பக்கங்கள் (Pages)

புதன், 5 பிப்ரவரி, 2014

புகைப்படக்கருவி காதலர்- கேமரா சேகர்

கேமரா சேகர் -இவர் ஒரு புகைப்படக்கருவி காதலர்  ..எதனால இப்படி இவரை சொல்றாங்கனு படிச்சப்போ ஆச்சர்யமா இருந்தது..

இவர்கிட்ட 4500 வகையான புகைப்பட பதிவுக்கருவிகள் இருக்காம்..இவர் கிட்ட இருக்குற ஒரு புகைப்படக்கருவிக்கு வயசு 160 இதுல என்ன ஆச்சயம்னா அந்த கருவி இன்னும் இயங்குற நிலையிலதான்  இருக்கு.

மகாத்மா காந்தியை புகைப்படம் எடுத்த ஜெர்மன் கேமராவும் இவர்கிட்ட இருக்காம் அதுவும் இயங்குற நிலையிலதான்  இருக்காம்.

16 மில்லி மீட்டர் அசையும் புகைப்படக் கருவியில எடுக்கப்பட்ட இந்திய-சீன படக்குறிப்பு இப்பவும் இவர்கிட்ட இருக்காம்.

எப்படியாப்பட்ட கேமராவுல பழுது ஏற்பட்டாலும் அதை சரி செய்யுறதுக்கான அத்தனை கருவிகளும் இவர்கிட்ட இருக்காம்.அழகா சரி பண்ணிக் குடுக்குறாராம்.

BBC நிறுவனம் உலகத்துல வேற யார்கிட்டயும் இல்லாத அரியவகை புகைப்படக்கருவிகள் இவர்கிட்ட இருக்குறதா சான்று அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

புகைப்படக்கருவியில ஆர்வம் இருக்குற மாணவர்களுக்கு கட்டணம் எதுவும் எதிர்பார்க்காம கத்துக் கொடுக்குறாராம்.

இவரோட ஆசை என்ன தெரியுமா?தன் கிட்ட இருக்குற கேமராக்களை எல்லாரும் பார்க்குற வகைல அருங்காட்சியகம் அமைக்கணும்ங்குறதுதானாம்.அதுக்காக இவர் அரசாங்கத்தோட உதவியை மட்டும் நாடியிருக்கார்..அரசாங்கம் உதவி செஞ்சா நல்ல இருக்கும்..வேற நாடா இருந்தா ஊக்கப்படுதியிருப்பாங்க.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக