நமக்கு தூக்கம் ஏன் வருது, எப்படி வருதுனுதெரியுமா? நம்ம மூளையில ஹைப்போதலாமஸ்னு ஓர் இடம் இருக்கு அதன் முன் புறத்தில் VLPO ( Ventrolateral Preoptic Nucleus)னு ஒரு ஏரியா இந்த VLPO-வை சில நரம்புகளின் செயல்களும் ஹார்மோன்களின் விளைவுகளும் இயக்குது . தூக்கம் வர்ற நேரத்தில இந்த VLPO கபா (GAPA) னு ஒரு ஹார்மோனை சுரக்குது . இந்தக் கபாவோட வேலையே நம்மைத் தூங்க வைக்கிறதுதானாம் .
நம்ம உடல்ல ‘பாடி கிளாக்’னு ஒரு கடிகாரம் இருக்கு இரவு வந்த உடனே, நம்ப புலன்களுக்கு (பார்வை, ஒலி, சுவை போன்றவைகளுக்கு) அது ஷட்டர் போட ஆரம்பிச்சிரும். இது எதையுமே உணர முடியாத நிலையில் VLPO சுறுசுறுப்பாகி கபாவை சுரந்திடுமாம். அது சுரந்தால் தூக்கம் வருமாம் .
அதே மாதிரி நமக்கு பிடிக்காத சமயத்துல ஸ்கூல் இல்ல காலேஜ்ல பிடிக்காத சப்ஜெக்ட் எடுக்கும் போது உங்கள் புலன்களை ஷட்டவுன் பண்றீங்க. உடனே VLPO அதை ‘தப்பா’ புரிஞ்சிக்கிட்டு கபாவை சுரக்குது... தூக்கம் வருது.
----நன்றி வார இதழ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக