சதுக்கு அப்பறம் அண்ணன் எழுந்திரிக்கனும் அதுவரைக்கும் தூங்கனும்-னும் சேத்து  வேண்டிக்க ஆரம்பிச்சேன்...

நெனச்சது போலவே அண்ணன் நல்லா தூங்கிட்டாங்க ..இந்தியா 270 ரன் எடுத்து இருந்தது 4 விக்கெட் இழப்புக்கு.12 பந்துல 5 ரன் எடுத்தா உலகக்கோப்பை நமக்கு  .கூல் கேப்டன் 12 பால் இருக்கு கண்டிப்பா ஜெய்ச்சிடுவோம்னு நம்பிக்கை கொடுக்குறாரு.அடுத்த பந்து ஒரு ரன் எடுத்துருக்கோம்.11 பால் 4 ரன் எடுக்கணும் ..அதுலாம் எடுத்துடுவோம் , நீ வா தல நீ அடி தலனு மனதுக்குள்ள சொல்லிக்கிட்டு இருந்தேன்..இருந்தாலும் என் அண்னனை நா எழுப்பல .எங்க தோனியும் அவுட் ஆகிடுவாரோனு பயத்துல.அடுத்த பால் அடுச்சாறு பாரு சிக்ஸர் ...வாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ..யேயேயேயேயேயேயேயேயே...நாம ஜெயிச்சுட்டோம்... 28 வருஷத்துக்கு அப்புறம் உலக கோப்பை நம்மகைல.எனக்கு தெரியும், கிரிக்கெட் பத்தி அதிகமா எதுவும் தெரியாத எனக்கே இப்படி இருந்தா ,கிரிக்கெட் வெறியரா இருக்குற  லச்சக்கணக்கானவங்க என்ன மாதிரி என்ன விட பலமடங்கு அதிகமா சந்தோஷமா எஸ்க்ஸைட்மென்ட்-ஆ இருப்பாங்கனு..சச்சின் அவுட் ஆகிட்டாரு அவ்ளோதான் நாம தோக்கப்போறோம்னு நினைச்சுட்டு இருந்த சமயத்துல அந்த மனுஷன் தோனி உசுரைக்கொடுத்து விளையாடினத பாத்தேன்.அவர் மேல இன்னும் அதிக மதிப்பு வந்தது..தோனி தோனி தோனி-னு நானும் மனசுல காத்திக்கிட்டே இருந்தேன்.

அப்போ அடிச்ச கைதட்டுல அலறியடிச்சுகிட்டு எந்திரிச்ச அண்ணன் முகத்துல ஏகப்பட்ட சந்தோஷம்..

உடனே ஃப்ரண்ட்ஸ் எல்லாருக்கும் போன் கால் செஞ்சு சந்தோஷத்தை பகிர்ந்துகிட்டாரு...என் அத்தை மாமாவுக்கும் போன் கால் செஞ்சு செம்ம்ம்ம்ம மேட்ச் ..ஜெயிச்சோம்  இல்ல ..சூப்பர் சூப்பர்னு ஏக வசனங்கள் ...நானும் என் அம்மாவும் ஒருத்தருக்கொருத்தர் பாத்துகிட்டோம் , கண்ணு முழிச்சு பாத்தது நாம  , என்னவோ மேட்ச் முழுசா பாத்தமாதிரி இப்படி பேசுறாரேன்னு.

அதுக்கு அப்பறம் நான்  அண்ணன் கிட்ட இருந்து போன் பறிச்சு நடந்ததை சொல்லி கிண்டல் பண்ணவே என் அண்ணன் சிரிச்சு மழுப்பின அந்த நாள் இன்னைக்கும் என்னால மறக்க முடியாத நாள்..எல்லாருக்குமே மறக்க முடியாத மேட்ச்சா இருந்த இந்த 2011 உலகக்கோப்பை கிரிக்கெட் எனக்கும்  மறக்க முடியாத மேட்ச் ஆச்சு இன்னோர் வகைலையும் ...

வியாழன், 20 பிப்ரவரி, 2014

Tools மெனுவில் இருக்கும் 'Folder Options' -ஐ மறைக்க

Tools மெனுவில் 'Folder Options'  இல்லைனா எப்படி கொண்டுவருவதுன்னு பாப்போம் ..

1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.

2. இப்போ ரெஜிஸ்டரில HKEY_CURRENT_USER \Software\Microsoft\Windows\CurrentVersion\Policies\Explorer போங்க

3. இப்போ வலது பக்க பேனல்ல "NoFolder Options" -னு ஒரு Dword இருக்கும் அதுக்கு மதிப்பு 0 கொடுங்க.

4. கம்ப்யூட்டரை Restart செய்யுங்க.


Tools மெனுவில் இருக்குற  'Folder Options'  -னை மறைக்கனும்னா அந்த  "NoFolder Options" -னு ஒரு Dword இருக்கும் அதுக்கு மதிப்பு 1 -னு கொடுங்க.

கம்ப்யூட்டரை Restart செய்யுங்க.


புதன், 19 பிப்ரவரி, 2014

ஆம்ஸ்ட்ராங் எண்

ஆம்ஸ்ட்ராங் எண்  அப்டீனா என்னனு தெரியுமா?

மூன்று இலக்க எண் மட்டுமே ஆம்ஸ்ட்ராங் எண் என்று சொல்லப்படுகிறது.

அதாவது ,மூன்று இலக்க எண்ணில் உள்ள ஒவ்வொரு இலக்கத்தையும் தனி தனியாக பிரிச்சு அந்த இலக்கத்தை மூணு முறை பெருக்கினால் அந்த எண்ணே வரும் ..

100லிருந்து 999வரை மூன்று ஆம்ஸ்ட்ராங் எண் மட்டும்தான் இருக்குனு உங்களுக்கு தெரியுமா?

இப்போ பாருங்க ...

153
370
371
இந்த மூணு எண் தான் அது...இதை சரி பார்ப்போமா?

153 = (1)3+(5)3+(3)3
      = 1 + 125 + 27
       =153

370 = (3)3+(7)3+(0)3
      =  27    + 343  + 0
      =370

371 = (3)3+(7)3+(1)3
      =  27 + 343 + 1
      = 371


செவ்வாய், 18 பிப்ரவரி, 2014

டெஸ்க்டாப் ஐகான்களை மறைக்க

'நேம்ஸ்பேஸ் ' ஐகான்கள் அப்படினா எது எதுன்னு தெரியுமா உங்களுக்கு ?My Computer,Recycle Bin,My Documents,Internet Explorer இது மாதிரியான ஐகான்கள் தான் நேம்ஸ்பேஸ் ஐகான்கள் ..

இந்த ஐகான்கள் தவிர டெஸ்க்டாப்ல இருக்குற மத்த ஐகான்களை மறைக்க வழி இருக்கு

1. Start கிளிக் பண்ணுங்க Run ஆப்ஷன்ல Regedit -னு டைப் பண்ணுங்க OK குடுங்க..

2. இப்போ வரும் விண்டோல HKeyCurrentUser -> Software -> Microsoft -> Windows - > CurrentVersion -> Explorer -> Hide Desktop Icons -> New Start Panel -க்கு போயிட்டு வலதுபக்கம் ரைட் கிளிக் செஞ்சு New குடுத்து [0000 0000-0000-0000-0000-0000000000 00] -நு ஒரு புதிய Reg -Word உருவாக்குங்க..


3. இப்போ { 00000000-00 00-00 00-0000-00000000 0000} என்பதை டபுள் கிளிக் பண்ணுங்க இதோட மதிப்ப இப்போ 1-னு குடுங்க ..விண்டோவை க்ளோஸ் பண்ணி F5 கீயை அழுத்துங்க...டெஸ்க்டாபை refresh பண்ணுங்க..

4. இப்போ மறைக்கப்பட்ட ஐகான்கள் மறுபடியும் தெரியணும்னா { 00000000-00 00-00 00-0000-00000000 0000} என்பதை டபுள் கிளிக் பண்ணுங்க இதோட மதிப்ப இப்போ 0-னு குடுங்க ..விண்டோவை க்ளோஸ் பண்ணி F5 கீயை அழுத்துங்க...டெஸ்க்டாபை refresh பண்ணுங்க..


இதைபோல டெஸ்க்டாப்ல இருக்குற ஐகான்களை மறைக்க இன்னோர் எளிமையான வழி...

1. டெஸ்க்டாப்ல ரைட் கிளிக் பண்ணுங்க.

2. 'Arrange Icons '-ல் வரும் 'Show Desktop Icon' என்பதில் இருக்கும் டிக் மார்க்கை எடுத்துவிடுங்க .இப்போ டெஸ்க்டாப்ல இருக்குற ஐகான்கள் மறைக்கப்பட்டுருக்கும் .திரும்ப ஐகான்கள் தெரியணும்னா  'Show Desktop Icon' என்பதை செலக்ட் பண்ணுங்க..அவ்வளவுதான்...

திங்கள், 17 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - கண்டாங்கி கண்டாங்கி - ஜில்லா

படம் : ஜில்லா 
பாடல் : கண்டாங்கி கண்டாங்கி
பாடியவர்கள் :  விஜய்,ஸ்ரேயா கோஷல் 
பாடலாசிரியர் : வைரமுத்து 
இசை:  D .இமான்

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
அந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் தாரேன்டி
அந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தாரேன்டி
முத்தம் தரீயா ஒஹோ

கண்டாங்கி கண்டாங்கி கட்டி வந்த பொண்ணு
கண்டாலே கிறுகேத்தும் கஞ்சா வச்ச கண்ணு
இந்த கண்ணுக்கு அஞ்சு லட்சம் போதாது
இந்த நெஞ்சுக்கு சொத்தெழுதி தீராது
தள்ளி நில்லையா

ஞாயிறு, 16 பிப்ரவரி, 2014

வாள் சண்டை பயிற்சி


வாள் சண்டையில் 1,200-க்கும் மேற்பட்ட வீரர்களை உருவாக்கிய ஆசிரியர் அமிர்தராஜ்  சார்  கிட்ட வாள் சண்டை பயிற்சி பெறனுமா

நம்பர் : 90474 23023, 94433 82197

சனி, 15 பிப்ரவரி, 2014

'ரீசைக்கிள் பின்' னின் பேரை மாத்துறது எப்படி

'ரீசைக்கிள் பின்' னின் பேரை மாத்த முடியும் எப்படின்னு பாப்போமா?
1. Start - Run -டயலாக் பாக்ஸில் Regedit -னு டைப் செய்யுங்க.

2.இப்போ HKEY_CLASSES_ROOT \ CLS ID \{645FF040-5081-101B -9F08-00AA002FE }\Shell Folder கிளிக் பண்ணுங்க.

3. இப்போ வலது பக்கத்துல "Attributes" -க்கு பக்கத்துல இருக்குற "40 01 00 20"என்ற டேட்டா மதிப்பை "50 01 00 20"-னு மாத்துங்க.

4.இப்போ Default -ஐ டபுள் கிளிக் பண்ணி 'Value Data ' இருக்குற இடத்துல அதுக்கான value 0 னு கொடுங்க. 'OK' கொடுங்க.

5.இப்போ டெஸ்க்டாப்ல ரீசைக்கிள் பின்னை டபுள் கிளிக் பண்ணினா rename -ங்குற option பாக்கலாம்.இது மூலமா உங்களுக்கு தேவையான பேரை மாத்திக்குளாம்.

default -ஆக எப்படி இருந்ததுன்னு பாது வச்சுக்கோங்க.ஒரு வேளை உங்களுக்கு பழையபடியே இருக்கணும்னு நினச்சா முன்னாடி இருந்தபடியே மாத்த வசதியா இருக்கும் .

வெள்ளி, 14 பிப்ரவரி, 2014

எங்க பாத்தாலும் ஆங்கிலம் எதுல பாத்தாலும் ஆங்கிலம்னு பொலம்புறவங்களுக்கு

எங்க பாத்தாலும், எப்ப பாத்தாலும் மொழி பற்று, மொழி பற்றுன்னு சொல்றாங்க..சொல்றோம்..தாய் மொழியில பேசாம ஆங்கிலத்துலையே பேசுறோம்னு சொல்றோம்.... குறைப்பட்டுக்குறோம் .


சீன மக்கள் அவங்க தாய்மொழியான சைனீஸ் மொழி பேசுறாங்க..ஜப்பான் மக்கள் அவங்க தாய் மொழியான ஜாப்பனீஸ் மொழி பேசுறாங்க..அமெரிக்காகாரங்க அவங்க தாய் மொழியான ஆங்கிலத்தை பேசுறாங்க..நம்ம தாய் மொழி ஹிந்தி அப்போ இந்தியாவுல இருக்குற நாம எல்லாருமே ஹிந்தி தானே பேசணும்?நமக்குல்லையே தான் ஏகப்பட்ட மாநிலம் இருக்கே..ஒரு ஒரு மாநிலத்துக்கும் ஒரு ஒரு மொழி பேசுறோம்..அப்போ ஒரே நாட்டுக்குள்ள ஒருத்தன்  எத்தன மொழியைத்தான் கத்துக்குறது?அப்போ ஹிந்தியை கட்டாய மொழியாக்கி எல்லாரும் ஹிந்தி பேசணும்..அதுவும் செய்யமாட்டோம்..அப்ப நம்ம நாட்டுக்குள்லயே பரஸ்பரம் எண்ணத்தை பகிர்ந்துக்க நமக்கு ஆங்கிலம் தேவை படுத்து..நமக்கு அதிகமான வேலை வெளிநாட்டுல இருந்து வருதுங்குறதால ஆங்கில அறிவு கட்டாயம் ஆகவேண்டியிருக்கு..

நம்ம நாட்டுக்குள்லையே வேலை செய்யணும்னாலும் நமக்கு பொது மொழி தேவைப்படுது  ஹிந்தியை கத்துக்க மாட்டேங்குறோம் அப்போ அங்கிலத்தை தானே கத்துக்கணும்..அதனால அதிகமா பேசுறது ஆங்கிலமா இருக்கு..என்ன பண்றது..

தாய் மொழி தெரிஞ்சவங்க தாய் மொழி தெரிஞ்சவங்ககிட்ட அதே மொழியிலையே பேசலாம்..தப்பில்ல...அதுக்கு வெக்கப் படாதீங்க..அசிங்கப் படாதீங்கனு சொல்லுங்க..அத விட்டுட்டு அங்கிலத்துலையே பேசக்கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துலையும் நியாயம் இல்ல..

அடிப்படை கல்வியில மாற்றம் வேணும்...குறைஞ்சபட்சம் ஐந்தாவது வரைக்குமாவது ஹிந்தி முதல் கட்டாய மொழியாக ,அந்த மாநிலத்தின் மொழி இரண்டாவது கட்டாய மொழியாக இருக்கணும் ,அடுத்து ஆங்கில மொழி இருக்கணும்..இப்படி செஞ்சாதான் ஓரளவுக்காவது தீர்வு கிடைக்கும்..


புதன், 12 பிப்ரவரி, 2014

ஆஆஆஆ..கரப்பான் பூச்சி....


ஆஆஆஆ..கரப்பான் பூச்சி.... இப்படி கரப்பான் பூச்சியை பாத்து நிறையா பேர் பயப்படுவாங்க..அத பாத்தாலே என்னவோ அனகோன்டாவை பாத்த மாதிரி அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவாங்க...அப்படியாபட்டவங்களுக்கு இந்த போஸ்ட் ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்கும்னு நினைக்குறேன்...

வீட்ல கரப்பான் பூச்சி வராம தடுக்க சில வழிகளை படிச்சேன்..அதை உங்ககூட பகிர்ந்துக்கிறேன்..

-> பொதுவா பாத்திரம் கழுவுற இடத்துல தான் கரப்பான் பூச்சிகள் உருவாகுற முதல் இடமா இருக்கும்.தண்ணிகூட அமோனியாவ கலந்து பாத்திரம் கழுவுற இடத்த சுத்தம் பண்ணினா கரப்பான் பூச்சிகள் உருவாகுறத தடுக்கலாம்.

->அமொனியாவுக்கு பதில் சோப்பு தண்ணீர தெளிக்குறதால கூட கரப்பான் பூச்சிகள் வராம தடுக்கலாம்.

->வெள்ளரிக்காயோட தோலை ஒரு அலுமினியப் பாத்திரத்துல போட்டுவச்சா அதுல இருந்து வர வாசனை கரப்பான் பூச்சி வருவதை தடுக்குமாம்..

->மூணு தேக்கரண்டி பேக்கிங் சோடா மூணு தேக்கரண்டி சக்கரை கலந்து கரப்பான் பூச்சிகள் வரும் இடத்துல தூவினா சக்கரை சாப்பிட வரும் கள் அதுல கலந்துருக்குற பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சிகள் சாப்பிட்டு இறந்திடுமாம்.

->சமையலுக்கு பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செஞ்சு கரப்பான் பூச்சிகள் வரும் இடத்துல தூவினா பிரியாணி இலையோட வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராதாம்.அப்படியே வந்தாலும் அந்த பொடியை சாப்பிட்டு இறந்திடுமாம்.

                                                      ---நன்றி நாளிதழ்..

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பிட் காயின்

மொபைல் வாலட் எனப்படும் செல் பேசி வழியா பணத்தை பரிமாறிக்கொள்ளும் வசதி இப்போ நடைமுறைல வந்துக்கிட்டு இருக்கு.இதுக்கு பிட் காயின் அப்படீங்குறது ஒரு எண்ம நாணயம்(Digital Currency). Cryptography -னு சொல்லப்படுற ரகசிய குறியியல் முறையை பயன்படுத்தி Peer to Peer (சரியினை வலைப்பின்னல்) மூலமா இந்த நாணயத்துக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டுருக்கு.இதை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 'சடோஷி நகமோட்டா'.

இந்த முறையோட Advantage என்ன தெரியுமா?

1.ரொம்ப பாதுகாப்பானது.

2. ஆன்லைன் திருட்டுக்களை கட்டுப்படுத்தமுடியும்.

3. இந்த முறையில் பெறப்படும் பிட் காயினை ஒருத்தர் ஒருதடவைதான் பயன்படுத்த முடியும்..

திங்கள், 10 பிப்ரவரி, 2014

பாடலின் வரிகள் - பிறை தேடும் - மயக்கம் என்ன

படம் :மயக்கம் என்ன 
பாடல் : பிறை தேடும் 
பாடியவர் : G .V பிரகாஷ்  ,சைந்தவி  
இசை : G .V பிரகாஷ் 
பாடலாசிரியர் : தனுஷ் 
பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
பிறை தேடும் இரவிலே உயிரே
எனை தேடி வருகிறாய்
கதை சொல்ல அழைக்கிறேன் உயிரே
அன்பே நீ வா
இருளில் கண்ணீரும் எதற்க்கு
மடியில் கண் மூடவா
அழகே இந்த சோகம் எதற்க்கு
நான் உன் தாயும் அல்லவா
உனக்கென மட்டும் வாழும் இதயமடி
உயிருள்ளவரை நான் உன் அடிமையடி

சனி, 8 பிப்ரவரி, 2014

வேலைவாய்ப்பு தகவல் இணையதளங்கள்


வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்ய...

http://tnvelaivaaippu.gov.in/

வேலைவாய்ப்புச் செய்திகளுக்கு...

www.employmentnews.gov.in/

அரசு நிறுவனங்களில் தொழிற்பயிற்சி பெற...

www.boat-srp.com/boat/

வெள்ளி, 7 பிப்ரவரி, 2014

ஜிமெயிலின் வசதிகள்


ஜிமெயிலின் புதிய வசதிகள் என்ன என்ன தெரியுமா?

ஜிமெயில் ஸ்டார்.

ஜிமெயில்ல இன்பாக்ஸ்ல செய்திக்கு முன்னாடி வலதுபக்கதுல (செய்திக்கு வலதுபக்கதுல) ஒரு ஸ்டார் குறியீடு இருக்கும்.நமக்கு ரொம்ப முக்கியமான மின்னஞ்சல்னா அதை ஸ்டார் பண்ணி வச்சுக்கலாம்..நாம ஏதாவது முக்கியமான மின்னஞ்சலை தேடும் போது இந்த ஸ்டார் குறியீடு இருக்குறதை மட்டும் தேடலாம்.எப்படினா has:yellow-star னு search -ல கொடுத்து தேடினோம்னா மஞ்சள் வண்ண star குறியீட்டுல இருக்குற மெயில் மட்டும் காட்டப்படும்..இந்த ஸ்டார் குறியீட்டோட கலரை மாத்திக்கலாம்.Settings போயிட்டு அதுக்கான General Tab போயிட்டு Stars பிரிவுல நீங்க உங்களுக்கு பிடிச்ச வண்ணத்தை மாத்திக்கலாம்.

மெயில் Tab

இப்போ கூகிள் 5 விதமான Tab வசதியை குடுத்துருக்கு.நமக்கு வேணும்ங்குற அளவுக்கு Tab set பண்ணிக்கிட்டு நம்முடைய மின்னஞ்சலை அதுக்கு தகுந்தமாதிரி வகைபடுத்தி பிரிச்சு அந்த அந்த Tab-களில் செட் பண்ணிக்கலாம்.

இத செய்ய...

மின்னஞ்சலை செலக்ட் பண்ணிக்கோங்க.மேல இருக்குற More option-ஐ கிளிக் பண்ணுங்க இப்போ வரும் பட்டியல்ல அந்த மின்னஞ்சல் எந்த பட்டியலுக்கு போகணுமோ/மாறனுமோ அதை செலக்ட் செஞ்சா உங்க மின்னஞ்சல் அந்த பட்டியலுக்கு மாறிடும்.

கூகிள் டிரைவ்

இந்த வசதி ரொம்ப பயனுள்ள வசதி.இப்போ பொதுவா ஜிமெயில்ல ஒரு மின்னஞ்சல்ல Attachement வசதியில 25MB மட்டும் தான் இணைத்து அனுப்ப முடியும்.அதுக்கும் மேல /பெரிய ஃபைல் அனுப்பனும்னா அதை கூகிள் டிரைவ்க்கு மாத்திக்கிட்டு அந்த டிரைவ்ல இருந்து அந்த ஃபைலை ஷேர் பண்ணிக்கலாம்.கூகிள் டிரைவ் போல்டர் உருவாக்கி அங்க ஃபைல்களை சேமிக்கலாம்.அங்க இருந்து அதை  மின்னஞ்சல் அனுப்பலாம் .இப்படி பல வசதிகள் இருக்கு.

வியாழன், 6 பிப்ரவரி, 2014

புதன், 5 பிப்ரவரி, 2014

புகைப்படக்கருவி காதலர்- கேமரா சேகர்

கேமரா சேகர் -இவர் ஒரு புகைப்படக்கருவி காதலர்  ..எதனால இப்படி இவரை சொல்றாங்கனு படிச்சப்போ ஆச்சர்யமா இருந்தது..

இவர்கிட்ட 4500 வகையான புகைப்பட பதிவுக்கருவிகள் இருக்காம்..இவர் கிட்ட இருக்குற ஒரு புகைப்படக்கருவிக்கு வயசு 160 இதுல என்ன ஆச்சயம்னா அந்த கருவி இன்னும் இயங்குற நிலையிலதான்  இருக்கு.

மகாத்மா காந்தியை புகைப்படம் எடுத்த ஜெர்மன் கேமராவும் இவர்கிட்ட இருக்காம் அதுவும் இயங்குற நிலையிலதான்  இருக்காம்.

16 மில்லி மீட்டர் அசையும் புகைப்படக் கருவியில எடுக்கப்பட்ட இந்திய-சீன படக்குறிப்பு இப்பவும் இவர்கிட்ட இருக்காம்.

எப்படியாப்பட்ட கேமராவுல பழுது ஏற்பட்டாலும் அதை சரி செய்யுறதுக்கான அத்தனை கருவிகளும் இவர்கிட்ட இருக்காம்.அழகா சரி பண்ணிக் குடுக்குறாராம்.

BBC நிறுவனம் உலகத்துல வேற யார்கிட்டயும் இல்லாத அரியவகை புகைப்படக்கருவிகள் இவர்கிட்ட இருக்குறதா சான்று அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படக்கருவியில ஆர்வம் இருக்குற மாணவர்களுக்கு கட்டணம் எதுவும் எதிர்பார்க்காம கத்துக் கொடுக்குறாராம்.

இவரோட ஆசை என்ன தெரியுமா?தன் கிட்ட இருக்குற கேமராக்களை எல்லாரும் பார்க்குற வகைல அருங்காட்சியகம் அமைக்கணும்ங்குறதுதானாம்.அதுக்காக இவர் அரசாங்கத்தோட உதவியை மட்டும் நாடியிருக்கார்..அரசாங்கம் உதவி செஞ்சா நல்ல இருக்கும்..வேற நாடா இருந்தா ஊக்கப்படுதியிருப்பாங்க.



நன்றி தமிழ் கம்ப்யூட்டர்





செவ்வாய், 4 பிப்ரவரி, 2014

தயவுசெஞ்சு மனசை காயப்படுத்தாதீங்க ....


சஞ்சீவும்  ஷர்மியும் கணவன் மனைவி..சஞ்சீவ்க்கு சினிமானா ரொம்ப பிடிக்கும் .ரொம்ப பிடிச்ச நடிகர்னு குறிப்பிட்டு சொல்ல முடியாது .நல்ல கதை அம்சம் இருந்தா ரொம்ப பாராட்டுவார்.  அந்த படத்தை பத்தி மனைவி ஷர்மிகிட்ட பேசிக்கிட்டே இருப்பார் .

ஷர்மிக்கும் சினிமா பாக்குறதுனா ரொம்ப பிடிக்கும்  படிக்குற காலத்துல இருந்தே.ஒரு படம் பாத்தா அதை பத்தி ஃப்ரண்ட்ஸ் கூட நிறையா டிஸ்கஸ் பண்ணுவா .

சஞ்சீவுக்கு நடிகைகளையும்  ரொம்ப பிடிக்கும்..ஒரு கட்டத்துல சினிவாவுல அந்த நடிகைகள் கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு நடிக்குறதை ஆடுறதை பாடுறதை பாத்து மனைவி ஷர்மியை ரொம்ப டீஸ் பண்ண ஆரம்பிச்சார்..படத்துல இருக்குற நடிகை மாதிரி உன் உடல்வாகு இல்ல அந்த நடிகை மாதிரி அழகில்ல ,அந்த நடிகைமாதிரி அது இல்ல அந்த நடிகை மாதிரி இது இல்லன்னு தினம் தினம் அவரோட டீஸ் அதிகமாகிட்டே இருந்தது..

திங்கள், 3 பிப்ரவரி, 2014

வாடிக்கையாளர்களை ஏமாற்றும் DTH சேவைகள்


கேபிள் கனக்ஷன்ல மட்டும் இருந்தப்போ நிம்மதியா இருந்தோம்  , கேபிள் சரியா எடுக்கல வேலை செய்யலனு சொன்னா உடனே வந்து பாப்பாங்க சரி பண்ணுவாங்க...

எல்லா கேபிள்களும்   DTH சேவைக்கு மாறணும்னு சொன்னதும் , தெளிவா சேன்னல்களை பாக்க முடியலையே இதுக்கு நாமே நேரடியா  DTH சேவை இணைப்பை வாங்கிடலாம்னு முடிவு செஞ்சுதான் அனேகபேர்   DTH சேவைக்கு மாறுறாங்க ...

DTH சேவைக்கு மாறிட்டு ,படுற அவஸ்தை இருக்கே.....ஐய்யயயயயயயோ ...முடியல....

1.1500 ரூபாய் குடுத்து டிஷ் வாங்கிவச்சது மட்டும் இல்லாம , அதுக்கு மாசா மாசம் ரீசார்ஜ் 

2.கொஞ்சம் வேகமா காத்தடிச்சா எடுக்காது 

பாடலின் வரிகள் - வெண்மேகம் - யாரடி நீ மோகினி

படம் : யாரடி நீ மோகினி 
பாடல் : வெண்மேகம் 
பாடியவர்கள் :  கார்த்திக் 
பாடலாசிரியர் : நா முத்துக்குமார் 
இசை:  யுவன் ஷங்கர் ராஜா 



வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னால் என்ன
பார்வை ஒரு பார்வை பார்த்தால் என்ன
உன்னாலே பல ஞாபகம்
என் முன்னே வந்தாடுதே
ஓர் நெஞ்சம் திண்டாடுதே

வெண்மேகம் பெண்ணாக உருவானதோ
இந்நேரம் எனைப் பார்த்து விளையாடுதோ

சனி, 1 பிப்ரவரி, 2014

மின் கட்டணம் கணக்கிடும் முறை

மின் கட்டணம் கணக்கிடும் முறை நாம் தெரிந்து கொள்ளவேண்டிய ஓன்று !!

வீட்டு இணைப்புகளுக்கானது:-


முதல் நிலை:-

1-100 யூனிட் வரை ரூபாய் 1.00
நிலைக்கட்டணம் இல்லை.
(நீங்கள் 100 யூனிட்டுக்குள் எவ்வளவு உபயோகித்தாலும் ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் மட்டும் தான். கூடுதலாக எந்த கட்டணமும் இல்லை.)

இரண்டாம் நிலை:-

1-200 யூனிட் வரை ரூபாய் 1.50.
நிலைக்கட்டணம் ரூபாய் 20.00.
(நீங்கள் 100 யூனிட்டுக்கு மேல் உபயோகிக்கும் சமயம் இந்த இரண்டாம் நிலைக்கு வந்துவிடுவீர்கள்.
நீங்கள் 110 யூனிட் உபயோகித்தால் உங்களுக்கான தொகை 165.00 + நிலைக்கட்டணம் ரூ.20.00 ஆகமொத்தம் ரூபாய் 185.00 செலுத்தவேண்டும்.)