பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

செவ்வாய், 11 பிப்ரவரி, 2014

பிட் காயின்

மொபைல் வாலட் எனப்படும் செல் பேசி வழியா பணத்தை பரிமாறிக்கொள்ளும் வசதி இப்போ நடைமுறைல வந்துக்கிட்டு இருக்கு.இதுக்கு பிட் காயின் அப்படீங்குறது ஒரு எண்ம நாணயம்(Digital Currency). Cryptography -னு சொல்லப்படுற ரகசிய குறியியல் முறையை பயன்படுத்தி Peer to Peer (சரியினை வலைப்பின்னல்) மூலமா இந்த நாணயத்துக்கான மென்பொருள் உருவாக்கப்பட்டுருக்கு.இதை உருவாக்கியவர் ஜப்பான் நாட்டை சேர்ந்த 'சடோஷி நகமோட்டா'.

இந்த முறையோட Advantage என்ன தெரியுமா?

1.ரொம்ப பாதுகாப்பானது.

2. ஆன்லைன் திருட்டுக்களை கட்டுப்படுத்தமுடியும்.

3. இந்த முறையில் பெறப்படும் பிட் காயினை ஒருத்தர் ஒருதடவைதான் பயன்படுத்த முடியும்..



4. வேற ஒருத்தருக்கு தரும்போது அவர் கணக்குக்கு போனதும் இந்த பிட் காயின் மதிப்பு Expire ஆகிடும்.

5. இப்போ மத்த முறையில எதோ ஒரு அமைப்போ அல்லது வங்கியோ அல்லது நிறுவனத்தோட கட்டுபாட்டுளையோ தான் நடக்கும்.ஆனா இந்த முறை அப்படி இல்ல..இது முற்றிலும் திறமூல முறையில (Open Source) இயங்குது.

6. பிட் காயின் நாணய மதிப்பை எந்த நாடும் அல்லது அரசாங்கமும் மாத்த முடியாது.

7. பிட் காயினை கணினியிலோ அல்லது வலைதளத்திலோ சேமித்து வைக்க முடியும்.

8. யார்வேணும்னாலும் ரொம்ப எளிதா பிட் காயின் கணக்குதுவங்கலாம் .

9 .பிட் காயின் முறையில பரிவர்த்தனை நடக்க எந்த கட்டணனும் கிடையாது.கமிஷன் மட்டும் இருக்கு ஆனா அதுகூட ரொம்ப குறைவான அளவுதான்.

கனடால  வான்கூர் நகர்ல உலகத்துல இருக்குற எந்த அங்கீகரிக்கப்பட்ட பணத்தாளையும் பிட் காயினா மாத்தி கொடுக்குற  ATM  இயந்திரம் நிறுவப்பட்டுருக்காம்.பொது பயன்பாட்டுக்காக நிறுவப்பட்டுருக்கும் முதல் ATM  இயந்திரம்  இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நாணயத்துக்கு சட்டரீதியான அங்கீகாரத்தை ஜெர்மனி அரசு வழங்கிருக்கு .

3 கருத்துகள்:

  1. இதைப் பற்றி இன்னும் கொஞ்சம் விளக்கினால் நன்றாக இருக்குமே. ஏன் பிட் காயின் உபயோகிக்க வேண்டும். அதை நம் காசாக்குவது எப்படி என்று நிறைய நிறைய சந்தேகங்கள் வருகிறது. இதைப்பற்றி ஒரு வார இதழில் படித்த நினைவுள்ளளது. ஆனால் சரியாக விளங்கவில்லை. விரிவான பதிவாய், உதாரணத்துடன் எழுதினால், என்னைப் போன்ற வாசகர்களுக்கு புரியும் என்று நம்புகிறேன். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்

    1. இந்த லிங்க் பாருங்க மேடம் ..உதாரணத்தோட இருக்கு..புரியலைனா சொல்லுங்க நானும் சொல்றேன்.

      http://www.nilavaram.com/sport/sport-news/general/25202-2013-12-11-02-59-11

      நீக்கு
    2. Thankyou for giving me the link. If need be I shall seek your help in this regard.

      நீக்கு