பக்கங்கள் (Pages)

வியாழன், 27 மார்ச், 2014

குளு குளு பேருந்து நிறுத்தம்

வெயில் மண்டையைப் பிளக்கிறது. இதில் மிகவும் பரிதாபத்துக்குரியவர்கள் பேருந்து நிறுத்தத்தில் கொளுத்தும் வெயிலில் காத்திருக்கும் பயணிகள்தான். இந்நிலையில் இந்தியாவிலேயே முதல்முறையாக குளிர்சாதன வசதிகொண்ட பேருந்து நிறுத்தத்தை நிறுவியுள்ளது கும்பகோணம் நகராட்சி.

கும்பகோணம் நான்குவழிச் சாலையின் மயிலாடுதுறை மார்க்கத்தில் இந்த ஏ.சி. வசதி கொண்ட பேருந்து நிறுத்தம் அமைக்கப்பட்டுள்ளது. சிட்டி யூனியன் வங்கி மற்றும் கும்பகோணம் நகராட்சி இணைந்து இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தியுள்ளன.

இந்தப் பேருந்து நிறுத்தத்தில் ஏ.டி.எம். இயந்திரம், ஒரு ரூபாய் பொதுத்தொலைபேசி, தொலைக்காட்சி வசதி, கேமரா வசதி ஆகியவையும் உள்ளன.

இந்த வசதி, முழுக்க முழுக்க இலவசமாக மக்களுக்கு ஏற்படுத்தித் தரப்பட்டுள்ளது. இந்தப் பேருந்து நிறுத்தத்தில் விரைவில் கழிப்பறை வசதி, தானியங்கி தேநீர் எந்திரம் ஆகியவை அமைக்கும் திட்டமும் உள்ளது. இந்த ஏ.சி. பேருந்து நிறுத்தத்தில் மின்சாரம் இல்லாத நேரத்தில், இப்போது ஜெனரேட்டர் மூலமாக மின்விசிறி இயக்கப்படுகிறது. இனி வரும் காலங்களில் இந்தப் பேருந்து நிறுத்தங்களை சோலார் மூலமாக இயக்கும் திட்டமும் உள்ளது. இங்கு ரகசிய கேமரா பொருத்தப்பட்டு, அது காவல்துறைக்கும் நகராட்சிக்கும் இணைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்தப் பேருந்து நிறுத்தத்தை சுகாதாரமாகப் பயன்படுத்தி, இந்தத் திட்டத்திற்கு ஆதரவு தரவேண்டும்" என்கிறார், நகராட்சி ஆணையர் கலைச்செல்வன்.

                                             --- ஒரு வார இதழில் இருந்து...

2 கருத்துகள்: