பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 12 பிப்ரவரி, 2014

ஆஆஆஆ..கரப்பான் பூச்சி....


ஆஆஆஆ..கரப்பான் பூச்சி.... இப்படி கரப்பான் பூச்சியை பாத்து நிறையா பேர் பயப்படுவாங்க..அத பாத்தாலே என்னவோ அனகோன்டாவை பாத்த மாதிரி அலறி அடிச்சுக்கிட்டு ஓடுவாங்க...அப்படியாபட்டவங்களுக்கு இந்த போஸ்ட் ரொம்ப ரொம்ப உபயோகமா இருக்கும்னு நினைக்குறேன்...

வீட்ல கரப்பான் பூச்சி வராம தடுக்க சில வழிகளை படிச்சேன்..அதை உங்ககூட பகிர்ந்துக்கிறேன்..

-> பொதுவா பாத்திரம் கழுவுற இடத்துல தான் கரப்பான் பூச்சிகள் உருவாகுற முதல் இடமா இருக்கும்.தண்ணிகூட அமோனியாவ கலந்து பாத்திரம் கழுவுற இடத்த சுத்தம் பண்ணினா கரப்பான் பூச்சிகள் உருவாகுறத தடுக்கலாம்.

->அமொனியாவுக்கு பதில் சோப்பு தண்ணீர தெளிக்குறதால கூட கரப்பான் பூச்சிகள் வராம தடுக்கலாம்.

->வெள்ளரிக்காயோட தோலை ஒரு அலுமினியப் பாத்திரத்துல போட்டுவச்சா அதுல இருந்து வர வாசனை கரப்பான் பூச்சி வருவதை தடுக்குமாம்..

->மூணு தேக்கரண்டி பேக்கிங் சோடா மூணு தேக்கரண்டி சக்கரை கலந்து கரப்பான் பூச்சிகள் வரும் இடத்துல தூவினா சக்கரை சாப்பிட வரும் கள் அதுல கலந்துருக்குற பேக்கிங் சோடாவை கரப்பான் பூச்சிகள் சாப்பிட்டு இறந்திடுமாம்.

->சமையலுக்கு பயன்படுத்தும் பிரியாணி இலையை பொடி செஞ்சு கரப்பான் பூச்சிகள் வரும் இடத்துல தூவினா பிரியாணி இலையோட வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராதாம்.அப்படியே வந்தாலும் அந்த பொடியை சாப்பிட்டு இறந்திடுமாம்.

                                                      ---நன்றி நாளிதழ்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக